சந்திமால் நீக்கப்பட்டமைக்கு ஜயசூரியவை விமர்சித்த அர்ஜுன ரணதுங்க

5151

ஜிம்பாப்வேயுடனான முதல் மூன்று போட்டிகளுக்குமான இலங்கை அணியில் இருந்து தினேஷ் சந்திமால் நீக்கப்பட்டமை குறித்து, உலகக் கிண்ணத்தை இலங்கைக்கு வென்று தந்த முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க, இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவின் தலைவர் சனத் ஜயசூரியவை விமர்சித்துள்ளார்.  

முதல் இரு ஒரு நாள் போட்டிகளுக்குமான அணியில் இடம் கிடைக்காத சந்திமாலுக்கு முன்றாவது போட்டியில் இருந்து வாய்ப்பு வழங்குவதற்கு தேர்வாளர்கள் உறுதி அளித்தபோதும் அது நிகழவில்லை.

பங்களாதேஷ் பரீமியர் லீக் தொடரில் களமிறங்கவுள்ள நிரோஷன் திக்வெல்ல

இலங்கை அணியின் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான, நிரோஷன் திக்வெல்ல ஐந்தாவது தடவையாக …

இது குறித்து கிரிக்பஸ் செய்தித் தளத்திற்கு பேட்டி அளித்த அர்ஜுன ரணதுங்க, ‘மஹேல (ஜயவர்தன) மற்றும் குமார் (சங்கக்கார) வுக்கு பின் லஹுரு திரிமான்ன மற்றும் தினேஷ் சந்திமாலையே சிறந்த வீரர்களாக நான் பார்த்தேன்.  தேர்வாளர்கள் ஏற்கனவே ஒருவரை ஒழித்து விட்டார்கள். மற்றொருவரை ஒழிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறனர். இயற்கையான திறமையை அழிக்க வேண்டாம் என்று நான் அவர்களை  வலியுறுத்துகிறேன். நாம் எமது திறமைகளை மோசமாகக் கையாள்வதாலேயே தடுமாறி வருகிறோம்’ என்று தெரிவித்தார்.

கடந்த ஆண்டு மே மாதம் நியமிக்கப்பட்ட ஜயசூரிய தலைமையிலான தேர்வுக்குழுவின் பதவிக்காலம், இரண்டு தினங்களுக்கு முன் 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது.

இவ்வாறான ஒரு நிலையில், மார்வன் அத்தபத்து மற்றும் ஜனசூரியவை எடுத்துக் கொண்டால்கூட அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் சோபிக்க காலம் எடுத்துக் கொண்டார்கள். எனவே பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என ரணதுங்க வலியுறுத்தினார்.

‘இந்த இளம் வீரர்கள் பாதுகாக்கப்பட வேண்டி உள்ளனர். மார்வன் அத்தபத்து தனது முதல் ஆறு இன்னிங்ஸ்களில் ஐந்து முறை டக் அவுட் ஆனார். எனினும் அவரிடம் திறமை இருப்பது தெரிந்து நாம் ஊக்குவிப்பு அளித்தோம். இறுதியில் அவர் என்ன சாதனையை எட்டினார் என்பது தெரியும். அவர் நான் பெற்றதை விடவும் அதிகமாக, 5,500 டெஸ்ட் ஓட்டங்களை அடைந்தார்’ என்று ரணதுங்க தெரிவித்தார்.

‘சனத் ஜயசூரிய தனது முதல் 55 ஒருநாள் போட்டிகளிலும் ஒரே ஒரு அரைச் சதத்தை தான் பெற்றார். அவரை அணியில் இருந்து நீக்க எமக்கு அழுத்தங்கள் வந்தன. என்றாலும் அவர் அனுபவம் அடையும்போது திறமையை வெளிப்படுத்துவார் என்று தெரிந்து நாம் அவரை பாதுகாத்தோம். அவர் பல உலக சாதனைகளையும் முறியடித்தார். நாம் அவர் மீது காட்டிய பொறுமையை சனத் காட்டாமை பற்றி நான் கவலை அடைகிறேன்’ என்று ரணதுங்க மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்த கிரிக்கெட் வீரர்களுக்கு என்ன நடந்தது?

கடந்த காலங்களில் இலங்கை கிரிக்கெட் அணி சார்பாக பல்வேறுபட்ட திறமைகள் …

கடந்த 2011 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் ஜயசூரிய தேர்வுக்குழுத் தலைவராக செயற்படுகின்றார். அவரது பதவிக் காலம் ஆரம்பமாகி தற்பொழுது நான்கு ஆண்டுகள் நெருங்குகின்றன. இலங்கை அணியின் தற்போதைய நெருக்கடியான நிலைக்கு ஜயசூரிய மீதே ரணதுங்க குற்றம் சுமத்துகிறார். இளம் வீரர்களுக்கு போதிய அவகாசம் வழங்கப்படவில்லை என்று அவர் நம்புகிறார்.

‘இளம் வீரர்களை பாதுகாத்து எதிர்கால அணியை கட்டி எழுப்புவதில் சனத் தோல்வியுற்று இருப்பது குறித்து நான் அதிருப்தி அடைந்துள்ளேன். சிறப்பான திறமைகள் மிக அரிதானது. சனத் இந்த சிறப்பான திறமைகளை அழிப்பதை நிறுத்த வேண்டும். சந்திமால் தனது வயதில் மிக சிறப்பாக செயற்படுகிறார். 27 வயதில் அவர் நான்கு ஒரு நாள் சதங்களை பெற்றிருக்கிறார். இது குமார் சங்கக்கார அல்லது  அரவிந்த டி சில்வா இந்த வயதில் பெற்றதை விடவும் அதிகமாகும். சம்பியன்ஸ் கிண்ணம் அவருக்கு மோசமாக இருந்தபோதும் அலட்சியம் செய்வதை விடவும் அவர் சிறந்த வீரராவார்’ என்று ஜயசூரியவின் முதல் தலைவரான ரணதுங்க சுட்டிக்காட்டினார்.

இந்த விடயம் குறித்து மேலும் கருத்து தெரிவித்த அர்ஜுன ரணதுங்க, ‘தற்போதைய ஜிம்பாப்வே தொடர், சந்திமால் தனது திறமைக்கு வருவதற்கு சிறந்த ஒரு போட்டியாக உள்ளது. அவர்கள் சந்திமாலை நான்காவது, ஐந்தாவது, ஆறாவது என அனைத்து வரிசையிலும் துடுப்பெடுத்தாட வைக்கிறார்கள். ஸ்திரமான ஓர் இடத்தை பெற விட்டு விட்டால் அபாரமான வீரராக வருவார்.’

‘எனது காலத்தில் துலீப் (மெண்டிஸ்) மற்றும் ரோய் (டயஸ்) போன்ற வீரர்கள் பின்வரிசையில் இறங்கி, அரவின்த (டி சில்வா) மற்றும் எனக்கு முன் வரிசையில் இடம் வழங்கியதாலேயே என்னால் பொறுப்புகளை ஏற்க  முடிந்தது. அது எமக்கு வாழ்வை இலகுவாக்கியது. மஹேல மற்றும் சங்கா வந்தபோது நாங்கள் அதையே செய்தோம். துரதிஷ்டவசமாக அந்த வழக்கம் தொடரவில்லை. சங்கா எப்போதும் மூன்றாவது வரிசையில் துடுப்பெடுத்தாடியதோடு மஹேல நான்காவது வரிசையில் ஆடினார்’ என்றும் ரணதுங்க கூறினார்.

Source: Cricbuzz.com