பங்களாதேஷ் பரீமியர் லீக் தொடரில் களமிறங்கவுள்ள நிரோஷன் திக்வெல்ல

1342
niroshan dickwella

இலங்கை அணியின் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான, நிரோஷன் திக்வெல்ல ஐந்தாவது தடவையாக நடைபெறவிருக்கும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) தொடரில், டாக்கா டைனமைட்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கின்றார்.

குமார் சங்கக்கார அங்கம் வகிக்கும் டாக்கா டைனமைட்ஸ் அணியின் முகாமைத்துவம், திக்வெல்ல தமக்காக விளையாட ஒப்பந்தமாகியிருக்கின்றார் என்பதனை கடந்த செவ்வாய்க்கிழமை (4) ஊர்ஜிதம் செய்திருந்தது. இதனால், திக்வெல்ல இந்த பருவகாலத்திற்கான தொடரில் குமார் சங்கக்காரவுடன் இணைந்து விளையாடும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார்.

மீண்டும் ஒரு நாள் குழாத்தில் வாய்ப்பைப் பெற்ற குலசேகர, லஹிறு குமார

ஹம்பாந்தோட்டை நகரில் நடைபெறவிருக்கும் ஜிம்பாப்வே அணியுடனான மீதமாகவுள்ள…

இலங்கை அணியின் அசேல குணரத்னவையும் கடந்த மாதம் தமக்காக ஒப்பந்தம் செய்திருந்த டாக்கா டைனமைட்ஸ் அணி, சஹீட் அப்ரிடி, சேன் வொட்சன், சுனீல் நரேன், மொஹமட் அமீர், ஈவின்  லூயிஸ் மற்றும் ரோவ்மன் பவல் ஆகிய வெளிநாட்டு வீரர்களையும் உள்ளடக்கியிருக்கின்றது.

24 வயதாகும் திக்வெல்ல, மூன்று வகையான கிரிக்கெட்  போட்டிகளிலும் இலங்கை அணியினை பிரதிநிதித்துவப்படுத்திருக்கின்றார். தற்போது  ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஒரு நாள் தொடரில் பங்கேற்று வரும் அவர், இதுவரை 8 T20 சர்வதேச போட்டிகளில் விளையாடி அப்போட்டிகளின் மூலம் 26 என்கிற ஓட்ட சராசரியினை பெற்றுக்கொண்டுள்ளார்.

அதோடு, விரைவாக துடுப்பாடும் ஆற்றல் கொண்ட வீரர்களில் ஒருவரான திக்வெல்ல 150 ஐ அண்மித்த  நூற்றுவீத சராசரியினைக் (Strike Rate) கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.