ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியுடன் இணையும் தப்ரைஸ் ஷம்சி

Indian Premier League - 2021

134
Getty Image

இந்த வருடத்திற்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் இரண்டாம் கட்டத்திற்காக உலக T20 பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் தென்னாபிரிக்க வீரர் தப்ரைஸ் ஷம்சியை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.  

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து வீரர்களான பென் ஸ்டோக்ஸ், ஜொப்ரா ஆர்ச்சர், ஜோஸ் பட்லர், அவுஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் அண்ட்ரூ டை ஆகியோர் அடுத்த மாதம் 19ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகவுள்ள எஞ்சிய IPL போட்டிகளில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளனர்

RCB அணியில் வனிந்து ஹஸரங்கவுடன் இணையும் சமீர

ராஜஸ்தான் அணியில் ஜோஸ் பட்லர் விலகியதால், அவருக்குப் பதிலாக நியூசிலாந்து அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் கிளென் பிலிப்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அவுஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் அண்ட்ரூ டைக்கு மாற்று வீரராக தென்னாபிரிக்காவின் இடதுகை சுழல்பந்துவீச்சாளர் தப்ரைஸ் ஷம்சி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்

31 வயதான ஷம்சி, சர்வதேச T20 பந்துவீச்சாளர் தரவரிசையில் தற்போது முதலிடத்தில் உள்ளார். இதுவரை 39 T20 போட்டிகளில் விளையாடி 45 விக்கெட்டுக்களை வீழ்த்தி உள்ளார்

தப்ரைஸ் ஷம்சி ஏற்கனவே 2016ஆம் ஆண்டில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணிக்காக விளையாடி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…