டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியின் ஆரம்பம் எப்படி இருந்தது?

1544

கிரிக்கெட் விளையாடும் நாடுகளுக்கு கிரிக்கெட் விளையாட்டின் மிகச் சிறந்த வகைப் போட்டிகளான டெஸ்ட் போட்டிகளில் ஆடும் வாய்ப்பினை பெறுவது கனவாக இருக்கும். இந்த வாய்ப்பினை கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தான் அணியும், அயர்லாந்து அணியும் ஐ.சி.சி. இன் முழு அங்கத்தவர்களாக மாறியதன் மூலம் பெற்றுக் கொண்டது. இவ்விரண்டு அணிகளும் தம்முடைய கன்னி டெஸ்ட் போட்டிகளில் எதிர்வரும் நாட்களில் விளையாடவிருக்கின்றன.

மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடருக்கான உத்தேச இலங்கை குழாம் அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட …

இந்நிலையில், டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் கனவுடன் நீண்ட காலங்கள் இருந்த அணிகளில் ஒன்றான இலங்கையின் டெஸ்ட வரலாற்றினை ஒரு முறை புரட்டிப் பார்ப்போம்.

டெஸ்ட் அந்தஸ்து

கடந்த 1981 ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் .சி.சி. இன் முழு அங்கத்தவராக மாறியதன் மூலம் இலங்கை அணி டெஸ்ட் போட்டிகளுக்கான  அந்தஸ்தினை பெற்றுக் கொண்டதுடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் 7 ஆவது நாடாகவும் மாறியது. இதன் பின்னர், இலங்கை அணி 1982 ஆம் ஆண்டு தமது கன்னி டெஸ்ட் போட்டியில் விளையாடியது.  

முதல் டெஸ்ட் போட்டி

இலங்கை எதிர் இங்கிலாந்து (பெப்ரவரி 17-21, 1982)

இடம் – P. சரவணமுத்து மைதானம், கொழும்பு

முடிவுஇங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி

ஆட்ட நாயகன்ஜோன் எம்புரே (இங்கிலாந்து)

முதல் டெஸ்ட் போட்டியின் கதை

சர்வதேச கிரிக்கெட்டுக்குள் கத்துக் குட்டிகளாக பிரவேசித்த இலங்கை அணிக்கு .சி.சி. இன் முழு அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்ள (டெஸ்ட் போட்டிகளில் ஆட)  மிக நீண்ட காலம் காத்திருக்க வேண்டி ஏற்பட்டது. விளக்கமாக கூறினால், இலங்கை அணி தமது நாட்டில் முதல்தரக் கிரிக்கெட் கழகம் ஒன்று அமைக்கப்பட்டு 150 ஆண்டுகளின் பின்னரே .சி.சி. இன் முழு அங்கத்துவத்தினைப் பெற்றுக் கொண்டது.

.சி.சி. இன் முழு அங்கத்துவராக மாறிய பின்னர் மிகவும் பலம் வாய்ந்த அணியாக வலம் வந்த இங்கிலாந்துடன் ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் (பந்துல வர்ணபுர தலைமையில்) முதல்தடவையாக விளையாடும் சந்தர்ப்பம் இலங்கை அணிக்கு கிடைத்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்த இலங்கை அணி, தமது முதல் விக்கெட்டாக இலங்கை அணியின் தலைவரை இழந்தது. இலங்கையின் தலைவரான வர்ணபுர, போப் வில்லிஸின் பந்தில் கல்லி திசையில் இருந்த டேவிட் கோவேர் இடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் இலங்கை அணியின் முதல் டெஸ்ட் விக்கெட்டாக ஆட்டமிழந்த வீரராக வர்ணபுர மாறினார்.

எனினும் இலங்கை அணி அப்போதைய நாட்களில் 1,000 இற்கும் மேலான டெஸ்ட்  விக்கெட்டுகளை கைப்பற்றிய (மூவரும் இணைந்து) அனுபவம் கொண்ட வில்லிஸ், இயன் போத்தம் மற்றும் டெரெக் அண்டர்வூட் ஆகியோரின் பந்து வீச்சினை தாண்டி 218 ஓட்டங்களை முதல் இன்னிங்சுக்காக குவித்தது. இதில் ரஞ்சன் மடுகல்ல மற்றும் அர்ஜுன ரணதுங்க ஆகியோர் அரைச்சதம் விளாசியிருந்ததோடு, ஐந்தாம் விக்கெட் இணைப்பாட்டமாக 99 ஓட்டங்களினையும் பகிர்ந்திருந்தனர்.

Ranatunga
இலங்கையின் முதல் போட்டியில் அரைச்சதம் கடந்த அர்ஜுன ரணதுங்க

பின்னர் தமது முதல் இன்னிங்சினை ஆரம்பித்த இங்கிலாந்து அணியினை தனது அதீத வேகத்தினால் இலங்கையின் அஷந்த டி மெல் மிரட்ட, பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியினால் முதல் இன்னிங்சில் வெறும் ஐந்து ஓட்டங்களினாலேயே இலங்கையினை விட முன்னிலை வகிக்க முடிந்தது.  இங்கிலாந்தின் முதல் இன்னிங்சில் அஷந்த டி மெல் இலங்கையின் முதல் டெஸ்ட் விக்கெட்டோடு சேர்த்து மொத்தமாக 4  விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.   

ஜனநாயக முறையில் இலங்கை கிரிக்கெட் தேர்தல் நடைபெறும் – அமைச்சர் பைஸர்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலை, இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் நடத்துவதற்கு தேவையான சட்ட ஆலோசனைகளை சட்டமா அதிபரிடம் இருந்து…

கத்துக்குட்டிகளாக இருந்து மிகச் சிறப்பான ஆட்டத்தினை காட்டிய இலங்கை அணியினர் இரண்டாம் இன்னிங்சிலும் நல்ல முறையில் செயற்பட்ட போதிலும், துரதிஷ்டவசமாக இறுதி 7 விக்கெட்டுக்களையும் வெறும் 8 ஓட்டங்களுக்கு பறிகொடுத்து 175 ஓட்டங்களுடன் சுருண்டனர். இதில் ஜோன் எம்புரே இலங்கையின் 6 விக்கெட்டுக்களை வெறும் 33 ஓட்டங்களுக்கு கைப்பற்றியிருந்தார்.

பின்னர், போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டிருந்த 171 ஓட்டங்களினை இங்கிலாந்தின் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் இலகுவான முறையில் எட்டினர்.

இலங்கையின் முதல் டெஸ்ட் வெற்றி

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது, இலங்கை தமது முதல் டெஸ்ட் வெற்றியினை குறுகிய கால இடைவெளிக்குள் பெற்றிருந்தது.

தம்முடைய 14 ஆவது டெஸ்ட் போட்டியில் 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவினை எதிர்கொண்டிருந்த (துலீப் மெண்டிஸ் தலைமையிலான) இலங்கை அணியினர் கொழும்பில் இடம்பெற்ற போட்டியில் 149 ஓட்டங்களால் தமது அண்டை நாட்டினை வீழ்த்தி, டெஸ்ட் போட்டிகளில் தமது முதல் வெற்றியினைப் பதிவு செய்திருந்தனர்.   

காணொளிகளைப் பார்வையிட  

குறித்த போட்டியில் இலங்கை அணியின் விக்கெட் காப்பாளராக செயற்பட்ட அமல் சில்வா, போட்டியின் போது பெற்ற சதம் ஒன்றுக்காகவும் தனது திறமையான விக்கெட் காப்பு மூலம் கைப்பற்றிய ஒன்பது விக்கெட்டுக்களுக்காகவும் ஆட்ட நாயகன் விருதினைச் தட்டிச் சென்றார். இலங்கை அணி டெஸ்ட் போட்டிகளில் தமது முதல் வெற்றியினைப் பெற்றதை கொண்டாடும் விதமாக, இலங்கை மக்களுக்கு அப்போது தேசிய விடுமுறையும் வழங்கப்பட்டிருந்தது.

இந்திய அணியுடனான டெஸ்ட் போட்டியில் சதம் கடந்த அமல் சில்வா

தமது முதல் டெஸ்ட் வெற்றியினை அடுத்து பத்து வருடங்களின் பின்னர் இலங்கை அணி, நியூசிலாந்தின் நேபியர் நகரில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் அந்நாட்டு அணியினை 241 ஓட்டங்களால் வீழ்த்தி, அயல் நாடு ஒன்றில் பெற்றுக் கொண்ட முதல் வெற்றியினை பதிவு செய்தது. இலங்கை அணியின் இந்த வெற்றிக்காக இளம் வீரரான சமிந்த வாஸ் மொத்தமாக 10 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி உதவியிருந்தார்.

இப்படியாக டெஸ்ட் போட்டிகளில் ஆரம்பத்தினைப் பெற்றுக் கொண்ட இலங்கை அணி தற்போது உலகின் முதல் நிலை அணி எதுவாக இருப்பினும் அதனை டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்தும் வல்லமையோடு வலம் வருகின்றது.   

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க