இலங்கை, இலங்கை இளையோர், மலேசியா மற்றும் கென்யா ஆகிய நான்கு அணிகள் மோதும் வலைப்பந்து போட்டித் தொடர் சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் நாளை (ஏப்ரல் 08) தொடக்கம் ஏப்ரல் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
உலகக் கிண்ண வலைப்பந்தாட்டத்துக்கு தயாராகும் இலங்கை
இலங்கை வலைப்பந்தாட்ட அணி, கடந்த வருடம் சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய வலைப்பந்தாட்ட…
இலங்கை வலைப்பந்து சம்மேளத்தினால் (NFSL) ஏற்பாடு செய்யப்படும் இந்தத் தொடரில் இலங்கை, மலேசியா மற்றும் கென்ய தேசிய அணிகளுடன் இலங்க இளையோர் குழாமும் இணைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 மே மாதமும் NFSL சிங்கப்பூர் மற்றும் PStar வலைப்பந்து கழகத்தை இணைத்த தொடர் ஒன்றை நடத்தி இருந்தது. இலங்கை தேசிய அணி ஒன்பது ஆண்டுகளின் பின் ஆசிய சம்பியனாவதற்கு அந்தத் தொடர் பெரிதும் உதவியதோடு இலங்கைக் குழாத்திற்கு சர்வதேச அளவில் திறமையை வெளிக்காட்ட சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்தியது.
உலக வலைப்பந்தாட்ட தரவரிசையில் இலங்கைக்கு முன்னேற்றம்
உலக வலைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் கடந்த ஜுன் மாதம் 30ஆம் திகதி
ஜப்பானில் எதிர்வரும் ஜூன் 29 தொடக்கம் ஜூலை 7 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் ஆசிய இளையோர் வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை இளையோர் அணி பங்கேற்கவிருப்பதோடு தேசிய அணி வரும் ஜூலை 12 தொடக்கம் 21 வரை நடைபெறவிருக்கும் வலைப்பந்து உலகக் கிண்ணத்திற்காக இங்கிலாந்து பயணிக்கவுள்ளது.
இந்த நான்கு அணிகள் பங்கேற்கும் தொடரின் அனைத்துப் போட்டிகளையும் போட்டித் திடலில் இருந்து நேரடியாக கொண்டுவரும் ThePapare.com உடன் உங்களுக்கு இந்த தொடரை நேரடியாக கண்டு ரசிக்கலாம். அதேபோன்று, போட்டி செய்திகள், முன்னோட்டங்கள் மற்றும் ஏனைய அனைத்து வலைப்பந்து செய்திகளுக்கும், www.thepapare.com netball இற்கு செல்லுங்கள்.
மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க




















