றோயல் கல்லூரியை இன்னிங்ஸால் வீழ்த்தியது யாழ் சென். ஜோன்ஸ்

999

யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நிறைவிற்கு வந்த பாணந்துறை றோயல் கல்லூரிக்கெதிரான கிரிக்கெட் போட்டியில் முத்துறைகளிலும் சோபித்த சென். ஜோன்ஸ் கல்லூரி அணி இன்னிங்ஸ் வெற்றியை பெற்றுக்கொண்டது.

சிங்கர் கிண்ணத்திற்கான பிரிவு 2 பாடசாலை அணிகளுக்கிடையிலான முதற் சுற்றிற்கான போட்டி நேற்றும் இன்றும் (17,18) யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது.

கேகளு வித்தியாலய அணியை வீழ்த்திய சென். ஜோன்ஸ் கல்லூரி

2018/19 பருவ காலத்திற்கான சிங்கர் பிரிவு 2 பாடசாலைகள் கிரிக்கெட் தொடரில் கேகாலை,கேகலு வித்தியாலய…

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய றோயல் கல்லூரி வீரர்கள் வெறுமனே 5 ஓட்டங்களிற்கு, தமது முதல் 3 விக்கெட்டுக்களையும் சென். ஜோன்சின் வேகப்பந்து வீச்சாளர்களிற்கு பறிகொடுத்தனர். ஒரு முனையில் தனஞ்சய பிரசாத் நிதானித்திருக்க, மறுபக்கத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் தம் பங்கிற்கு  5 விக்கெட்டுக்களை பகிர்ந்து கொண்டனர்.

இறுதிவரை போராடிய தனஞ்சய பிசாத் 47 ஓட்டங்களைப் பெற, ஓரளவு நிதானமாக ஆடி செனேஷ் பிரேமரத்ன 23 ஓட்டங்களை சேகரித்தார். இவர்கள் மட்டுமே இரட்டையிலக்க ஓட்ட எண்ணிக்கையைக் கடந்தனர். எனவே, 103 என்ற கௌரவமான ஓட்ட எண்ணிக்கையினை பெற்றுக்கொண்டது றோயல் கல்லூரி.   

அபினாஷ் 3 விக்கெட்டுக்களினையும், அன்ரன் அபிஷேக் ரதுசன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களினையும் சாய்த்தனர்.  

தொடர்ந்து தமது முதலாவது இன்னிங்சை ஆரம்பித்த சென். ஜோன்ஸ் கல்லூரி அணி 32 ஓட்டங்களிற்கு இரண்டு விக்கெட்டுக்கள் என்ற நிலையில் இரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களையும் இழந்தது தடுமாறியது. எனினும், அவ்வணியின் மூன்றாவது விக்கெட்டுக்காக ரதுசன், டினோசன் இடையே அரைச்சத இணைப்பாட்டம் ஒன்று பெறப்பட, யாழ் வீரர்களின் ஓட்ட எண்ணிக்கை வலுவடைந்தது. இதன்போது, 11 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 62 ஓட்டங்களினை பெற்று சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ரதுசன் துரதிஷ்டவசமாக ரண் அவுட் முறை மூலம் ஆட்டமிழந்தார்.

Photos: St. John’s College, Jaffna vs Royal College, Panadura | U19 Division II

ThePapare.com | Ushanth Senthilselvan | 18/12/2018 | Editing and re-using images without permission of ThePapare.com will…

களத்திலிருந்த டினோசன் பெறுமதியான 37 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க,  மறுமுனையில் 47 பந்துகளில் அதிரடியான 61 ஓட்டங்களினை பெற்றுக்கொடுத்தார் அணித்தலைவர் அபினாஷ்.

இதனால், 9 விக்கெட்டுக்களினை இழந்து 209 ஒட்டங்களை பெற்ற சென். ஜோன்ஸ் வீரர்கள், 106 ஒட்டங்கள் முன்னிலையுடன் ஆட்டத்தினை இடைநிறுத்திக்கொண்டனர்.

Photo Album : St. John’s College,Jaffna vs Royal College, Panadura | U19 Division II

பின்னர் யாழ் வீரர்களின் பந்து வீச்சில் டினோசன் முதலாவது விக்கெட்டினை தகர்க்க, தொடர்ந்து பொறுப்பினை கையிலெடுத்த அபினாஷ், சரண் இணை மிகுதி  ஒன்பது விக்கெட்டுக்களினையும் சம இடைவெளியில் சாய்க்க, பாணந்துறை தரப்பினை 92 ஓட்டங்களிற்குள் சுறுட்டிய யாழ் வீரர்கள் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 13 ஓட்டங்களால் வெற்றிபெற்றனர்.

மீண்டும் மும்பை அணியில் விளையாடவுள்ள லசித் மாலிங்க

இந்தியாவின் ஜெய்பூரில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலத்தில், இலங்கை அணியின் நட்சத்திர…

துடுப்பாட்டத்தில் துசாந்த மதுசங்க(33), தனஞ்ஜய பிரசாத் (19)  ஆகிய இரு வீரர்கள் மாத்திரமே இரண்டாவது இன்னிங்சில் இரட்டை இலக்க ஓட்ட எண்ணிக்கையினைப் பெற்றிருந்தனர்.  

சென். ஜோன்ஸ் கல்லூரி அணித்தலைவர் அபினாஷ் போட்டியில் 8 விக்கெட்டுக்களினை கைப்பற்றியதுடன் அரைச்சதமும் (61) கடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

போட்டிச் சுருக்கம்  

றோயல் கல்லூரி, பாணந்துறை 103 (40.1) – தனஞ்சய பிரசாத் 47, செனேஷ் பிரேமரத்ன 23, மேர்பின் அபினாஷ்  3/44, அன்ரன் அபிஷேக் 2/09, ரதுசன் 2/10  & 92 (42) துசாந்த மதுஷங்க 33, மேர்பின் அபினாஷ்  5/33, சரண் 4/24 

சென். ஜோன்ஸ் கல்லூரி,யாழ்ப்பாணம் 209/9d (48) ரதுசன் 62, மேர்பின் அபினாஷ்  61, டினோசன்  37, மிலிந்த சன்ஜய 4/40, செனேஷ் பிரேமரத்ன 2/38

போட்டி முடிவுஇன்னிங்ஸ் மற்றும் 13  ஓட்டங்களால்  சென். ஜோன்ஸ் கல்லூரி வெற்றி.

 

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<