ஆஸி. தொடரில் இருந்து இந்திய இளம் நட்சத்திரம் பிரித்வி ஷா விலகல்

296

அவுஸ்திரேலியாவுடனான முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் காயம் காரணமாக விலகிய இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பிரித்வி ஷா தொடர் முழுவதிலும் இருந்து விலகியுள்ளார்.

அவருக்கு பதில் மாயங்க் அகர்வால் இந்திய அணிக்கு அழைக்கப்பட்டிருப்பதோடு, வேகப்பந்து சகதுறை வீரர் ஹார்திக் பண்டியாவும் இந்திய குழாத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய முதல் டெஸ்ட்டில் ப்ரித்வி சாஹ்வினை இழக்கும் இந்திய அணி

உபாதைக்கு ஆளாகியிருக்கும் இந்திய அணியின் இளம் நட்சத்திர…..

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை பதினொருவர் அணியுடனான பயிற்சிப் போட்டியின்போதே ஷாவுக்கு காயம் ஏற்பட்டது. பௌண்டரி எல்லையில் பிடியெடுப்பு ஒன்றை செய்ய முயற்சித்தபோது அவரது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இந்த உபாதை தொடரின் பிந்திய கட்டத்தில் சுகம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அவரால் இந்த தொடரில் ஆட முடியாது என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

19 வயதுடைய ஷா அதிக எதிர்பார்ப்புடன் டெஸ்ட் கிரிக்கெட்டை ஆரம்பித்தவராவார். அவரது முதல் இரு டெஸ்ட் இன்னிங்ஸ்களிலும் 204 ஓட்டங்களை பெற்றதோடு தனது கன்னி டெஸ்டில் 99 பந்துகளில் சதம் பெற்றார். இந்நிலையில் அவரது இழப்பு இந்திய அணிக்கு பின்னடைவாக உள்ளது.

அவர் இல்லாத நிலையில் இந்திய அணியின் ஆரம்ப ஜோடியான கே.எல். ராகுல் மற்றும் முரளி விஜே ஓட்டங்கள் பெற தடுமாறி வருகின்றனர். இருவரும் இணைந்து முதல் இரு டெஸ்ட்களின் மொத்தம் எட்டு இன்னிங்ஸ்களிலும் ஒரு அரைச்சதம் கூட பெறவில்லை.    

கன்னிப் போட்டியில் சதமடித்த இளம் ப்ரித்திவ் ஷாவ்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ராஜ்கோட்டில் நடைபெற்று வரும்…

ஷாவுக்கு பதில் அழைக்கப்பட்டிருக்கும் அகர்வால் இதுவரை தனது கன்னி டெஸ்ட் போட்டியில் ஆடாதபோதும் முதல்தர போட்டிகளில் அனுபவம் பெற்றவராவார். அதிகபட்சம் ஆட்டமிழக்காது 304 ஓட்டங்களை பெற்றிருக்கும் அவரின் முதல்தர போட்டிகளின் ஓட்ட சராசரி 50.30 ஆகும். ரஞ்சிக் கிண்ணத்தில் கர்நாடக அணிக்காக அவர் அண்மைய டெஸ்ட் இன்னிங்ஸில் அரைச்சதம் ஒன்றை பெற்றார்.  

ஆசிய கிண்ண போட்டிகளில் ஏற்பட்ட காயம் காரணமாகவே பாண்டியா அணியில் இடம்பெறவில்லை. எனினும், மிக அண்மைய ரஞ்சி கிண்ணத்தில் அவர் தனது உடல் தகுதியை நிரூபித்து மும்பை அணிக்கு எதிராக பரோடா அணிக்கு 73 ஓட்டங்களையும், 82 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும் பெற்றார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<