2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியானது இலங்கைக்கு எதிராக 10 விக்கெட்டுக்களால் மிக இலகு வெற்றியினைப் பதிவு செய்து ஆசியக் கிண்ணத் தொடரில் 8ஆவது முறையாக சம்பியன்களாக மாறியிருக்கின்றது.
>> ஆசியக்கிண்ணத் தொடரிலிருந்து தீக்ஷன வெளியேற்றம்!
முன்னர் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமான போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்திருந்தனர். இறுதிப் போட்டிக்கான இலங்கை அணி உபாதைக்குள்ளாகிய மகீஷ் தீக்ஷனவிற்குப் பதிலாக துஷான் ஹேமன்தவிற்கு வாய்ப்பு வழங்கியிருந்தது.
இலங்கை XI
பெதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, தனன்ஞய டி சில்வா, தசுன் ஷானக்க (தலைவர்), துனித் வெல்லாலகே, துஷான் ஹேமன்த, மதீஷ பதிரன, ப்ரமோத் மதுஷான்
இந்தியா XI
விராட் கோலி, ரோஹிட் சர்மா (அணித்தலைவர்), சுப்மன் கில், KL ராகுல், இஷான் கிஷன், ஹார்திக் பாண்டியாஇ வொஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, ரவிந்திர ஜடேஜா, மொஹமட் சிராஜ்
பின்னர் துடுப்பாட்டத்தினை தொடங்கிய இலங்கை அணிக்கு மொஹமட் சிராஜ் தனது வேகத்தின் மூலம் மிகப் பெரும் நெருக்கடியினை உருவாக்கியிருந்தார். இதனால் அதிக அழுத்தத்திற்கு உள்ளான இலங்கை கிரிக்கெட் அணியானது மிகவும் மோசமான துடுப்பாட்டத்துடன் 15.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 50 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.
இது இலங்கை அணி ஒருநாள் போட்டிகளில் பெற்ற இரண்டாவது குறைந்த ஓட்ட எண்ணிக்கையாக மாறியதோடு அது இந்திய அணிக்கு எதிராக இலங்கை ஒருநாள் போட்டிகளில் பெற்ற குறைவான ஓட்டங்களாகவும் மாறியது.
>> மே.தீவுகளை வீழ்த்திய இலங்கை இளையோர் அணி!
இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் 17 ஓட்டங்களை எடுக்க, மொஹமட் சிராஜ் 21 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய சிறந்த பந்துவீச்சினைப் பதிவு செய்தார். இதேநேரம் ஹார்திக் பாண்டியா 3 விக்கெட்டுக்களைச் சுருட்டினார்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 51 ஓட்டங்களை அடைய பதிலுக்கு ஆடிய இந்திய கிரிக்கெட் அணியானது போட்டியின் வெற்றி இலக்கினை 6.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 51 ஓட்டங்களுடன் அடைந்தது.
இந்திய அணியின் வெற்றியினை உறுதி செய்த அதன் துடுப்பாட்டத்தில் சுப்மான் கில் 27 ஓட்டங்களையும், இஷான் கிஷன் 23 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றிருந்தனர். இப்போட்டியின் வெற்றியின் மூலம் இந்திய அணியானது அதிக பந்துகள் வித்தியாசத்தில் ஒருநாள் போட்டிகளில் தாம் பெற்ற வெற்றியினைப் பதிவு செய்திருந்ததோடு, ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி ஒன்றிலும் 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் முதன் முறையாக வெற்றியினைப் பதிவு செய்த அணியாக புதிய சாதனைகளை நிலைநாட்டியிருக்கின்றது.
போட்டியின் ஆட்டநாயகனாக மொஹமட் சிராஜ் தெரிவாகினார். இப்போட்டியில் தோல்வியினைத் தழுவிய இலங்கை அணி 7ஆவது முறையாக ஆசியக் கிண்ணத் தொடர் ஒன்றில் இரண்டாவது இடத்தினைப் பெற்றுக் கொண்டது.
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | c Ravindra Jadeja b Mohammed Siraj | 2 | 4 | 0 | 0 | 50.00 |
Kusal Perera | c KL Rahul b Jasprit Bumrah | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Kusal Mendis | b Mohammed Siraj | 17 | 34 | 3 | 0 | 50.00 |
Sadeera Samarawickrama | lbw b Mohammed Siraj | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Charith Asalanka | c Ishan Kishan b Mohammed Siraj | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Dhananjaya de Silva | c KL Rahul b Mohammed Siraj | 4 | 2 | 1 | 0 | 200.00 |
Dasun Shanaka | b Mohammed Siraj | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Dunith Wellalage | c KL Rahul b Hardik Pandya | 8 | 21 | 0 | 0 | 38.10 |
Dushan Hemantha | not out | 13 | 15 | 1 | 0 | 86.67 |
Pramod Madushan | c Virat Kohli b Hardik Pandya | 1 | 6 | 0 | 0 | 16.67 |
Matheesha Pathirana | c Ishan Kishan b Hardik Pandya | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Extras | 5 (b 0 , lb 2 , nb 0, w 3, pen 0) |
Total | 50/10 (15.2 Overs, RR: 3.26) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Jasprit Bumrah | 5 | 1 | 23 | 1 | 4.60 | |
Mohammed Siraj | 7 | 1 | 21 | 6 | 3.00 | |
Hardik Pandya | 2.2 | 0 | 3 | 3 | 1.36 | |
Kuldeep Yadav | 1 | 0 | 1 | 0 | 1.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Ishan Kishan | not out | 23 | 18 | 3 | 0 | 127.78 |
Shubman Gill | not out | 27 | 19 | 6 | 0 | 142.11 |
Extras | 1 (b 0 , lb 1 , nb 0, w 0, pen 0) |
Total | 51/0 (6.1 Overs, RR: 8.27) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Pramod Madushan | 2 | 0 | 21 | 0 | 10.50 | |
Matheesha Pathirana | 2 | 0 | 21 | 0 | 10.50 | |
Dunith Wellalage | 2 | 0 | 7 | 0 | 3.50 | |
Charith Asalanka | 0.1 | 0 | 1 | 0 | 10.00 |
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<