இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்த இராணுவப்படை

90

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) பிரிவு A (Tier A) உள்ளூர் கிரிக்கெட் கழகங்கள் இடையே நடாத்தும் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில், கடந்த வெள்ளிக்கிழமை (31) ஆரம்பமான மூன்று போட்டிகளும்  இன்று (2) நிறைவுக்கு வந்துள்ளன.

மூன்று நாட்களுக்குரிய போட்டிகளை கொண்டிருக்கும் இந்த தொடரில், டொம்பேகொட சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இலங்கை இராணுவப்படை அணி, BRC வீரர்களை இன்னிங்ஸ் மற்றும் 175 ஓட்டங்களால் தோற்கடித்திருந்தது. 

ரமேஷ் மெண்டிஸின் முச்சதத்தோடு வலுப்பெற்றிருக்கும் சோனகர் அணி

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) பிரிவு A (Tier A) உள்ளூர் கிரிக்கெட் கழகங்கள் இடையே நடாத்தும்..

இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய இராணுவப்படை அணி முதல் இன்னிங்ஸில் 435 ஓட்டங்கள் பெற்றது. பதிலுக்கு தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய BRC வீரர்கள் 88 ஓட்டங்களை மட்டுமே எடுத்தனர். இதனால், இப்போட்டியின் இரண்டாம் நாளிலேயே பலோவ் ஒன் (follow on) முறையில் இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடி வந்த BRC அணி இன்றைய நாளில் துஷான் விமுக்தியின் அபார பந்துவீச்சு காரணமாக 172 ஓட்டங்கள் பெற்று இன்னிங்ஸ் தோல்வியடைந்தது. BRC அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்த சுழல் பந்துவீச்சாளரான துஷான் விமுக்தி, இம்முறை 4 விக்கெட்டுக்களை கைப்பற்றி இராணுவப்படை அணியின் வெற்றியினை உறுதி செய்திருந்தார்.

இதேநேரம், கொழும்பு கிரிக்கெட் கழகம் மற்றும் SSC அணிகள் விளையாடிய போட்டி சமநிலையில் நிறைவுற்றது. இப்போட்டியில், கொழும்பு கிரிக்கெட் கழக அணிக்காக விளையாடி சிறந்த பந்துவீச்சினை வெளிப்படுத்திய வனிந்து ஹஸரங்க தனது சுழல் மூலம் 6 விக்கெட்டுக்களை இன்றைய நாளில் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதேநேரம், அதிரடி துடுப்பாட்ட வீரரான தசுன் ஷானக்க SSC அணிக்காக அரைச்சதம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, கொழும்பு கிரிக்கெட் கழகம், SSC அணிகள் இடையிலான போட்டி போன்று சோனகர் கிரிக்கெட் கழகம், நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் ஆகியவை பங்குபற்றியிருந்த போட்டியும் சமநிலையில் நிறைவுற்றது. இப்போட்டியில், நீர்கொழும்பு அணியின் இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடிய அஷேன் சில்வா அவரின் 12ஆவது முதல்தர சதத்தோடு 102 ஓட்டங்கள் பெற்று திறமையினை வெளிப்படுத்தியிருந்தார்.

போட்டிகளின் சுருக்கம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் SSC

இடம் – கொழும்பு கிரிக்கெட் கழக மைதானம்

Photos: CCC vs SSC | SLC Major League Tier ‘A’ tournament 2019/20

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 548 (119) – லசித் அபேரத்ன 153, மினோத் பானுக்க 114, அஷான் பிரியஞ்சன் 90, ஆகாஷ் சேனாரத்ன 4/120, சரித் அசலங்க 2/53

SSC (முதல் இன்னிங்ஸ்) – 260 (68.1) – கவிந்து குலசேகர 84, பசிந்து சூரியபண்டார 48, உஸ்மான் இஷாக் 4/67, மலிந்த புஷ்பகுமார 4/68

கொழும்பு கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 133/1d (28) – ரொன் சந்திரகுப்தா 70*

SSC (இரண்டாம் இன்னிங்ஸ்) – 178/9 (56) – தசுன் ஷானக்க 52, வனிந்து ஹஸரங்க 6/76

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது.

அபார சதத்தின் மூலம் டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய குசல் மெண்டிஸ்

இங்கிலாந்து எதிர் தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை எதிர் ஜிம்பாப்வே அணிகளுக்கிடையிலான டெஸ்ட்…

சோனகர் கிரிக்கெட் கழகம் எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் 

இடம் – சோனகர் கிரிக்கெட் கழக மைதானம்

சோனகர் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 652/8d (109.1) – ரமேஷ் மெண்டிஸ் 300*, சசித்ர சேரசிங்க 149, நிமன்த மதுசங்க 90, ரொஷேன பெர்னாந்து 3/101, சாத் நஸீம் 3/197

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 306 (69.3) – ரொஸ்கோ தட்டில் 77, சாத் நஸீம் 58, சசித்ர சேரசிங்க 3/70

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (இரண்டாம் இன்னிங்ஸ்) f/o – 317/5 (86) -அஷேன் சில்வா 102, அஞ்செலோ ஜயசிங்க 69*, பிரவீன் ஜயவிக்ரம 2/67

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது.

Photos: Moors v Negombo SC | SLC Major League Tier ‘A’ tournament 2019/20

இராணுவப்படை கிரிக்கெட் கழகம் எதிர் BRC

இடம் – டொம்பேகொட சர்வதேச மைதானம்

இராணுவப்படை (முதல் இன்னிங்ஸ்) – 435 (125.4) – லக்ஷான் எதிரிசிங்க 99, அசேல குணரத்ன 82, துவிந்து திலகரட்ன 4/80

BRC (முதல் இன்னிங்ஸ்) – 88 (25.5) – துஷான் விமுக்தி 5/21

BRC (இரண்டாம் இன்னிங்ஸ்) f/o – 172 (48.1) – சாகர் மங்களோக்கர் 50, துஷான் விமுக்தி 4/49, சஞ்சீவ் குமாரசாமி 2/33

முடிவு – இராணுவப்படை இன்னிங்ஸ் மற்றும் 175 ஓட்டங்களால் வெற்றி 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<