நவீத்தின் அபார சதத்தால் பாணந்துறை அணி ஸ்திரமான நிலையில்

141

இலங்கை கிரிக்கெட் சபை நடத்தும் 2017/18 ஆம் பருவகால உள்ளூர் பருவத்திற்கான பிரீமியர் லீக்கின் B நிலை தொடரின் நான்கு போட்டிகள் இன்று (15) ஆரம்பமாயின.

குருநாகல் யூத் கிரிக்கெட் கழகம் எதிர் கடற்படை விளையாட்டுக் கழகம்  

வெலிசறை, கடற்படை மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய குருநாகல் யூத் அணி தனது முதல் இன்னிங்ஸுக்காக 253 ஓட்டங்களைப் பெற்றது. ஹஷான் பிரபாத் சிறப்பாக ஆடி 84 ஓட்டங்களைப் பெற்றார். சுதார தக்ஷின கடற்படை சார்பில் 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

4 நாள் டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய விதிமுறைகள் அறிமுகம்

உலகின் அனைத்து துறைகளிலும் நவீன…

இந்நிலையில் முதல் நாள் ஆட்டத்தின் கடைசி நேரத்தில் தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த கடற்படை அணி இன்றைய ஆட்ட நேரம் முடிவதற்குள் 6 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை பறிகொடுத்தது.

போட்டியின் சுருக்கம்

குருநாகல் யூத் (முதல் இன்னிங்ஸ்) – 253 (83.2) – ஹஷான் பிரபாத் 84, ருவன்த ஏகனாயக்க 43, கல்ஹான் சினத் 26*, சுதார தக்ஷின 3/49, குசல் எதுசூரிய 2/27, நுவன் சம்பத் 2/60  

கடற்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 6/1 (03) – துசித் டி சொய்சா 1/05


பாணந்துறை விளையாட்டுக் கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்

கஷிஸ் நவீத்தின் அபார சதத்தின் மூலம் பாணந்துறை விளையாட்டு கழகத்தால் பொலிஸ் அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் ஸ்திரமான ஓட்டங்களை பெற முடிந்தது.  

கொழும்பு, பொலிஸ் பார்க் மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பொலிஸ் அணி பாணந்துறை அணியை முதலில் துடுப்பெடுத்தாட கோரியது. பொலிஸ் அணியின் கல்யான் ரத்னப்ரிய (3) மற்றும் நிமேஷ் விமுக்தி (3) ஆகியோர் எதிரணியை பந்துவீச்சில் மிரட்டினர்.

இலங்கை – பங்களாதேஷ் இடையிலான போட்டி அட்டவணை வெளியீடு

எனினும் நவீத் சிறப்பாக துடுப்பெடுத்தாடினார். அவர் 111 ஓட்டங்களை பெற்று அணியை ஸ்திரமான நிலைக்கு இட்டுச் சென்றார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாணந்துறை விளையாட்டுக் கழகம் 8 விக்கெட்டுகளை இழந்து 236 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஷஷ்ரிக்க புசேகொல்ல அரைச்சதம் பெற ஒரு ஓட்டம் எடுக்க வேண்டிய நிலையில் களத்தில் உள்ளார்.

போட்டியின் சுருக்கம்

பாணந்துறை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 239/8 (86) – கஷிஸ் நவீத் 111, ஷஷ்ரிக்க புசேகொல்ல 49*, விஷ்வ சதுரங்க 38, கல்யான் ரத்னப்ரிய 3/54, நிமேஷ் விமுக்தி 3/59, மஹேஷ் பிரியதர்ஷன 2/35   


 நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் லங்கன் கிரிக்கெட் கழகம்

கதிரான கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் தனது முதல் இன்னிங்ஸுக்காக 223 ஓட்டங்களைப் பெற்றது. பிரமித் பெர்னாண்டோ (51) மற்றும் அமில வீரசிங்க (70) ஆகியோர் அணிக்கு சிறந்த முறையில் கைகொடுத்தனர்.

இதன்போது லங்கன் அணிக்காக சிறப்பாக பந்துவீசிய ரஜீவ வீரசிங்க 5 விக்கெட்டுகளையும் நவீன் கவிகார 4 விக்கெட்டுகளையும் பதம்பார்த்தனர்.

இந்நிலையில் முதல் நாள் ஆட்டநேரம் முடிவதற்கு சற்று நேரத்திற்கு முன் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த லங்கன் கிரிக்கெட் கழகம் 3 விக்கெட் இழப்புக்கு 43 ஓட்டங்களை பெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 223 (74) – பிரமித் பெர்னாண்டோ 51, அமில வீரசிங்க 70, லசித் க்ரூபுள்ளே 20, ரஜீவ வீரசிங்க 5/43, நவீன் கவிகார 4/55

லங்கன் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 43/3 (12.3)

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் விரைவில் அதிரடி மாற்றங்கள்

காலி கிரிக்கெட் கழகம் எதிர் விமானப்படை விளையாட்டுக் கழகம்

கட்டுநாயக்க, விமானப்படை மைதானத்தில் ஆரம்பமான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய காலி கிரிக்கெட் கழகம் 178 ஓட்டங்களுக்கே சுருண்டது. சானக்க விஜேசிங்க பெற்ற 36 ஓட்டங்களுமே அந்த அணியின் அதிகூடிய ஓட்டங்களாகும்.

இதன்போது விமானப்படை சார்பில் சொஹான் ரங்கிக 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

முதல் நாளில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த விமானப்படை அணியும் தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் அந்த அணி ஆட்ட நேர முடிவின்போது 57 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

போட்டியின் சுருக்கம்

காலி கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 178 (65) – சானக்க விஜேசிங்க 36, டில்ஷான் கான்சன 28, ரவேன் சயெர் 21, சொஹான் ரங்கிக்க 5/47, மிலான் ரத்னாயக்க 2/30  

விமானப்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 57/4 (22) – உதயவன்ஷ பராக்ரம 28, ரொஸ்கோ தடில் 20*, கயான் சிறிசோம 2/19