லஹிருவுக்கு இரட்டைச்சதம்; ரொஷேனுக்கு சதம்

44
 

இலங்கை கிரிக்கெட் சபை (SLC), பிரிவு A உள்ளூர் கழகங்கள் இடையே நடாத்தும் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் NCC மற்றும் றாகம கிரிக்கெட் கழக அணிகள் மோதிய போட்டி இன்று (3) சமநிலையில் முடிவடைந்தது.

மூன்று நாட்கள் கொண்ட இந்தப் போட்டி கடந்த சனிக்கிழமை (1) NCC அணியின் சொந்த மைதானத்தில் ஆரம்பமானது.

இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்த இராணுவப்படை

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) பிரிவு A (Tier A) உள்ளூர் கிரிக்கெட்…….

போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய NCC வீரர்கள், லஹிரு உதாரவின் அபார துடுப்பாட்டத்தோடு முதல் இன்னிங்ஸில் 552 ஓட்டங்கள் எடுத்தனர்.

NCC அணியின் துடுப்பாட்டம் சார்பில் இரட்டைச்சதம் பெற்ற லஹிரு உதார, 290 ஓட்டங்கள் பெற்று முதல்தரப் போட்டிகளில் தான் பெற்ற கூடிய ஓட்டங்களை பதிவு செய்தார். இதேநேரம், இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர்களில் ஒருவரான அஞ்சலோ பெரேரா 74 ஓட்டங்கள் எடுக்க, சத்துரங்க டி சில்வா 57 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.

இதேநேரம் றாகம அணியின் பந்துவீச்சு சார்பில் அமில அபொன்சோ 5 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Photos: NCC vs Ragama CC | SLC Major League Tier ‘A’ tournament 2019/20

தொடர்ந்து, தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த றாகம அணி, ரொஷேன் சில்வாவின் அபார சதத்தோடு, 461 ஓட்டங்கள் எடுத்தது. முதல்தரப் போட்டிகளில் 23ஆவது சதத்தினை பதிவு செய்த ரொஷேன் சில்வா 139 ஓட்டங்கள் பெற, உதார ஜயசுந்தர 131 ஓட்டங்கள் எடுத்திருந்தார். இதேநேரம், NCC அணியின் பந்துவீச்சு சார்பாக சத்துரங்க டி சில்வா 5 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர், 91 ஓட்டங்கள் பெற்றவாறு இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த NCC அணி 121 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்த போது, போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்து போட்டி சமநிலையில் முடிவடைந்தது. NCC அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டம் சார்பில் பெதும் நிஸ்ஸங்க 56 ஓட்டங்கள் பெற்றும், அஞ்சலோ பெரேரா 52 ஓட்டங்கள் பெற்றும் ஆட்டமிழக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்கோர் விபரம்

NCC (முதல் இன்னிங்ஸ்) – 552 (101.4) : லஹிரு உதார 290*, அஞ்சலோ பெரேரா 74,  சத்துரங்க டி சில்வா 57, அமில அபொன்சோ 5/152, இஷான் ஜயரத்ன 3/100

றாகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 461 (130.5) : ரொஷேன் சில்வா 139, உதார ஜயசுந்தர 131, நிஷான் மதுஷ்க 74*, சத்துரங்க டி சில்வா 6/144

NCC (இரண்டாம் இன்னிங்ஸ்) – 121/3 (15.5) : பெதும் நிஸ்ஸங்க 56*, அஞ்சலோ பெரேரா 52*, இஷான் ஜயரத்ன 2/12

முடிவு – போட்டி சமநிலையில் அடைந்தது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<