இலங்கை – பங்களாதேஷ் இடையிலான போட்டி அட்டவணை வெளியீடு

1677
Sri Lanka tour of Bangladesh

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ள கிரிக்கெட் சுற்றுத் தொடர்களுக்கான போட்டி அட்டவணை நேற்று (14) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதன்படி, இவ்விரு அணிகளுக்கிடையிலான டெஸ்ட் மற்றும் T-20 தொடர்கள் ஆரம்பமவாதற்கு முன்னர் இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுடனான முத்தரப்பு ஒரு நாள் போட்டித் தொடரை நடத்துவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. இறுதியாக 2010ஆம் ஆண்டிலேயே பங்களாதேஷில் முத்தரப்பு ஒரு நாள் போட்டித் தொடரொன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஹத்துருசிங்க விலகியதை அடுத்து பங்களாதேஷ் அணிக்கு புதிய தலைவர்

கிரிக்கெட் அரங்கில் அண்மைக்காலமாக பல…

7 போட்டிகளைக் கொண்ட இந்த போட்டித் தொடரின் அனைத்துப் போட்டிகளும் டாக்காவின் ஷெர்ரி பங்களா மைதானத்தில் பகலிரவு போட்டிகளாக நடைபெறவுள்ளன.

அத்துடன், முத்தரப்பு ஒரு நாள் தொடருக்கு முன்னதாக ஜிம்பாப்வே மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை பதினொருவர் அணிகளுக்கிடையிலான பயிற்சிப் போட்டி நடைபெ றவுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜனவரி 15ஆம் திகதி நடைபெறவுள்ள முதலாவது போட்டியில் பங்களாதேஷ் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

எனினும், இலங்கை அணி தனது முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணியை ஜனவரி 17ஆம் திகதி சந்திக்கவுள்ளது. இந்நிலையில், இப்போட்டித் தொடரில் விளையாடும் மூன்று அணிகளும் தங்களுக்குள் இரண்டு முறை மோதவுள்ளன. இதில் வெற்றி பெற்று முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் ஜனவரி 27ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.

முன்னதாக 2009ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற முத்தரப்பு ஒரு நாள் தொடரில் இம்மூன்று அணிகளும் பங்கேற்றிருந்தன. அத்தொடரில் இலங்கை அணி சம்பியன் பட்டத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் பங்கேற்கும் 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஜனவரி 31ஆம் திகதி சிட்டகொங்கிலும், 8ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 2ஆவது டெஸ்ட் போட்டி டாக்காவிலும் நடைபெறவுள்ளன.

4 நாள் டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய விதிமுறைகள் அறிமுகம்

உலகின் அனைத்து துறைகளிலும் நவீன..

முன்னதாக இவ்வருட முற்பகுதியில் இலங்கையில் நடைபெற்ற 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என பங்களாதேஷ் சமப்படுத்தியதுடன், இலங்கை மண்ணில் முதற்தடவையாக டெஸ்ட் வெற்றியைப் பதிவுசெய்து வரலாறு படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், அண்மையில் அவ்வணி தென்னாபிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் படுதோல்வியைடைந்தது. இதனையடுத்து அவ்வணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றிய சந்திக ஹத்துருசிங்க தனது பதவியை இராஜினாமாச் செய்தார்.

இந்நிலையில், இலங்கை அணியின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சந்திக ஹத்துருசிங்கவின் பயிற்றுவிப்பில் இலங்கை அணி பங்கேற்கும் முதல் தொடராக இச்சுற்றுப்பயணம் அமையவுள்ளது. இத்தொடரில் வெற்றி பெறும் இவ்விரு அணிகளுக்கும் ஹத்தருசிங்கவின் பயிற்றுவிப்பானது வரலாற்று வெற்றியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இதேவேளை, பங்களாதேஷ் சுற்றுப் பயணத்தின் இறுதி தொடராக 2 போட்டிகளைக் கொண்ட T-20 தொடர் நடைபெறவுள்ளது. இதில் முதலாவது T-20 போட்டி ஜனவரி 15இல் டாக்காவிலும், 2ஆவது T-20 போட்டி 18இல் சில்லெட் மைதானத்திலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரோஹித் சர்மாவின் இரட்டைச் சதத்தோடு ஒரு நாள் தொடரை சமன் செய்த இந்தியா

நடபெற்று முடிந்திருக்கும் சுற்றுலா இலங்கை மற்றும்..

போட்டி அட்டவணை

முத்தரப்பு ஒரு நாள் தொடர்

திகதி அணிகள் இடம்
ஜனவரி 15 பங்களாதேஷ் எதிர் ஜிம்பாப்வே டாக்கா
ஜனவரி 17 இலங்கை எதிர் ஜிம்பாப்வே டாக்கா
ஜனவரி 19 பங்களாதேஷ் எதிர் இலங்கை டாக்கா
ஜனவரி 21 இலங்கை எதிர் ஜிம்பாப்வே டாக்கா
ஜனவரி 23 பங்களாதேஷ் எதிர் ஜிம்பாப்வே டாக்கா
ஜனவரி 25 பங்களாதேஷ் எதிர் இலங்கை டாக்கா
ஜனவரி 27 இறுதிப் போட்டி டாக்கா

டெஸ்ட் தொடர்

முதல் டெஸ்ட் ஜனவரி 31 முதல் பெப்ரவரி 04 வரை சிட்டகொங்
இரண்டாவது டெஸ்ட் பெப்ரவரி 08 முதல் 12 வரை டாக்கா

T-20 தொடர்

முதல் T-20 ஜனவரி 15 டாக்கா
இரண்டாவது T-20 ஜனவரி 18 சில்லெட்