இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு விசேட மருத்துவ பரிசோதனை

155

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்படுகின்ற அனைத்து வீரர்களும் எதிர்வரும் காலங்களில் விசேட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்தார்.  

தடைசெய்யப்பட்ட போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளரான ஷெஹான் மதுஷங்க கைதுசெய்யப்பட்டதை அடுத்தே குறித்த அறிவிப்பினை அவர் தெரிவித்தார்

இலங்கை கிரிக்கெட் வீரருக்கு போட்டித் தடை

கொரோனா தொற்று இருப்பதை கண்டறிவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் 150 மில்லியன் ரூபா பெறுமதியான பி.சி.ஆர் இயந்திரமொன்று விளையாட்டுத்துறை அமைச்சிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.  

இதில் கலந்துகொண்டு பேசிய போதே ஷம்மி சில்வா இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

”உண்மையில் அந்த சம்பவம் குறித்த வீரரின் தனிப்பட்ட விடயம். அவ்வாறான சம்பவங்களை எம்மால் கட்டுப்படுத்த முடியாது. அவர்கள் இருக்கின்ற சூழலுக்கு ஏற்ப தான் அவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றார்கள்

எனினும், இனிவரும் காலங்களில் அவ்வாறான சம்பவங்கள் ஏற்படுவதை தவிர்க்க நாங்கள் முக்கிய தீர்மானமொன்றை எடுக்கவுள்ளோம். குறிப்பாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்படுகின்ற அனைத்து வீரர்களையும் விஷேட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் தெரிவித்தார்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<