லிவர்பூலின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த யுனைடட்

73

அடம் லலானாவின் பிந்திய நேர கோல் மூலம் ப்ரீமியர் லீக் கால்பந்து தொடரில் மன்செஸ்டர் யுனைடட் அணிக்கு எதிரான போட்டியை லிவர்பூல் அணி 1-1 என சமன் செய்தது. 

தொடர்ச்சியாக 18 லீக் வெற்றிகளை பெற்று 2017 இல் மன்செஸ்டர் சிட்டி படைத்துள்ள சாதனையை முறியடிக்கும் இலக்குடனேயே லிவர்பூல் அணி நேற்று (20) ஓல்ட் ட்பர்ட்டில் மன்செஸ்டர் யுனைடட்டை எதிர்கொண்டது

ரியல் மெட்ரிட் அதிர்ச்சி தோல்வி; ப்ரீமியர் லீக்கில் முன்னேறும் மன்செஸ்டர் சிட்டி

சர்வதேச போட்டிகளை அடுத்து இரண்டு வாரங்களின்…….

இழுபறி கொண்ட முதல் பாதியில் யுனைடட் அணி தனது நிலையை தக்கவைத்துக்கொள்ள முடிந்தது. இரு அணிகளும் கோல்முயற்சிகளுக்கான வாய்ப்புகளை பெற்று வந்த நிலையில் 35 ஆவது நிமிடத்தில் டானியல் ஜேம்ஸ் பரிமாற்றிய பந்தை மார்கஸ் ரஷ்போர்ட் கோலாக மாற்றி யுனைடட் அணியை முன்னிலை பெறச் செய்தார். எனினும் அந்த கோல் சர்ச்சையை கிளப்பிய நிலையில் வீடியோ உதவி நடுவர் மூலம் உறுதி செய்யப்பட்டது

இதனைத் தொடர்ந்து முதல் பாதியில் சாடியோ மானே லிவர்பூலுக்காக பந்தை வலைக்குள் செலுத்தியபோதும் அப்போது பந்து அவரது கையில் பட்டது வீடியோ நடுவர் மூலம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த கோல் நிராகரிக்கப்பட்டது

லிவர்பூல் எகிப்தைச் சேர்ந்த தனது நட்சத்திர வீரர் மொஹமட் சலாஹ் உபாதை காரணமாக விளையாடாத நிலையிலேயே இந்தப் போட்டியில் களமிறங்கியது. இதனால் ரொபார்டோ பிர்மினோ மற்றும் சாடியோ மானேவுடன் போட்டியை ஆரம்பிக்கும் அரிதான சந்தர்ப்பம் டிவொக் உரிகியிற்கு கிடைத்தது

ஹிலாலின் இரட்டை கோலினால் லெபனானிடம் வீழ்ந்த இலங்கை

லெபனானுக்கு எதிரான 2022 பிஃபா உலகக் கிண்ண ……..

இந்நிலையில் யுனைடட் மத்தியகளம் ஓய்வின்றி பந்தை தன்வசம் வைத்திருக்க போராடிய நிலையில் லிவர்பூல் தனது வழக்கமான ஆட்டத்திற்கு திரும்புவதில் தடுமாற்றம் கண்டது

இந்த பருவத்தில் தனது முதல் தோல்வியை நோக்கி நெருங்கி வந்த லிவர்பூல் அணிக்கு லல்லானா கை கொடுத்தார். போட்டியின் முழு நேரம் முடிவதற்கு ஐந்து நிமிடங்களே இருக்கும்போது அன்டி ரொபட்சன் தாழ்வாக பரிமாற்றிய பந்தைக் கொண்டு அவர் கோல் புகுத்தினார்

இதன்படி யுனைடட் அணி லவர்பூலுக்கு எதிராக கடைசியாக ஆடிய ஏழு போட்டிகளிலும் தோல்வியுறாத அணியாக நீடிக்கிறது. எனினும் 20 முறை ப்ரீமியர் லீக் வென்ற யுனைடட் அணி இம்முறை 10 புள்ளிகளுடன் 13 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது

மறுபுறம் லிவர்பூல் 25 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.  

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<