கிரிக்கட் வரலாற்றில் இன்று: செப்டம்பர் மாதம் 20

5429
On This Day Sep 20

1973ஆம் ஆண்டு – நவீத் நவாஸ் பிறப்பு

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் நவீத் நவாஸின் பிறந்த தினமாகும்.

முழுப் பெயர் – முஹமத் நவீத் நவாஸ்
பிறப்பு – 1973ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி
பிறந்த இடம் – கொழும்பு
வயது – 43
விளையாடிய காலப்பகுதி – 1998ஆம் ஆண்டு தொடக்கம் 2002 வரையான காலப்பகுதி
துடுப்பாட்ட பாணி – இடதுகை துடுப்பாட்டம்

விளையாடியுள்ள ஒருநாள் போட்டிகள் – 03
மொத்த ஒருநாள் ஓட்டங்கள் – 31
அதிகபட்ச ஒருநாள் ஓட்டம் – 15*
ஒருநாள் துடுப்பாட்ட சராசரி – 15.50

விளையாடியுள்ள டெஸ்ட் போட்டிகள் – 01
மொத்த டெஸ்ட் ஓட்டங்கள் – 99
அதிகபட்ச டெஸ்ட் ஓட்டம் – 78*
டெஸ்ட் துடுப்பாட்ட சராசரி – 99.00


1968ஆம் ஆண்டு – இஜாஸ் அஹமத் பிறப்பு

பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் முன்னாள் முன்னணி துடுப்பாட்ட வீரர் இஜாஸ் அஹமத்தின் பிறந்த தினமாகும்.

முழுப் பெயர் – இஜாஸ் அஹமத்
பிறப்பு – 1968ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி
பிறந்த இடம் – சியால்கோட், பஞ்சாப்
வயது – 48
விளையாடிய காலப்பகுதி – 1987ஆம் ஆண்டு தொடக்கம் 2001ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி
துடுப்பாட்ட பாணி – வலதுகை துடுப்பாட்டம்

விளையாடியுள்ள ஒருநாள் போட்டிகள் – 250
மொத்த ஒருநாள் ஓட்டங்கள் – 6564
அதிகபட்ச ஒருநாள் ஓட்டம் – 139*
ஒருநாள் துடுப்பாட்ட சராசரி – 32.33

விளையாடியுள்ள டெஸ்ட் போட்டிகள் – 60
மொத்த டெஸ்ட் ஓட்டங்கள் – 3315
அதிகபட்ச டெஸ்ட் ஓட்டம் – 211
டெஸ்ட் துடுப்பாட்ட சராசரி – 37.67

கிரிக்கட் வரலாற்றில் நேற்றைய நாள் : செப்டம்பர் மாதம் 19


1987ஆம் ஆண்டு – ரெஜிஸ் சகப்வா பிறப்பு

சிம்பாப்வே அணியின் விக்கட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரர் ரெஜிஸ் சகப்வாவின் பிறந்த தினமாகும்.

முழுப் பெயர் – ரெஜிஸ் விரிரனை சகப்வா
பிறப்பு – 1987ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி
பிறந்த இடம் – ஹராரே
வயது – 29
விளையாடும் காலப்பகுதி – 2008ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரையான காலப்பகுதி
துடுப்பாட்ட பாணி – வலதுகை துடுப்பாட்டம்
விளையாடும் பாணி – விக்கட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரர்

விளையாடியுள்ள ஒருநாள் போட்டிகள் – 34
மொத்த ஒருநாள் ஓட்டங்கள் – 454
அதிகபட்ச ஒருநாள் ஓட்டம் – 45
ஒருநாள் துடுப்பாட்ட சராசரி – 15.13

விளையாடியுள்ள டெஸ்ட் போட்டிகள் – 09
மொத்த டெஸ்ட் ஓட்டங்கள் – 506
அதிகபட்ச டெஸ்ட் ஓட்டம் – 101
டெஸ்ட் துடுப்பாட்ட சராசரி – 29.76

விளையாடியுள்ள டி20 போட்டிகள் – 05
மொத்த டி20 ஓட்டங்கள் – 18
அதிகபட்ச டி20 ஓட்டம் – 13
டி20 துடுப்பாட்ட சராசரி – 3.60

1982ஆம் ஆண்டு – ஒருநாள் கிரிக்கட் வரலாற்றில் 1ஆவது ஹெட்ரிக்

உலக கிரிக்கட் வரலாற்றில் முதலாவது ஹெட்ரிக் கைப்பற்றப்பற்ற நாளாகும். சிந் நகரின் நியாஸ் கிரிக்கட் மைதானத்தில் இடம்பெற்ற ஒருநாள் போட்டியின் போது பாகிஸ்தான் அணி முதலில் ஆடி 40 ஓவர்களில் 229 ஓட்டங்களைப் பெற்றது. பின் அவுஸ்திரேலிய அணி துடுப்பெடுத்தாடிய வேளையில் பாகிஸ்தான் அணியின் ஜலால்-உத்-தின் என்ற வேகப்பந்து வீச்சாளர் அவரது 7ஆவது ஓவரின் கடைசி 3 பந்துகளில் ராட் மார்ஷ், ப்ரூஸ் யார்ட்லி மற்றும் ஜெஃப் லாசன் ஆகிய அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரர்களின் விக்கட்டைக் கைப்பற்றினார். இதன் மூலம் ஜலால்-உத்-தின்உலக கிரிக்கட் வரலாற்றில் முதலாவது ஹெட்ரிக்கை கைப்பற்றிய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இவரது சிறந்த பந்து வீச்சால் பாகிஸ்தான் அணி இந்தப் போட்டியில் 59 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

செப்டம்பர் மாதம் 20ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

1921ஆம் ஆண்டு – பணமல் பஞ்சாபி (இந்தியா)
1942ஆம் ஆண்டு – ராஜிந்தர் கோயல் (இந்தியா)
1944ஆம் ஆண்டு – ரமேஷ் சக்சேனா (இந்தியா)
1951ஆம் ஆண்டு – ஸ்டீபன் போக் (நியூசிலாந்து)
1952ஆம் ஆண்டு – நயீம் அஹமத் (பாகிஸ்தான்)
1954ஆம் ஆண்டு – ஜான் காதலர் (கனடா)
1963ஆம் ஆண்டு – அனில் டால்பட் (பாகிஸ்தான்)
1967ஆம் ஆண்டு – கிளேர் நிக்கல்சன் (நியூசிலாந்து)
1970ஆம் ஆண்டு – சார்மன் மேசன் (அவுஸ்திரேலியா)
1972ஆம் ஆண்டு – ரூடி வான் வூரன் (நமீபியா)
1998ஆம் ஆண்டு – ரஷீத் கான் (ஆப்கானிஸ்தான்)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்