கெண்ட் கிக் கால்பந்து தொடரின் முதல் இரு சுற்றுக்களின் முடிவுகள்

386

அம்பாரை  மாவட்ட உதைப்பந்தாட்ட லீக்கின் ஆதரவுடன் நிந்தவுர் கென்ட் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்து நடத்தி வரும் கென்ட் கிக் உதைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் முதலாவது சுற்றும், ஆரம்ப கால் இறுதிப் போட்டிகளும் முடிவடைந்துள்ளது.

நிந்தவுர் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றுவரும் இச்சுற்றுப் போட்டியில் அம்பாரை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த முன்னணி உதைப்பந்தாட்ட அணிகள் பங்குபற்றுகின்றன. மாலை 4.30 மணி தொடக்கம் போட்டிகள் ஆரம்பமாவதுடன் கூடுதலான ரசிகர்கள் இச்சுற்றுப் போட்டியைக் கண்டுகளித்து வருகின்றனர்.

நீண்டகால இடைவெளிக்குப் பிறகு இவ்வாறான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி பெரியளவில் இடம்பெற்று வருவதால் ரிசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்துள்ளது. இச்சுற்றுப்போட்டி தேசிய அளவில் இடம்பெறுகின்ற போட்டிக்கு ஒப்பாக நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இச்சுற்றுப்போட்டியின் முதலாவது போட்டி கென்ட் அணிக்கும், சாய்ந்தமருது பௌசி அணிக்குமிடையில் இடம்பெற்றது. இதில் கென்ட் அணி 4 -3 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றி பெற்றது. இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக் கொண்டாலும்  இறுதி நேரத்தில் பெறப்பட்ட கோலினால் கென்ட் அணி வெற்றியை சுவீகரித்தது.

இரண்டாவது போட்டி கல்முனை சண்டோஸ் அணிக்கும், நிந்தவுர் லெகான் அணிக்குமிடையில் இடம்பெற்றது. இதில் சண்டோஸ் அணி 4 – 0 என்ற கோல்கள் அடிப்படையில் மிக இலகுவான வெற்றியைப் பெற்றுக் கொண்டது.

மூன்றாவது போட்டி நிந்தவுர் சோண்டர்ஸ் அணிக்கும் ,மட்டக்களப்பு டிஸ்கோ அணிக்குமிடையிலான போட்டியில் இரண்டு அணிகளும் போட்டிக்குரிய முழுமையான நேரத்தில் 2 – 2 என்ற கோல்களைப் பெற்று சமநிலையில் இருந்தனர். பெனால்டி அடிப்படையில் 4 – 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் நிந்தவுர் சோண்டர்ஸ் அணி வெற்றி பெற்றது.

நான்காவது போட்டி காத்தான்குடி நெசனல் அணிக்கும், மட்டக்களப்பு ரெட்ணம் அணிக்குமிடையில் இடம்பெற்றது. இதில் 4 -1 என்ற கோல்கள் அடிப்படையில் நெசனல் அணி வெற்றி பெற்றது. ஆரம்பத்தில் ரெட்ணம் அணி சிறப்பாக விளையாடியபோதும் நடுப்பகுதியில் விட்ட கூடுதலான தவறுகளினால் நெசனல் அணி கோல்களைப் பெறுவதற்கு வாய்ப்பாக அமைந்தது.

ஐந்தாவது போட்டி மருதமுனை ஒலிம்பிக் அணிக்கும், மட்டக்களப்பு பாடுமீன் அணிக்குமிடையில் இடம்பெற்றது.  இப்போட்டி பெரிதளவில் எதிர்பார்க்கப்பட்டபோதும் 4 -0 என்ற கோல்கள் அடிப்படையில் ஒலிம்பிக் அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் ஒலிம்பிக் வீரா்கள் மிகத்திறமையாக விளையாடியதைக் காணக்கூடியதாக இருந்தது. பாடுமீன் அணியில் உள்ள சில வீரா்களுக்கு போட்டியின்போது உபாதைகள் ஏற்பட்டபோதும் மாற்றுவீரா்கள் எவரும் இல்லாததால் கடுமையான நெருக்கடியை எதிர்நோக்கினர்.

ஆறாவது போட்டி காரைதீவு விவேகானந்த அணிக்கும், அம்பாரை ரஜவெவ அணிக்குமிடையில் இடம்பெறவிருந்தபோதும் விவேகானந்த அணி போட்டிக்கு சமூகமளிக்காமையினால் ரஜவெவ அணிக்கு வெற்றி வழங்கப்பட்டது.

ஏழாவது போட்டி கல்முனை சனிமௌன்ட் அணிக்கும், காத்தான்குடி பதுறியா அணிக்குமிடையில் இடம்பெற்றது. இதில் சனிமௌன்ட் அணி  5 -0 என்ற கோல்கள் அடிப்படையில் இலகுவான வெற்றியைப் பெற்றுக் கொண்டது.

எட்டாவது போட்டி காத்தான்குடி குளோபல் அணிக்கும், காத்தான்குடி முகைதீன் அணிக்குமிடையில் இடம்பெற்றது. இதில் குளோபல் அணி 3 -0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றி பெற்றபோதும் காத்தான்குடி குளோபல் அணி, சுற்றுப்போட்டி விதிமுறைகளை மீறியதனால் முகைதீன் அணிக்கு அடுத்த சுற்றில் விளையாடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஒன்பதாவது போட்டி ஏறாவுர் லக்கி ஸ்டார் அணிக்கும், ஏறாவுர் வை.எஸ்.எஸ்.ஸி அணிக்குமிடையில் இடம்பெற்றது. இதில் 4 -0 என்ற கோல்கள் அடிப்படையில் வை.எஸ்.எஸ்.ஸி அணி வெற்றி பெற்றது.

பத்தாவது போட்டி மருதமுனை ஈஸ்டன் யூத் அணிக்கும், திருக்கோவில் உதயசூரியன் அணிக்குமிடையில் இடம்பெறவிருந்தபோதும் போட்டி இடம்பெறவில்லை. இதனால் மருதமனை ஈஸ்டன் யூத் அணி இரண்டாவது சுற்றுக்குத் தெரிவானது.

பதினொராவது போட்டி மருதமுனை எவரெடி அணிக்கும், ஓட்டமாவடி வை.எஸ்.எஸ்.ஸி அணிக்குமிடையில் இடம்பெற்றது. இதில் 9 – 1 என்ற கோல்கள் அடிப்படையில் மிக இலகுவாக எவரெடி அணி வெற்றி பெற்றது.

பன்னிரண்டாவது போட்டி அட்டாளைச்சேனை சுப்பர் சொனிக் அணிக்கும், காத்தான்குடி சன்ரைஸ் அணிக்குமிடையில் இடம்பெற்றது. இதில் சன்ரைஸ் அணி 4 -1 என்ற கோல்கள் அடிப்படையில்  வெற்றி பெற்றது. இப்போட்டியில் போட்டி ஆரம்பமாகி 10 நிமிடத்திற்குள் சன்ரைஸ் அணி  மூன்று கோல்களைப் பெற்றபோதும் பின்னர் சுப்பர் சொனிக் அணி சிறப்பாக விளையாடியதனால்  மேலதிகமாக ஒரு கோலினையே சன்ரைஸினால் பெற முடிந்தது.

13ஆவது போட்டி கல்முனை லக்கி ஸ்டார் அணிக்கும், மருதமுனை யுனிவர்ஸ் அணிக்குமிடையில் இடம்பெற்றது. போட்டி ஆரம்பித்து 10 நிமிடத்திற்குள் லக்கி ஸ்டார் கோல் ஒன்றைப் பெற்றது. முன்கள வீரா் ஆஸீர் இந்த கோலினை அடித்தார். இதன் பின்னர் போட்டியின் 30ஆவது நிமிடத்தில் யுனிவர்ஸ் அணி கோல் ஒன்றைப் பெற்றது. இதனால் போட்டி சமநிலையில் காணப்பட்டது. இரண்டாவது பாதி ஆட்டத்திலும் இரு அணிகளும் எந்தவித கோலினையும் பெறாததால் பெனால்டி வழங்கப்பட்டு 5 -4 என்ற அடிப்படையில் யுனிவர்ஸ் அணி வெற்றி பெற்றது.

14ஆவது போட்டி மருதமுனை கிறின்மெக்ஸ் அணிக்கும், சவலக்கடை அமீர் அலி அணிக்குமிடையில் இடம்பெற்றது. இதில் போட்டியின் முழுமையான நேரத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோலினைப் பெற்றனதால் பெனால்டி வழங்கப்பட்டு 4 – 3 என்ற கோல்கள் அடிப்படையில் கிறின்மெக்ஸ் அணி வெற்றி பெற்றது.

15ஆவது போட்டி சாய்ந்தமருது பிளயிங்ஹோஸ் அணிக்கும், மருதமுனை மருதம் அணிக்குமிடையில் இடம்பெற்றது. இதில் 5 -2 என்ற கோல்கள் அடிப்படையில் பிளயிங்ஹோஸ் அணி வெற்றி பெற்றது.

முதல் சுற்றின் இறுதிப்போட்டி மருதமுனை கோல்ட் மைன்ட் அணிக்கும், கல்முனை பிர்லியன்ட் அணிக்குமிடையில் இடம்பெற்றது. இப்போட்டி எல்லோராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டதனால் கூடுதலான ரசிகர்கள் மைதானத்திற்கு வருகை தந்திருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.

போட்டி ஆரம்பித்து முதல் 10 நிமிடத்திற்குள் இரண்டு கோல்களை கோல்ட் மைன்ட் அடித்தது. பிர்லியன்ட் கோல் காப்பாளரின் கவனயீனமே இந்த இரண்டு கோல்களும் அடிப்பதற்கு காரணமாக அமைந்நது. பிர்லியன்ட் அணியினர் போட்டியை சமநிலைப்படுத்துவதற்காக கடுமையாகப் போராடிய போதிலும் கோல் பெறும் வாய்ப்பை தவறவிட்டனர். போட்டி முடிவதற்கு 15 நிமிடம் எஞ்சிய நிலையில் கோல்ட் மைன்ட் அணி இன்னும் இரண்டு கோல்களைப் பெற்றது. இதனால் 4 -0 என்ற கோல்கள் அடிப்படையில் கோல்ட் மைன்ட் அணி வெற்றி பெற்றது. கோல்ட் மைன்ட் சார்பாக நுவைஸ் மூன்று கோல்களையும், நுபைல் ஒரு கோலினையும் அடித்தனர்.

முதல் சுற்று முடிவில் ஆரம்ப கால் இறுப் போட்டிகள் ஆரம்பமாகியது.

இதில் கல்முனை சண்டோஸ் அணிக்கும், காத்தான்குடி நெசனல் அணிக்குமிடையிலான போட்டியில் 4 -0 என்ற கோல்கள் அடிப்படையில் காத்தான்குடி நெசனல் அணி வெற்றி பெற்றது.

நிந்தவுர் சோண்டர்ஸ் அணிக்கும், கல்முனை சனி மெளன்ட் அணிக்குமிடையிலான போட்டியில் இரு அணிகளும் சிறப்பாக விளையாடிய போதிலும் சனி மெளன்ட் அணிக்கு கோல் போடும் வாய்ப்புக்கள் பல கிடைத்த போதும் அதனை சனி மெளன்ட் வீரா்கள் சரியாகப் பயன்படுத்தவில்லை. போட்டி முடிவில் இரு அணிகளும் கோல் எதனையும் பெறாததால் பெனால்டி வழங்கப்பட்டு 2 – 1 என்ற கோல்கள் அடிப்படையில் சனி மௌன்ட் அணி வெற்றி பெற்றது.

மருதமுனை எவரெடி அணிக்கும், ஏறாவுர் வை.எஸ்.எஸ்.ஸி அணிக்குமிடையிலான போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் எவரெடி அணி மிகச்சிறப்பாக விளையாடியது. போட்டி நேர முடிவில் இரு அணிகளும் கோல் எதனையும் பெறாததால் பெனால்டி வழங்கப்பட்டு 4 -3 என்ற கோல்கள் அடிப்படையில் எவரெடி அணி வெற்றி பெற்றது. ஏறாவுர் வை.எஸ்.எஸ்.ஸி அணி இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் இரண்டாவது சுற்றுடன் இத்தொடரிலிருந்து வெளியேறியது.

மருதமுனை ஈஸ்டன் யூத் அணிக்கும், மருதமுனை கிறின் மெக்ஸ் அணிக்குமிடையிலான போட்டியில் கிறின் மெக்ஸ் அணி 1 -0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றி பெற்றது. ஈஸ்டன் யூத் அணியுடன் முரண்பட்டு அண்மையில் பிரிந்து சென்ற வீரர்களினால் ஆரம்பிக்கப்பட்டதுதான் கிறின் மெக்ஸ் அணியாகும். போட்டியில் இரு அணிகளும் ஆக்ரோசத்துடன் விளையாடினர். போட்டியின் நடுப்பகுதியில் கிறின் மெக்ஸ் அணி கோல் ஒன்றைப் பெற்றது. கோல் காப்பாளரின் கவனயீனமே இக்கோல் போவதற்கான காரணமாக அமைந்தது. இறுதி நேரத்தில் போட்டியை சமப்படுத்துவதற்காக ஈஸ்டன் யூத் அணி கடுமையாக போராடிய போதிலும் அவர்களின் முயற்சி கைகொடுக்கவில்லை.

சாய்ந்தமருது பிளயிங்ஹோஸ் அணிக்கும், மருதமுனை யுனிவர்ஸ் அணிக்குமிடையிலான போட்டியில் 3 -1 என்ற கோல்கள் அடிப்படையில் பிளயிங்ஹோஸ் அணி வெற்றி பெற்றது.

மருதமுனை ஒலிம்பிக் அணிக்கும், நிந்தவுர் கென்ட் அணிக்குமிடையிலான போட்டியில் 3 – 1 என்ற கோல்கள் அடிப்படையில் ஒலிம்பிக் அணி வெற்றி பெற்றது.

மருதமுனை கோல்ட் மைன்ட் அணிக்கும், காத்தான்குடி சன்ரைஸ் அணிக்குமிடையிலான போட்டியில் 4 -1  என்ற கோல்கள் அடிப்படையில் கோல்ட் மைன்ட் அணி வெற்றி பெற்றது.

ஆரம்ப கால் இறுதிப் போட்டியின் கடைசிப்போட்டி இன்று மாலை அம்பாரை ரஜவெவ அணிக்கும், காத்தான்குடி குளோபல் அணிக்குமிடையில் இடம்பெறவுள்ளதுடன் நாளை வெள்ளிக்கிழமை சுப்பர் 8 போட்டிகள் ஆரம்பமாகின்றன.

பத்தாவது முறையாகவும் ஸ்பானிய சுப்பர் கிண்ணத்தை வென்றது ரியல் மெட்ரிட்

ரியல் மெட்ரிட் கால்பந்துக் கழக அணி தனது மிகப் பெரிய போட்டியாளரான பார்சிலோனாவை இரண்டாம் கட்டப் போட்டியில் 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன்மூலம் மொத்தம் 5-1 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றி பெற்று ஸ்பானிய சுப்பர் கிண்ணத்தை பத்தாவது தடவையாகவும் சுவீகரித்துக்கொண்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த முதல் கட்ட இறுதிப் போட்டியில் ரியல் மெட்ரிட் அணி 3-1 என வெற்றி பெற்றிருந்த நிலையிலேயே, மெட்ரிட் நகரில் புதன்கிழமை (16) நடந்த இரண்டாவது கட்ட போட்டியிலும் ரியல் மெட்ரிட் ஆதிக்கம் செலுத்தியது.

மென்செஸ்டர் யுனைடெட் கழகத்திற்காக விளையாடும் உசேன் போல்ட்

உலகின் அதிவேக வீரரும், கடந்த வாரம் சர்வதேச மெய்வல்லுனர் அரங்கிலிருந்து ஓய்வு பெற்றவருமான ஜமைக்காவின் உசேன் போல்ட் மிக விரைவில் கால்பந்து விளையாட்டில் களமிறங்கவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன . உலகின் முன்னணி போட்டிகளில் ஒன்றாகக் கருதப்படும் UEFA ஸ்பனிஷ்.. உலகின் மிக வேகமான வீரரான உசைன் போல்ட் பங்கேற்ற தனது கடைசி போட்டியில்…