பயிற்சியாளர் பதவியை மறுத்த கிலெஸ்பி

932
Jason Gillespie
Couresty - Eurosport

டெஸ்ட் போட்டிகளில் 20க்கும் குறைவான துடுப்பாட்ட சராசரியைக் கொண்ட வீரர்களில் இரட்டை சதம் அடித்தவர் என்ற பெருமைக்குரிய அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் கிலெஸ்பி.

அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராவார் என்று பலரால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,அதை கிலெஸ்பி மறுத்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணிக்காக 1996ஆம் ஆண்டு தொடக்கம் 2006ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டு காலங்களில் 71 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள வலதுகை வேகப்பந்து வீச்சாளரான கிலெஸ்பி 259 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார். தற்போது இங்கிலாந்து கவுண்டி அணியான யார்க்ஷைர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக உள்ளார். இவரது தலைமையில் யார்க்ஷைர் அணி சிறப்பாக விளையாடிவருகிறது.

இலங்கைக்கு எதிரான அவுஸ்திரேலிய டெஸ்ட் குழாம்

அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக இருந்தவர் கிரேக் மெக்டெர்மோட். இவரது பதவிக்காலம் இந்தியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கிண்ணத் தொடருடன் முடிவடைந்தது. அதன்பின் அந்த அணிக்கு பந்துவீச்சுப் பயிற்சியாளராக யாரும் நியமிக்கப்படவில்லை.

அவுஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் டேரன் லீமன், கிலெஸ்பியை அந்த இடத்திற்குக் கொண்டுவர முயற்சி செய்கிறார் என்ற தகவல் வெளியானது.

இதை கிலெஸ்பி தற்போது நிராகரித்துள்ளார். இது தொடர்பாக ஜேசன் கிலெஸ்பி பேசுகையில்அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை சார்பில் என்னை யாரும் அணுகவில்லை. அத்துடன் யார்க்ஷைர் அணியின் பயிற்சியாளராக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறதுஎன்று அவர் கூறியுள்ளார். இதனால், ஜேசன் கிலெஸ்பி அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் ஆகமாட்டார் என்பது உறுதியாகிவிட்டது.

சம்பியனான ஹைதராபாத் இன்னுமொரு சாதனை

ஜூலை மாத இறுதியில் அவுஸ்திரேலிய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறது. இதற்காக தென் ஆபிரிக்கா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் எலன் டொனால்ட் பந்துவீச்சுப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்