இலங்கை கிரிக்கெட் தேர்வாளராகும் உபுல் தரங்க

Sri Lanka Cricket

684
Upul Tharanga

இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவின் புதிய தலைமை அதிகாரியாக உபுல் தரங்க நியமனம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

>> தேசிய விளையாட்டுப் பேரவையின் புதிய அங்கத்தவர்கள் நியமனம்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆரம்பத் துடுப்பாட்டவீரரும் தலைவருமான உபுல் தரங்க இலங்கையின் புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவின் பணிப்புரையின் பேரிலேயே, உபுல் தரங்க இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு தலைமை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கின்றது. எனினும் கிரிக்கெட் தேர்வுக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் குறித்த அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

கடந்த 2021ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வாளர்களாக முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ப்ரமோத்ய விக்ரமசிங்க தலைமையிலான குழு செயற்பட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தக் குழுவில் முன்னாள் அதிரடி வீரர் ரொமேஷ் களுவிதாரன உள்ளிட்டோர் அடங்கியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.  

இலங்கை அணிக்காக மொத்தமாக 292 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடியிருக்கும் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான  உபுல் தரங்க அவற்றில் 18 சதங்களுடன் 9,000 இற்கு மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<