தேசிய அரங்கில் பிரகாசித்த கண்டி மாவட்டத்தினைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களுக்கு கெளரவம் வழங்கும் வருடாந்த நிகழ்வில் இளம் வீர,வீராங்கனைகள் பலர் கெளரவிக்கப்பட்டுள்ளனர்.
>>வளர்ந்து வரும் மகளிர் ஆசிய கிண்ணத் தொடர் ஒத்திவைப்பு<<
கடந்த 2024ஆம் ஆண்டு சர்வதேச அரங்கில் சாதித்த வீர, வீராங்கனைகளே இந்த நிகழ்வின் ஊடாக கெளரவிக்கப்பட்தோடு, இந்த நிகழ்வு இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) “கிரிக்கெட் கமட்ட” செயல் திட்டத்தின் ஒரு அங்கமாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
கெளரவ நிகழ்வில் இலங்கை கனிஷ்ட கிரிக்கெட் அணிக்காக போட்டிகளில் ஆடிய தர்மராஜ கல்லூரி வீரர் புலிந்து பெரேரா, மஹமாய கல்லூரி வீராங்கனை அஷேனி தலகுனே ஆகியோர் கெளரவிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு மேலதிகமாக கண்டி மாவட்டத்தினைச் சேர்ந்த கெனுல பிஹிலங்க (கிங்ஸ்வூட் கல்லூரி), ரயான் கிரகெரி (புனித அந்தோனியார் கல்லூரி), சேத்மிக செனவிரத்ன (திரித்துவ கல்லூரி), செஷான் மாரசிங்க (தர்மராஜ கல்லூரி), திசர ஏக்கநாயக்க (சென். அந்தோனியர் கல்லுாரி), கவீஜ கமகே (கிங்ஸ்வூட்), லக்ஷான் அபேய்சிங்க (தர்மராஜ கல்லூரி) மற்றும் சுப்புன் வடுகே (திரித்துவ கல்லுாரி) ஆகியோரும் அவர்களின் கனிஷ்ட அணிகளின் பங்களிப்பிற்காக கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<