PSL 2020: லாஹூர் அணியில் இலங்கை சீக்குகே பிரசன்ன

174
Image courtesy : Gettyimages

அடுத்த வருடம் (2020) நடைபெறவுள்ள பாகிஸ்தான் சுப்பர் லீக் (PSL) கிரிக்கெட் தொடருக்காக இலங்கையிலிருந்து ஒரேயொரு வீரராக பந்துவீச்சு சகலதுறை வீரர் சீக்குகே பிரசன்ன நான்காம் தெரிவில் (சில்வர்) லாஹூர் கலாண்டர்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார். 

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் வருடா வருடம் நடைபெற்றுவரும் லீக் தொடரான பாகிஸ்தான் சுப்பர் லீக் (PSL) தொடரின் ஐந்தாவது பருவகாலத்திற்கான தொடர் அடுத்த வருடம் பெப்ரவரியில் ஆரம்பமாகவுள்ளது. இதற்காக போட்டிகளில் பங்குபற்றும் வீரர்களை கொள்வனவு செய்வதற்கான ஏலம் நேற்று (06) லாஹூரில் நடைபெற்றது.

கோஹ்லியின் அதிரடி துடுப்பாட்டத்தால் வெற்றி இலக்கை இலகுவாக கடந்த இந்தியா

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டி20 சர்வதேச……

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் வெற்றிகரமாக 4 பருவகாலங்களை நிறைவு செய்துள்ள பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் மொத்தமாக ஆறு அணிகள் (இஸ்லாமாபாத் யுனைடெட், கராச்சி கிங்ஸ், லாஹூர் கலாண்டர்ஸ், முல்தான் சுல்தான்ஸ், பெஷாவர் ஷல்மி, குவெட்டா கிளாடியேட்டர்ஸ்) பங்கேற்கின்றன. அந்த அடிப்படையில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள தொடருக்காக குறித்த ஆறு அணிகளும் வீரர்களை ஏலத்தின் அடிப்படையில் கொள்வனவு செய்தன. 

அடுத்த பருவகாலத்திற்கான தொடரில் ஆறு அணிகளிலும் மொத்தமாக 107 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் ஒவ்வொரு அணிகளிலும் தக்க வைக்கப்பட்ட வீரர்களில் மொத்தமாக 45 வீரர்கள் காணப்படுகின்றனர். இதிலிருந்து ஏனைய வீரர்களை தெரிவு செய்வதற்கான ஏலமே நேற்று (06) நடைபெற்றது.

அடுத்த வருட பி.எஸ்.எல் தொடரில் ஆறு அணிகளிலும் 35 வீரர்கள் பாகிஸ்தான் தவிர்ந்த வெளிநாடுகளை சேர்ந்தவர்களாக காணப்படுகின்றனர். இதில் அதிகூடிய வீரர்கள் இங்கிலாந்திலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 14 வீரர்கள் இவ்வாறு இங்கிலாந்திலிருந்து பி.எஸ்.எல் தொடரில் பங்கேற்கின்றனர். 

அதனை தொடர்ந்து தென்னாபிரிக்க நாட்டிலிருந்து 7 வீரர்களும், அவுஸ்திரேலிய மற்றும் மேற்கிந்திய தீவுகளிலிருந்து தலா 5 வீரர்கள் வீதமும், நியூசிலாந்திலிருந்தின் இரு வீரர்களும், இலங்கை மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து தலா ஒவ்வொரு வீரரும் பி.எஸ்.எல் தொடரில் பங்கேற்கின்றனர். 

கோஹ்லியின் அதிரடி துடுப்பாட்டத்தால் வெற்றி இலக்கை இலகுவாக கடந்த இந்தியா

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டி20 சர்வதேச…..

முதல் தெரிவான பிளட்டினம் தெரிவில் ஜெசன் ரோய் (குவெட்டா), கிறிஸ் லைன் (லாஹூர்), மொயின் அலி (முல்தான்) ரியல்லி ரொஸ்ஸோவ் (முல்தான்), டேல் ஸ்டைன் (இஸ்லாமாபாத்), கொலின் இன்கிரம் (இஸ்லாமாபாத்), அலெக்ஸ் ஹெய்ல்ஸ் (கராச்சி) ஆகியோர் குறித்த அணிகளினால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதேவேளை குறித்த முதல் தெரிவில் பெஷாவர் ஷல்மி அணியினால் எந்த வீரர்களும் கொள்வனவு செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ஆறு அணிகளிலும் இடம்பெற்றுள்ள வீரர்கள் விபரம்.

இஸ்லாமாபாத் யுனைடெட் சதாப் கான், பஹீம் அஷ்ரப், ஆசிப் அலி, லுக் ரோஞ்சி (நியூசிலாந்து), ஹூஸைன் தலத், அம்மட் பட், றிஸ்வான் ஹூஸைன், முஸா கான், டேல் ஸ்டைன் (தென்னாபிரிக்கா), கொலின் இன்கிரம் (தென்னாபிரிக்கா), கொலின் முன்ரோ (நியூசிலாந்து), ருமான் றயீஸ், பில் சால்ட் (இங்கிலாந்து), ஸபார் கொஹார், ஆகிப் ஜாவீட், அஹமட் ஸாபி அப்துல்லாஹ், சயிப் பதார், ரைஸ் வென் டர் டைஸன் (தென்னாபிரிக்கா)

கராச்சி கிங்ஸ்பாபர் அஸாம், மொஹமட் ஆமிர், இமாட் வஸீம், இப்திகார் அஹமட், ஆமிர் யாமின், உஸாமா மிர், உமேர் கான், அலெக்ஸ் ஹெய்ல்ஸ் (இங்கிலாந்து), கிறிஸ் ஜோர்தான் (இங்கிலாந்து), சர்ஜீல் கான், கொமரொன் டெல்போர்ட் (தென்னாபிரிக்கா), மொஹமட் றிஸ்வான், உமைட் ஆசிப், டான் லோரன்ஸ் (இங்கிலாந்து), அலி கான் (ஐ.அமெரிக்கா), அர்ஸாட் இக்பால், லியன் பிளன்கட் (இங்கிலாந்து), அவைஸ் ஷியா 

லாஹூர் கலாண்டர்ஸ் பகர் ஸமான், மொஹமட் ஹபீஸ், டேவிட் வைஸி (தென்னாபிரிக்கா), ஸஹீன் ஸாஹ் அப்ரிடி, உஸ்மான் ஸென்வாரி, சுஹைல் அக்தார், ஹாரிஸ் ரௌப், சல்மான் பட், கிறிஸ் லைன் (அவுஸ்திரேலியா), சமிட் படேல் (இங்கிலாந்து), சீக்குகே பிரசன்ன (இலங்கை), பென் டங் (அவுஸ்திரேலியா), பர்ஸான் ராஸா, ஜாஹிட் அலி, மொஹமட் பைஸான், லென்டில் சிம்மன்ஸ் (மேற்கிந்திய தீவுகள்), டில்பார் ஹூஸைன்

இலங்கையில் உள்ள திறமைகளை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது – மிக்கி ஆத்தர்

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மிக்கி…

முல்தான் சுல்தான்ஸ் சஹீட் அப்ரிடி, மொஹமட் இர்பான், ஜேம்ஸ் வின்ஸ் (இங்கிலாந்து), ஜூனைட் கான், ஷான் மஸூத், அலி ஷபீக், மொஹமட் இல்லியாஸ், மொயின் அலி (இங்கிலாந்து), ரியல்லி ரொஸ்ஸோவ் (தென்னாபிரிக்கா), ஸீஸ்ஹான் அஸ்ரப், ரவி பொபாரா (இங்கிலாந்து), சுஹைல் தன்வீர், கௌஸ்தில் ஷா, உஸ்மான் காதிர், பெபியன் அலன் (மேற்கிந்திய தீவுகள்), ரொஹைல் நாஸிர், இம்ரான் தாஹிர் (தென்னாபிரிக்கா), பிலாவல் பாத்தி

பெஷாவர் ஷல்மி வஹாப் றியாஸ், ஹசன் அலி, கிரன் பொல்லார்ட் (மேற்கிந்திய தீவுகள்), கம்ரான் அக்மல், டெரன் ஸமி (மேற்கிந்திய தீவுகள்), இமாம் உல் ஹக், உமர் அமீன், டொம் பென்டன் (இங்கிலாந்து), சுகைப் மலிக், லியம் டௌசன் (இங்கிலாந்து), மொஹமட் முஹ்ஸின், ரஹாத் அலி, டுவைன் பிரிடோரியஸ் (தென்னாபிரிக்கா), ஆதில் அமீன், அமிர் கான், ஆமிர் அலி, லியன் லிங்விங்ஸ்டோன் (இங்கிலாந்து), ஹைதர் அலி கான் 

குவெட்டா கிளாடியேட்டர்ஸ் சர்ப்ராஸ் அஹமட், மொஹமட் நவாஸ், ஷேன் வொட்சன் (அவுஸ்திரேலியா), அஹமட் ஷெஹ்ஸாட், உமர் அக்மல், மொஹமட் ஹஸ்னைன், நஸீம் ஷாஹ், அஹ்ஸன் அலி, ஜெசன் ரோய் (இங்கிலாந்து), பென் கட்டிங் (அவுஸ்திரேலியா), பவாட் அஹமட், சுஹைல் கான், டைமல் மில்ஸ் (இங்கிலாந்து), அப்துல் நாஸிர், ஆரிஸ் கான், கிமோ போல் (மேற்கிந்திய தீவுகள்), குர்ரம் மன்சூர் 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<