பெதும் நிஸ்ஸங்க விளையாடும் முதல் வெளிநாட்டு T20 லீக் தொடர்

2149

இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் துடுப்பாட்டவீரர்களில் ஒருவரான பெதும் நிஸ்ஸங்க, தன்னுடைய முதல் வெளிநாட்டு T20 லீக் தொடரில் ஒப்பந்தமாகியிருக்கின்றார்.

இரண்டாவது முறையாக T20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய இங்கிலாந்து

அந்தவகையில் பெதும் நிஸ்ஸங்கவினை பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) T20 தொடரில் 2023ஆம் ஆண்டின் பருவகாலத்தில் ஆடுவதற்கு ரங்பூர் ரைடர்ஸ் அணி ஒப்பந்தம் செய்திருக்கின்றது.

அதேவேளை பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரின் 2023ஆம் ஆண்டுக்கான பருவகாலத்திற்கான போட்டிகள் 2023ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே பெதும் நிஸ்ஸங்கவின் ஒப்பந்தமும் இடம்பெற்றிருக்கின்றது.

பெதும் நிஸ்ஸங்க இலங்கை அணிக்காக T20 உலகக் கிண்ண போட்டிகளில் ஆடிய போது சிறந்த துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியிருந்ததோடு, தற்போது T20I துடுப்பாட்டவீரர்கள் வரிசையில் முதல் 10 இடங்களுக்குள் இருக்கும் ஒரே இலங்கை வீரராகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ரமேஷ் சதமடிக்க; 1000 ஓட்டங்கள் மைல்கல்லை எட்டினார் பசிந்து

இதேவேளை ரங்க்பூர் ரைடர்ஸ் அணிக்காக முன்னர் இலங்கை கிரிக்கெட் அணியினைச் சேர்ந்த சுழல்பந்துவீச்சாளர் ஜெப்ரி வன்டர்செய் ஒப்பந்தமாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<