Pathum and Mishen

19 வயதிற்குட்பட்டோருக்கான 2 நாட்களைக் கொண்ட  சுப்பர் 19 மாகாண கிரிக்கட் போட்டித் தொடரின்  4 போட்டிகள் நேற்று ஆரம்பமாகின.

இஸிபத்தன கல்லூரி வீரர் பத்தும் நிசங்க மற்றும் புனித செபஸ்டியன் கல்லூரி வீரர் மிஷேன் சில்வா ஆகியோர் தாம் விளையாடிய அணிக்காக சதம் விளாசி இருந்தாலும் நடைபெற்ற நான்கு போட்டிகளிலும் மழையினால் பாதிக்கப்பட்டன.

மேல் மாகாண வட அணி எதிர் மேல் மாகாண மத்திய அணி

கொழும்பு வெஸ்லி கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற மேல் மாகாண வட அணி மற்றும் மேல் மாகாண மத்திய அணிகளுக்கு இடையிலான போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது. இப்போட்டியில் மேல் மாகாண மத்திய அணியில் விளையாடும் 17வயது நிரம்பிய இஸிபத்தன கல்லூரி வீரர் பத்தும் நிசங்க மிகச் சிறப்பாக விளையாடி சததத்தை பூர்த்தி செய்து இருந்தார்.

மேல் மாகாண மத்திய அணி – 291/9 (65 ஓவர்களில்)

தனுக தபரே 35, பசிந்து சூரியபண்டார 71, பத்தும் நிஸ்ஸங்க 128, ஜெஹன் டேனியல் 4/84, சம்மு அஷான் 3/62

மேல் மாகாண வடக்கு அணி – 94/3 (24.2 ஓவர்களில்)

நிப்புன் சுமணசிங்க 23, சம்மு அஷான் 55*, நிரஞ்சன் வன்னியாராச்சி 2/24.

மேல் மாகாண தெற்கு அணி எதிர் வட மத்திய மாகாண அணி

பானதுற விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்ற மேல் மாகாணம் தெற்கு அணி மற்றும் வட மத்திய மாகாண அணிகளுக்கு இடையிலான போட்டியில் மேல் மாகாண தெற்கு அணியின் மத்திய தர வரிசை துடுப்பாட்ட வீரர் மிஷேன் சில்வாவின் சதத்தின் உதவியோடு முதல் இனிங்ஸில் வட மத்திய மாகாண அணியை வென்றது மேல் மாகாண தெற்கு அணி.

வட மத்திய மாகாண அணி – 181/10 (51.1 ஓவர்களில்)

புபுது பண்டார 35, லக்ஷான் களுதீர 27, தசுன் செனவிரத்ன 26, நிபுன் லக்ஷான் 38, இரோஷ கேசான் 2/18, டிலேஷ் நாணயக்கார 2/45, திலன் நிமேஷ் 4/56.

மேல் மாகாண தெற்கு அணி  – 271/7 (54 ஓவர்களில்)

விஸ்வ சதுரங்க 25, நுவனிது பெர்னாண்டோ 58, மிஷேன் சில்வா 103, மலிந்த ஜயோத் 38, நிபுன் லக்ஷான் 2/54, சச்சின் திசாநாயக 3/38, ரவினத்து  இலங்கசிங்ஹ 2/33.

ஊவா மாகாண அணி எதிர் வட மாகாண அணி

மத்தேகொட ராணுவ விளையாட்டு மைதானத்தில்.நடைபெற்ற இப்போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி வட மாகாண அணி வெற்றியின் விளிம்பில் இருந்தாலும் மழை குறுக்கிட்டதன் காரணாமாகப் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவு பெற்றது.

வட மாகாண அணி 176/10 (63.1 ஓவர்களில்)

அயன சிறிவர்தன 23, ஸ்டீபன் ஜெனிபிளெமிங் 21, தேவபிரசாந்த் 18, ஜதூசன்  38, கபில் ராஜ் 23, அவிந்து தீக்ஷன  7/51.

ஊவா மாகாண அணி – 127/9 (47 ஓவர்களில்) 

அவிந்து தீக்ஷன 35, கயனா பிரீதிமல் 36, மாபா மலிந்து 22*, பிரவீண் ஜயவிக்ரம 4/23, கபில் ராஜ் 3/32.

மத்திய மாகாண அணி எதிர் கிழக்கு மாகாண அணி

டி மெஸ்னட் கல்லூரி அணியின் லசித் க்ரொஸ்புள்ளே மற்றும் தேர்ஸ்டன் கல்லூரி அணியின் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் நவீன் குணவர்த்தன ஆகியோர் பிரகாசித்த மத்திய மாகாண அணி மற்றும் கிழக்கு மாகாண அணிப் போட்டி மழை காரணமாக வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது.

மத்திய மாகாண அணி – 162/10 (46.3 ஓவர்களில்)

பவந்த உடன்கமுவ 37, முஹமத் அல்பர் 35, ஷனொகீத் 28, கஜித கொட்டுவேகொட 20, நவீன் குணவர்தன 6/35, தெஷான் பெர்னாண்டோ 2/25.

கிழக்கு மாகாண அணி – 125/4 (33.5 ஓவர்களில்)

லசித் க்ரொஸ்புள்ளே  67*, டொரின் பிட்டிகல 21*