ரசிகர்களின்றி IPL தொடர் நடைபெற ஆதரவு வழங்கும் பெட் கம்மின்ஸ்

74
Pat Cummins

இந்தியாவில் வருடாந்தம் நடைபெறும் இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடர் இம்முறை இரசிகர்கள் இல்லாமல் நடத்தப்பட்டாலும், தன்னுடைய ஆதரவை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக ஆஸி. வீரர் பெட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.  

ஊரடங்கு உத்தரவை மீறிய இந்திய வீரர் ரிஷி தவானுக்கு அபராதம்

பிரப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே காரில் சுற்றிய இந்திய

ஐ.பி.எல். தொடர் கடந்த மாதம் 29ம் திகதி ஆரம்பிக்கவிருந்தது. எனினும், கொவிட்-19 காரணமாக எதிர்வரும் 15ம் திகதிவரை போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதேநேரம், குறித்த திகதியும் பிற்போடப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், இரசிகர்களின் பாதுகாப்பை கருதி ஐ.பி.எல். தொடர் இரசிகர்கள் இல்லாமல் நடத்தப்படுமானலும் தன்னுடைய ஆதரவை வழங்கவுள்ளதாக பெட் கம்மின்ஸ் குறிப்பிட்டுள்ளார். இரசிகர்கள் இல்லாமல் போட்டியொன்றை நடத்துவது இலகுவானதல்ல என்றாலும், கிரிக்கெட்டை மீண்டும் கொண்டுவருவதற்கு இவ்வாறு போட்டிகளை நடத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் நிலை பந்துவீச்சாளராக உள்ள பெட் கம்மின்ஸ், இம்முறை ஐ.பி.எல். தொடரில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார். அத்துடன், விஸ்டன் வழங்கிய இவ்வருடத்துக்கான சிறந்த ஐந்து வீரர்களில் ஒருவராகவும் இருந்தார்.

ஐ.பி.எல். தொடர் நடைபெறும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ள இவர், குறித்த தொடர் விரைவாக நடைபெறும் என்றால் அது அவரை ஆச்சரியப்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பெட் கம்மின்ஸ் மேலும் குறிப்பிடுகையில், “போட்டிகளை நடத்தும் போது முக்கியமான முதல் விடயம் அனைவரதும் பாதுகாப்பு. அதையடுத்து கிரிக்கெட்டை மீண்டும் வழமைக்கு கொண்டுவந்து, நிலைமையை சரிசெய்ய வேண்டும்.

துரதிஷ்டவசமாக இரசிகர்களை மைதானத்துக்கு கொண்டுவரும் வாய்ப்பு எமக்கு கிடைக்காத பட்சத்தில், தொலைக்காட்சி மூலம் அவர்களுக்கு போட்டியை கண்டுகளிக்க முடியும். ஆனால், அதுவொரு வித்தியாமான உணர்வாக இருக்கும். காரணம், இந்தியாவில் போட்டிகளில் விளையாடும் போது வித்தியாசமான உணர்வை ஏற்படுத்துபவர்கள் இரசிகர்கள்தான். 

அதுமாத்திரமின்றி, இந்தியாவில் விளையாடும் போது ஆட்டமிழப்பாக இருந்தாலும், சிக்ஸராக இருந்தாலும் இரசிகர்களின் சத்தம் ஒரே மாதிரியானதாக இருக்கும். இந்த உணர்வானது இந்தியாவில் கிரிக்கெட் விளையாடுவதை விரும்பச் செய்கிறது.  ஆனால், இம்முறை ஐ.பி.எல். நடைபெற்றால் இரசிகர்கள் இருப்பதற்கான வாய்ப்பு குறைவு. இரசிகர்கள் இல்லாவிட்டாலும், இந்த தொடரானது மிகச்சிறந்த தொடராகவே அமையும்” என்றார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் ஆரம்பமாகி, எதிர்வரும் மாதம் 24ம் திகதி நிறைவுபெறவிருந்ததுடன், ஒட்டுமொத்தமாக 60 போட்டிகளில் விளையாடப்படவிருந்தன. எனினும், இப்போது இந்த போட்டித் தொடரானது கொவிட்-19 காரணமாக பிற்போடப்பட்டுள்ளது. 

மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க