இலங்கையில் இடம்பெறும் நான்கு நாடுகள் பங்கேற்கும் கால்பந்து தொடர்

Mahinda Rajapaksa trophy four nations tournament

174

இலங்கை, பங்களாதேஷ், மாலைதீவுகள் மற்றும் சீசெல்ஸ் ஆகிய நாடுகள் பங்கேற்கும் கால்பந்து தொடர் எதிர்வரும் 8ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை இலங்கையில் இடம்பெறவுள்ளது.

”பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ணம்” என்ற பெயரில் இடம்பெறவுள்ள இந்தத் தொடரின் போட்டிகள் அனைத்தும் கொழும்பு குதிரைப் பந்தயத் திடல் அரங்கில் (Race Course Stadium) இடம்பெறும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இறுதியாக கடந்த மாதம் மாலைதீவுகளில் நடைபெற்று முடிந்த தெற்காசிய கால்பந்து சம்மேளன (SAFF) கிண்ணத் தொடரில் பங்கேற்ற இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மாலைதீவுகள் அணிகள் மேலதிகமாக கிழக்கு ஆபிரிக்க நாடான சீசெல்ஸ் அணியுடன் இணைந்து இந்த தொடரில் போட்டியிடுகின்றது.

லீக் முறையில் இடம்பெறவுள்ள இந்த தொடரில் நான்கு அணிகளும் எதிரணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் போட்டிகள் இம்மாதம் 8ஆம், 11ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் இடம்பெறும். குறித்த திகங்களில் மாலை 4 மணிக்கு முதல் போட்டியும் இரவு 9 மணிக்கு இரண்டாவது போட்டியும் இடம்பெறும். லீக் சுற்று நிறைவில் முதல் இரண்டு இடங்களையும் பெறும் அணிகள் இம்மாதம் 17ஆம் திகதி இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில் மோதுவதற்குத் தகுதி பெறும். இறுதிப் போட்டி 19ஆம் திகதி இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும்.

தொடரில் பங்கேற்கும் மாலைதீவுகள் அணி பிபாவின் அணிகளுக்கான தரவரிசையில் 156ஆவது இடத்திலும், பங்களாதேஷ் அணி 187ஆவது இடத்திலும், சீசெல்ஸ் அணி 199ஆவது இடத்திலும் இருக்கும் அதேவேளை இலங்கை அணி 204ஆவது இடத்தில் உள்ளது.

எனவே, இந்தத் தொடரில் இடம்பெறும் போட்டிகளில் வெற்றிகளைப் பெறும் பட்சத்தில் இலங்கை கால்பந்து அணிக்கு பிபா தரப்படுத்தலில் முன்னேற்றம் காண்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

இந்தத் தொடர் குறித்த உடனடித் தகவல்கள், போட்டி முடிவுகள் மற்றும் புகைப்படங்களைப் பெற்றுக் கொள்ள ThePapare.com உடன் இணைந்திருங்கள்.

* இதில் இறுதிப் போட்டி மாத்திரம் 19ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

போட்டித் தொடருக்கான அட்டவணை

>> மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க <<