பிரப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே காரில் சுற்றிய இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷி தவானுக்கு அந்நாட்டு பொலிஸார் அபராதம் விதித்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய இமாச்சல பிரதேச மாநில கிரிக்கெட் வீரரான ரிஷி தவான், இவ்வாறு ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக 500 ரூபாய் அபராதம் செலுத்தியுள்ளார்.
கௌண்டி அணியிலிருந்து நீக்கப்பட்ட செட்டேஸ்வர் புஜாரா!
இங்கிலாந்தில் நடைபெறவிருந்த………………
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்தியாவிலும் கடந்த மாதம் 24ஆம் திகதியில் இருந்து 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த 21 நாட்களும் பொதுமக்கள் அத்தியவசிய பொருட்களை வாங்குவதை தவிர ஏனையவற்றுக்காக வெளியே வரவேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், பொதுமக்கள் கொரோனா வைரஸின் தீவிரத்தை உணராமல் வீதியில் உலா வருகின்றனர். இதனால் விதிமுறையை மீறும் நபர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்திய அணிக்காக விளையாடிய ரிஷி தவான் கடந்த வியாழக்கிழமை (09) இமாச்சல பிரதேசத்தில் மண்டி நகரில் தனது வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது பொலிஸார் அவரது வாகனத்தை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அதன்போது அவர் வெளியே செல்வதற்கான சரியான காரணத்தை கூறவும் இல்லை. அதேபோன்று, அதற்கான அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ளவுமில்லை என்று தெரியவந்தது.
இதனால் பொலிஸார் அவருக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து, கடுமையாக எச்சரிக்கை விடுத்து அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய அணிக்காக 2016இல் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும், ஒரு டி20 போட்டியிலும் விளையாடியுள்ள 28 வயதான ரிஷி தவான், ஐ.பி.எல் கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
கடந்த இரண்டு பருவகாலங்களாக எந்தவொரு ஐ.பி.எல் அணிகளாலும் ஏலத்தில் வாங்கப்படாத இவர், இறுதியாக 2018ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினால் 55 இலட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
அத்துடன், 68 டி20 போட்டிகளிலும், 59 முதல்தர போட்டிகளிலும், 58 லிஸ்ட் ஏ போட்டிகளிலும் ரிஷி தவான் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இமாச்சல மாநில அரசின் கொரோனா வைரஸ் நிதியத்துக்கு கடந்த மார்ச் மாதம் 30ஆம் திகதி ஒரு இலட்சம் ரூபா நிதியினை ரிஷி தவான் வழங்கியிருந்தமை சிறப்பம்சமாகும்.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க