ஒன்பது விரல்களுடன் இந்தியாவுக்கு விளையாடிய பார்த்திவ் பட்டேல்

135
Parthiv Patel

இந்திய அணியின் விக்கெட் காப்பாளர்களில் ஒருவராக இருந்த பார்த்திவ் பட்டேல், தன் கைகளில் ஒன்பது விரல்கள் மட்டுமே இருந்ததாகவும், அந்த நிலையில் இந்திய அணிக்கு விளையாடக் கிடைத்தமையை மிகவும் பெருமையாக கருதுவதாகவும் கூறியுள்ளார்.  

அத்துடன், 9 விரல்களுடன் விக்கெட் காப்பு செய்வது கடினம் என குறிப்பிட்டுள்ள அவர், கிளவுஸை (கையுறைகள்) அணிந்து கொண்டு சமாளித்துக் கொண்டு விளையாடியதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்திய வீரர்கள் அவர்களுக்காகவே கிரிக்கெட் ஆடினர் – இன்சமாம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான இன்சமாம்-உல்-ஹக்

சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து மிக இளம் வயதில் இந்திய அணியில் அறிமுகம் ஆனவர் பார்த்திவ் பட்டேல். விக்கெட் காப்பாளராக சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 2002ஆம் ஆண்டு தன் 17 வயதில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டியில் அறிமுகம் ஆனார்

2003 உலகக் கிண்ணத் தொடரில் இந்திய அணியில் மாற்று வீரராக இடம்பெற்ற அவருக்கு இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடி தன் முத்திரையை பதிக்க முடியாமல் போனது

அதிலும் குறிப்பாக, டோனி அணிக்கு வந்த பின் பார்த்திவ் பட்டேல் இந்திய அணிக்கு திரும்பும் வாய்ப்பு குறைந்தது

தொடர்ந்து உள்ளூர் போட்டிகள் மற்றும் .பி.எல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்த அவருக்கு 2018ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது

எனினும், அதன் பின் அவர் இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு பெறவில்லை. 35 வயதான நிலையில் அவர் உள்ளூர் போட்டிகளில் குஜராத் அணியின் தலைவராகச் செயற்பட்டு வருகிறார்.  

இறுதியாக நடைபெற்ற 2016-17 பருவகாலத்துக்கான ரஞ்சி கிண்ண இறுதிப் போட்டியில் மும்பை அணிக்கெதிராக 90 மற்றும் 143 ஓட்டங்களைக் குவித்த அவர். அணிக்கு சம்பியன் பட்டத்தை வென்று கொடுத்து போட்டியின் ஆட்டநாயகனாகவும் தேர்வாகினார்

இந்த நிலையில், சமீபத்தில் இன்ஸ்ட்ராகிராமில் வழங்கிய நேரடி கலந்துரையாடல் ஒன்றில் தன் கையில் ஒன்பது விரல்கள் மட்டுமே உள்ளது பற்றி முதல்முறையாக கூறியுள்ளார்

ஆறு வயதாக இருந்த போது பார்த்திவ் பட்டேல் கதவில் கை வைத்து தன் இடது கை சுண்டு விரலை இழந்து விட்டார். அதன் பின்னர் அவர் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த போது விக்கெட் காப்பாளராக ஒன்பது விரல்களுடனே விளையாடியுள்ளார்.

இது பற்றி பார்த்திவ் பட்டேல் கூறுகையில், எனக்கு ஆறு வயதாக இருந்த போது என் விரல் கதவில் சிக்கி துண்டாகி விட்டது. கடைசி விரல் விக்கெட் காப்பு செய்யும் போது கிளவுசில் சரியாக நிற்காது என்பது சற்று கடினமானது. அதனால், நான் கிளவுஸை டேப் போட்டு ஒட்டி விடுவேன்” என்றார்

RCB அணியை விட்டு விலக மாட்டேன் – விராட் கோஹ்லி

இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட் தொடரில் விளையாடும்வரை ரோயல் செலஞ்சர்ஸ்

மேலும், அனைத்து விரல்களும் இருந்திருந்தால் அது எப்படி இருக்கும் என எனக்கு தெரியாது. ஆனால், திரும்பிப் பார்க்கும் போது ஒன்பது விரல்களுடன் இந்திய அணிக்கு விக்கெட் காப்பாளராக விளையாடியது பெருமையாக உள்ளது” என்று பார்த்திவ் பட்டேல் மேலும் குறிப்பிட்டார்

இறுதியாக, 2012ஆம் ஆண்டு இலங்கை அணிக்கெதிராக ஒருநாள் போட்டியில் விளையாடிய பார்த்திவ் பட்டேல், 2018ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு எதிராக ஜொஹனஸ்பேர்க்கில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க