இந்திய வீரர்கள் அவர்களுக்காகவே கிரிக்கெட் ஆடினர் – இன்சமாம்

46
Associated Press

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான இன்சமாம்-உல்-ஹக், தனது கடந்தகால கிரிக்கெட் நினைவுகளை தற்போது மீட்டியிருக்கின்றார்.

என்பது, தொன்னூறு, இரண்டாயிரம் என மூன்று தசாப்தங்களிலும் இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில், பாகிஸ்தான் அணி சிறப்பான பதிவுகளைக் காட்டியிருந்தது. 

கொரோனாவுக்கு எதிராக உதவிக்கரம் நீட்டிய டில்ருவான் பெரேரா

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் கொவிட்-19 (கொரோனா) வைரஸிற்கு எதிராக…

இவ்வாறு, பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு எதிரான போட்டிகளில் சிறப்பாக செயற்பட்டதற்கான காரணத்தினை தனது கிரிக்கெட் நினைவுகளை மீட்டும் போது குறிப்பிட்ட இன்சமாம்-உல்-ஹக் பாகிஸ்தான் வீரர்கள் நாட்டுக்காக விளையாடும் போது, இந்திய வீரர்கள் தங்களது சொந்த சாதனைகளுக்காக விளையாடினர் என தெரிவித்திருந்தார். 

“நாங்கள் இந்திய அணிக்கு எதிராக விளையாடும் போது, பேப்பர் பதிவுகளில் அவர்களது துடுப்பாட்டம் எங்களை விட பலம்வாய்ந்ததாக இருந்தது. ஆனால், எங்களது துடுப்பாட்ட வீரர்கள் 30 அல்லது 40 ஓட்டங்களைப் பெற்றாலும் அது அணிக்காக இருக்கும். ஆனால், இந்தியாவில் வீரர் ஒருவர் 100 ஓட்டங்கள் பெற்றாலும் அது அவருக்காகவே இருக்கும். இதுவே, இரண்டு அணிகளுக்குமான வித்தியாசமாக இருந்தது.” 

இதேநேரம், 1992ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தினை பாகிஸ்தான் வென்ற விடயம் பற்றியும் கருத்து வெளியிட்ட இன்சமாம்-உல்-ஹக், பாகிஸ்தான் குறித்த உலகக் கிண்ணத்தை வெல்ல இம்ரான் கானின் தலைமைத்துவம் பிரதான பங்களிப்பினை வழங்கியிருந்தது என்றார்.

“இம்ரான் (கான்) நுட்பரீதியான ஒரு அணித்தலைவர் மாத்திரம் கிடையாது. அவருக்கு எப்படி வீரர்களின் முழுப் பலத்தினையும் வெளிக்கொண்டு வருவது என்பது தெரியும். இளம் வீரர்களுக்கு அவர் ஆதரவாக இருந்ததோடு, அவர் ஆதரவு தந்த வீரர்களினையும் நம்பினார். இதனாலேயே, அவரினை ஒரு சிறந்த அணித்தலைவராக பார்க்க முடிகின்றது. 

அதோடு, ஒரு தொடரில் வீரர் ஒருவர் சரியாக பிரகாசிக்காது போனால் குறித்த வீரரினை அணியில் இருந்து இம்ரான் கான் நீக்கமாட்டார். நீண்ட கால வாய்ப்பு ஒன்றினை வீரருக்கு வழங்க விரும்புவார். இதுவே, வீரர்கள் அவரினை பெரிதும் மதிக்க காரணமாக இருக்கின்றது.” என்றார்.

இம்ரான் கானின் தலைமைத்துவம் ஒரு பக்கம் இருக்க, இளம் துடுப்பாட்ட வீரராக இருந்த இன்சமாம்-உல்-ஹக் உம் தனது  சிறந்த துடுப்பாட்டம் மூலம் 1992ஆம் ஆண்டின் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தினை பாகிஸ்தான் வெல்வதற்கு பல வகைகளிலும் பங்களிப்புச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<