RCB அணியை விட்டு விலக மாட்டேன் – விராட் கோஹ்லி

69
IPL

இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட் தொடரில் விளையாடும்வரை ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை விட்டு விலகமாட்டேன் என்று விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.  

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தாண்டு நடைபெற இருந்து ஐ.பி.எல் டி20 போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  

IPL கிரிக்கெட்டின் சிறந்த பந்துவீச்சாளராக லசித் மாலிங்க தெரிவு

இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட்டின் சிறந்த தலைவர்களாக மகேந்திர சிங் டோனி…

மேலும், ஊரடங்கு காரணமாக கிரிக்கெட் வீரர்கள் பலர் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதனால் சமூகவலைத்தளங்களில் வீரர்கள் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றனர்.  

இந்நிலையில், தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் டி வில்லியர்ஸுடன் இன்ஸ்டாகிராமில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி கலந்துரையாடினார்.  

அப்போது விராட் கோஹ்லி கூறியதாவது, ”பெங்களூர் அணியுடனான எனது பயணம் அற்புதமானது. உங்களுடன் இணைந்து .பி.எல் சம்பியன் கிண்ணத்தை கைப்பற்ற வேண்டும் என்பது எனது கனவு. ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை விட்டு விலகுவது குறித்து என்னால் யோசிக்கக் கூட முடியாது.  

.பி.எல் தொடரில் விளையாடும்வரை இந்த அணியை விட்டு விலகமாட்டேன். இத்தொடரில் விளையாடும் வரை உரிமையாளருக்காக விளையாட விரும்புகிறேன். அணியை விட்டு வெளியேறும் எந்த சூழ்நிலையும் இதுவரை இல்லை

இந்த வருடத்துக்கான .பி.எல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோல, பெங்களூர் அணியின் ரசிகர்கள் தரும் ஆதரவு என்னை மெய் சிலிர்க்கச் செய்கிறது” என தெரிவித்தார்

இந்த நிலையில், டி வில்லியர்ஸ் கருத்து தெரிவிக்கையில், ”நான் நிறைய ஓட்டங்களை எடுக்கவேண்டும். எனக்கும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை விட்டு விலக விருப்பமில்லை

எதிர்காலத்தில் இதன்மூலம் கிடைத்த உறவுகளையே எண்ணிப் பார்ப்போம். குறிப்பிட்ட ஆட்டத்தை அல்ல. சில அருமையான தருணங்களை எண்ணிக்கொள்வோம். அதை ஒருபோதும் இழக்க முடியாது” என அவர் கூறினார்.

ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அண்மைக்காலமாக மோசமாக விளையாடி வருகிறது. ஐந்து தடவைகள் பிளேப் சுற்றுக்குத் தகுதி பெற்றும் மூன்று முறை இறுதிச்சுற்றில் விளையாடியும் பிரபல வீரர்களைக் கொண்டிருந்தும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் இதுவரை ஒருமுறை கூட .பி.எல் சம்பியன் பட்டத்தை வெல்ல முடியவில்லை

IPL தொடருக்காக ஆசிய கிண்ண அட்டவணையை மாற்றமாட்டோம்: PCB

இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரை நடத்துவதற்காக ஆசியக் கிண்ண போட்டி…

எனினும், அந்த அணி 2018இல் 6ஆவது இடம், 2017, 2019 ஆண்டுகளில் கடைசி இடங்கள் எனக் கடந்த மூன்று வருடங்களாக மிக மோசமாகவே விளையாடி வருகிறது.  

இதையடுத்து, அந்த அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன், பந்துவீச்சுப் பயிற்சியாளர் ஷிஸ் நெஹ்ரா ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டார்கள்.  

அதற்குப் பதிலாக தலைமைப் பயிற்சியாளராக சைமன் கெடிச்சும், அணி இயக்குநராக மைக் ஹெஸ்ஸனும் நியமிக்கப்பட்டனர்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<