சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான T20 தொடரின் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.
இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய பின் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடும் நிலையில், இந்த T20 தொடரின் முதல் போட்டியே மழை காரணமாக கைவிடப்பட்டிருக்கின்றது.
ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து ஹெரி கேர்னி, ஜேசன் ரோய் விலகல்
மழை காரணமாக கைவிடப்பட்ட போட்டி மன்செஸ்டர் நகரில் நேற்று (28) தொடங்கியிருந்ததுடன் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணியின் தலைவர் பாபர் அஸாம் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இங்கிலாந்து அணிக்கு வழங்கியிருந்தார்.
இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி, 16.1 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து 131 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டத்தில் மழையின் குறுக்கீடு ஏற்பட்டது.
இதேநேரம், மழைக்கு முன்னரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய டொம் பேன்டன், அதிரடி அரைச்சதம் ஒன்றுடன் 42 பந்துகளுக்கு 5 சிக்ஸர்கள் மற்றும் 4 பெளண்டரிகள் அடங்கலாக 71 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
மறுமுனையில், பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு சார்பில் இமாத் வஸீம் மற்றும் சதாப் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை சுபர் கிங்ஸ் அணியில் 10 பேருக்கு கொரோனா
அடுத்ததாக தொடரின் இரண்டாவது T20 போட்டி, ஞாயிற்றுக்கிழமை (30) முதல் போட்டி இடம்பெற்ற இதே மன்செஸ்டர் நகரில் இடம்பெறவிருக்கின்றது.
போட்டியின் சுருக்கம்
இங்கிலாந்து – 131/6 (16.1) – டொம் பேன்டன் 71, இமாத் வஸீம் 31/2, சதாப் கான் 33/2
முடிவு – போட்டி கைவிடப்பட்டது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<