Home Tamil பங்களாதேஷை வென்றும் உலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்

பங்களாதேஷை வென்றும் உலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்

217
(Photo by OLLY GREENWOOD / AFP)

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 43ஆவது லீக் போட்டியில், பாகிஸ்தான் அணி பங்களாதேஷ் அணியினை 94 ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது.

இரு அணிகளுக்கும் கடைசி லீக் போட்டிகளாக அமைந்த இந்த ஆட்டம் லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நேற்று (5) ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்பராஸ் அஹ்மட் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமது தரப்பிற்காக தெரிவு செய்து கொண்டார்.

சச்சினின் 27 வருட உலகக்கிண்ண சாதனையை முறியடித்த ஆப்கான் வீரர்

12 ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்…

இந்த உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணி 9 புள்ளிகளுடன் காணப்படுவதால் 11 புள்ளிகள் பெற்று தமது உலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய, இப்போட்டியில் பங்களாதேஷ் அணியினை பாரிய ஓட்ட வித்தியாசம் ஒன்றில் வீழ்த்தி கட்டாய வெற்றி பெற வேண்டிய நிலையில் களமிறங்கியிருந்தது. இப்போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

பாகிஸ்தான் – பக்கார் சமான், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம், மொஹமட் ஹபீஸ், ஹரிஸ் சொஹைல், சர்பராஸ் அஹ்மட் (அணித்தலைவர்), இமாத் வஸீம், சதாப் கான், வஹாப் ரியாஸ், மொஹமட் ஆமீர், சஹீன் அப்ரிடி 

மறுமுனையில் தமது கடைசி லீக் போட்டியில் இந்தியாவுடன் தோல்வியடைந்த பங்களாதேஷ் அணி, இந்த உலகக் கிண்ணத் தொடருக்கான அரையிறுதி சுற்று வாய்ப்பினை இழந்திருந்தும் இப்போட்டியில் ஆறுதல் வெற்றியினை எதிர்பார்த்து இரண்டு மாற்றங்களை மேற்கொண்டிருந்தது. 

அந்தவகையில் பங்களாதேஷ் அணியில் சப்பீர் ரஹ்மான், ருபெல் ஹொசைன் ஆகியோருக்கு பதிலாக மெஹிதி ஹசன் மற்றும் மஹ்மதுல்லாஹ் ஆகியோர் இணைக்கப்பட்டிருந்தனர். 

பங்களாதேஷ் அணி – தமிம் இக்பால், செளம்யா சர்க்கார், சகீப் அல் ஹசன், முஸ்பிகுர் ரஹீம், லிடன் தாஸ், மஹ்மதுல்லாஹ், மொசாதிக் ஹொசைன், மொஹமட் சயீபுத்தின், மெஹிதி ஹசன், மஷ்ரபி மொர்தஸா (அணித்தலைவர்), முஸ்தபிசுர் ரஹ்மான் 

சரித், சம்முவின் அபார ஆட்டத்தால் இலங்கைக்கு ஹெட்ரிக் வெற்றி

தென்னாபிரிக்க விளையாட்டு பல்கலைக்கழக…

இதன் பின்னர் பாகிஸ்தான் அணி நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக பக்கார் சமான் மற்றும் இமாம்-உல்-ஹக் ஆகியோருடன் தமது துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்திருந்தது. பாகிஸ்தான் அணி இப்போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை பெற வேண்டும் என்பதால் பெரிய மொத்த ஓட்டங்களை குவிக்க வேண்டிய தேவை அவர்களுக்கு இருந்தது. எனினும், பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான பக்கார் சமான் வெறும் 13 ஓட்டங்கள் பெற்று ஏமாற்றம் தந்தார். 

இந்நிலையில், பாகிஸ்தான் அணிக்கு அதன் ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் இமாம்-உல்-ஹக் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் தமது சிறந்த துடுப்பாட்டத்தின் மூலம் உதவினர். அதில் இந்த உலகக் கிண்ணத் தொடரில் முதல் சதம் பெற்ற இமாம்-உல்-ஹக், 100 பந்துகளில் 7 பெளண்டரிகள் அடங்கலாக 100 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். இது இமாம்-உல்-ஹக்கின் ஆறாவது ஒருநாள் சதமாகவும் இருந்தது. இதேநேரம், பாபர் அசாம் 98 பந்துகளில் 11 பெளண்டரிகள் அடங்கலாக 96 ஓட்டங்களை பெற்று சதம் பெறத்தவறினார். 

இதனை அடுத்து பாகிஸ்தான் அணியின் மத்தியவரிசை வீரர்களில் இமாத் வஸீம் தவிர ஏனையோர் எதிர்பார்த்த அளவுக்கு ஜொலிக்க தவறினர். இமாத் வஸீம் அதிரடியான முறையில் துடுப்பாடி 26 பந்துகளில் 6 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 43 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

இமாத் வஸீமின் துடுப்பாட்ட உதவியோடு பாகிஸ்தான் அணி 50 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து 315 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் முஸ்தபிசுர் ரஹ்மான் 75 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை சுருட்டினார். தனது கடைசி உலகக் கிண்ண  போட்டியிலும் இந்தியாவுக்கு எதிராக 5 விக்கெட்டுக்களை சாய்த்திருந்த முஸ்தபிசுர் ரஹ்மான் இப்போட்டியின் பந்துவீச்சு பிரதி மூலம், ஒருநாள் போட்டிகளில் நான்காவது தடவையாக 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதேநேரம் மொஹமட் சயீபுத்தினும் 3 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 316 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் அணி, 44.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 221 ஓட்டங்களை மட்டும் பெற்று போட்டியில் தோல்வியடைந்தது.

பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் இந்த உலகக் கிண்ணத் தொடரில் 5ஆவது முறையாக அரைச்சதம் பெற்ற சகீப் அல் ஹசன் 77 பந்துகளில் 6 பெளண்டரிகள் அடங்கலாக 64 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த உலகக் கிண்ணத் தொடரில் ஏற்கனவே இரண்டு சதங்கள் பெற்றிருக்கும் சகீப் அல் ஹசன் இந்த 64 ஓட்டங்கள் மூலம் அவரின் 46ஆவது ஒருநாள் அரைச்சதத்தினையும் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதேநேரம், லிடன் தாஸ் 32 ஓட்டங்கள் பெற்று பங்களாதேஷ் அணிக்காக போராடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு சார்பில் சஹீன் அப்ரிடி 35 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார். இது சஹீன் அப்ரிடியின் சிறந்த ஒருநாள் பந்துவீச்சு பிரதியாகவும் பதிவானது. இதேநேரம் சதாப் கான் 59 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.

போட்டியின் ஆட்ட நாயகன் விருது பாகிஸ்தான் அணியின் சஹீன் அப்ரிடிக்கு வழங்கப்பட்டது.

இந்திய அணியை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவுள்ள இலங்கை!

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில்…

இப்போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று 11 புள்ளிகள் பெற்றிருக்கின்றது. எனினும், பாகிஸ்தான் அணி 11 புள்ளிகளுடன் உலகக் கிண்ண அணிகள் நிரல்படுத்தலில் நான்காம் இடத்தில் உள்ள நியூசிலாந்து அணியை விட நிகர ஓட்டவீதத்தில் (NRR) பின்னடைவில் இருப்பதால் உலகக் கிண்ண அரையிறுதி சுற்று வாய்ப்பினை துரதிஷ்டவசமாக இழக்கின்றது. பாகிஸ்தான், அணிகள் நிரல்படுத்தலில் 5ஆம் இடத்தினை பெற்றவாறு இந்த உலகக் கிண்ணத் தொடரை நிறைவு செய்து கொள்கின்றது.

பாகிஸ்தான் உலகக் கிண்ண அரையிறுதிக்கு முன்னேறாத நிலையில் நியூசிலாந்து அணி உலகக் கிண்ண அரையிறுதிக்கு செல்லும் நான்காவது அணியாக மாறுகின்றது. உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு அவுஸ்திரேலியா, இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் ஏற்கனவே தெரிவாகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மறுமுனையில் இப்போட்டியில் தோல்வியடைந்த பங்களாதேஷ், 7 புள்ளிகளுடன் அணிகள் நிரல்படுத்தலில் 7ஆம் இடத்தினை பெற்றவாறு இந்த உலகக் கிண்ணத் தொடரினை நிறைவு செய்து கொள்கின்றது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<

ஸ்கோர் விபரம்

Result


Pakistan
315/9 (50)

Bangladesh
221/10 (44.1)

Batsmen R B 4s 6s SR
Fakhar Zaman c Mehidy Hasan Miraz b Mohammad Saifuddin 13 31 1 0 41.94
Imam-ul-Haq hit-wicket b Mustafizur Rahman 100 100 7 0 100.00
Babar Azam lbw b Mohammad Saifuddin 96 98 11 0 97.96
Mohammad Hafeez c Shakib Al Hasan (vc) b Mehidy Hasan Miraz 27 25 3 0 108.00
Haris Sohail c Soumya Sarkar b Mustafizur Rahman 6 6 1 0 100.00
Imad Wasim c Mahmudullah b Mustafizur Rahman 43 26 6 1 165.38
Sarfaraz Ahmed not out 3 3 0 0 100.00
Wahab Riaz b Mohammad Saifuddin 2 4 0 0 50.00
Shadab Khan c & b Mustafizur Rahman 1 2 0 0 50.00
Mohammad Amir c Mushfiqur Rahim b Mustafizur Rahman 8 6 1 0 133.33
Shaheen Shah Afridi not out 0 0 0 0 0.00


Extras 16 (b 0 , lb 3 , nb 1, w 12, pen 0)
Total 315/9 (50 Overs, RR: 6.3)
Fall of Wickets 1-23 (7.2) Fakhar Zaman, 2-180 (31.6) Babar Azam, 3-246 (41.5) Imam-ul-Haq, 4-248 (42.4) Mohammad Hafeez, 5-255 (43.5) Haris Sohail, 6-288 (46.5) Wahab Riaz, 7-289 (47.1) Shadab Khan, 8-314 (49.4) Imad Wasim, 9-314 (49.5) Mohammad Amir,

Bowling O M R W Econ
Mehidy Hasan Miraz 10 0 30 1 3.00
Mohammad Saifuddin 9 0 77 3 8.56
Mustafizur Rahman 10 0 75 5 7.50
Mashrafe Mortaza 7 0 46 0 6.57
Shakib Al Hasan (vc) 10 0 57 0 5.70
Mosaddek Hossain 4 0 27 0 6.75


Batsmen R B 4s 6s SR
Tamim Iqbal b Shaheen Shah Afridi 8 21 0 0 38.10
Soumya Sarkar c Fakhar Zaman b Mohammad Amir 22 22 4 0 100.00
Shakib Al Hasan (vc) c Sarfaraz Ahmed b Shaheen Shah Afridi 64 77 6 0 83.12
Mushfiqur Rahim b Wahab Riaz 16 19 2 0 84.21
Liton Das c Haris Sohail b Shaheen Shah Afridi 32 40 3 0 80.00
Mahmudullah b Shaheen Shah Afridi 29 41 3 0 70.73
Mosaddek Hossain c Babar Azam b Shadab Khan 16 21 1 0 76.19
Mohammad Saifuddin c Mohammad Amir b Shaheen Shah Afridi 0 1 0 0 0.00
Mehidy Hasan Miraz not out 7 6 1 0 116.67
Mashrafe Mortaza st Sarfaraz Ahmed b Shadab Khan 15 14 0 2 107.14
Mustafizur Rahman b Shaheen Shah Afridi 1 3 0 0 33.33


Extras 11 (b 0 , lb 5 , nb 0, w 6, pen 0)
Total 221/10 (44.1 Overs, RR: 5)
Fall of Wickets 1-26 (5.5) Soumya Sarkar, 2-48 (10.4) Tamim Iqbal, 3-78 (17.2) Mushfiqur Rahim, 4-136 (28.1) Liton Das, 5-154 (32.1) Shakib Al Hasan (vc), 6-197 (39.4) Mosaddek Hossain, 7-197 (40.1) Mohammad Saifuddin, 8-198 (40.3) Mahmudullah, 9-219 (43.4) Mashrafe Mortaza, 10-221 (44.1) Mustafizur Rahman,

Bowling O M R W Econ
Mohammad Hafeez 6 1 32 0 5.33
Mohammad Amir 7 0 31 1 4.43
Shaheen Shah Afridi 9.1 0 35 6 3.85
Wahab Riaz 7 0 33 1 4.71
Imad Wasim 6 0 26 0 4.33
Shadab Khan 9 0 59 2 6.56



முடிவு – பாகிஸ்தான் அணி 94 ஓட்டங்களால் வெற்றி