Home Tamil இலங்கையை டெஸ்ட் தொடரில் வைட்வொஷ் செய்த பாகிஸ்தான்

இலங்கையை டெஸ்ட் தொடரில் வைட்வொஷ் செய்த பாகிஸ்தான்

Pakistan tour of Sri Lanka 2023

745
Pakistan tour of Sri Lanka 2023

சுற்றுலா பாகிஸ்தான் – இலங்கை அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியானது இன்னிங்ஸ் மற்றும் 222 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்திருப்பதோடு இரு போட்டிகள் கொண்ட தொடரினையும் 2-0 எனக் கைப்பற்றியிருக்கின்றது.  

>> டெஸ்ட் தரவரிசையில் பிரபாத் ஜயசூரிய அசுர முன்னேற்றம்

கொழும்பு SSC மைதானத்தில் நிறைவுக்கு வந்த இந்த டெஸ்ட் போட்டியில் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்த போது தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடி வந்த பாகிஸ்தான் அணியானது 563 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில் ஆட்டமிழக்காது இருந்த அகா சல்மான் 132 ஓட்டங்களையும் மொஹமட் ரிஸ்வான் 37 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர் 

இன்று போட்டியின் நான்காம் நாளில் 397 ஓட்டங்கள் இலங்கை அணிக்கு எதிராக முன்னிலை பெற்றவாறு முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடர்ந்த பாகிஸ்தான் அணி ரிஸ்வான் பெற்ற அரைச்சதத்தோடு 576 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டவாறு தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை நிறுத்தியது. பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அகா சல்மான் தன்னுடைய இரண்டாவது டெஸ்ட் சதத்தோடு 132 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காது இருக்க, மொஹமட் ரிஸ்வான் 50 ஓட்டங்கள் எடுத்திருந்தார் 

பாகிஸ்தானின் முதல் இன்னிங்ஸை அடுத்து 410 ஓட்டங்கள் அவ்வணியினை விட பின்தங்கியவாறு இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இலங்கை கிரிக்கெட் அணி இரண்டாம் இன்னிங்ஸில் சிறந்த ஆரம்பம் ஒன்றை பெற்ற போதிலும் குறிப்பாக நான்காம் நாளின் மதிய போசணத்திற்கு பின்னர் நோமான் அலியின் சுழலில் தடுமாறத் தொடங்கியது. பின்னர் தொடர்ந்து பறிகொடுத்த விக்கெட்டுக்கள் காரணமாக 67.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்த இலங்கை அணி 188 ஓட்டங்கள் மாத்திரமே இரண்டாம் இன்னிங்ஸில் எடுத்ததோடு போட்டியில் 222 ஓட்டங்களால் இன்னிங்ஸ் தோல்வியினையும் தழுவியது 

>> ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் தொடர் இலங்கையில்

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காது இருந்த அஞ்செலோ மெதிவ்ஸ் 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 63 ஓட்டங்கள் எடுத்தார். அதேநேரம் திமுத் கருணாரட்ன 41 ஓட்டங்கள் பெற்றிருந்தார் 

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் நோமான் அலி 70 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களைச் சாய்க்க, நஸீம் சாஹ் 03 விக்கெட்டுக்களைச் சுருட்டினார் 

பாகிஸ்தான் இவ்வெற்றி மூலம் இலங்கைக்கு எதிராக இன்னிங்ஸ் ஒன்றின் அடிப்படையில் பெற்ற சிறந்த வெற்றியினைப் பதிவு செய்திருந்தது. போட்டியின் ஆட்டநாயகனாக அப்துல்லா சபீக் தெரிவாக தொடர் நாயகன் விருது அகா சல்மானிற்கு வழங்கப்பட்டிருந்தது 

போட்டியின் சுருக்கம்

Result


Sri Lanka
166/10 (48.4) & 188/10 (67.4)

Pakistan
576/5 (134)

Batsmen R B 4s 6s SR
Nishan Madushka run out (Shan Masood) 4 9 1 0 44.44
Dimuth Karunaratne b Naseem Shah 17 37 3 0 45.95
Kusal Mendis c Mohammad Rizwan b Shaheen Shah Afridi 6 9 1 0 66.67
Angelo Mathews c Sarfaraz Ahmed b Naseem Shah 9 26 1 0 34.62
Dinesh Chandimal c Imam-ul-Haq b Naseem Shah 34 60 4 0 56.67
Dhananjaya de Silva c Saud Shakeel b Abrar Ahmed 57 68 9 1 83.82
Sadeera Samarawickrama c Abdullah Shafique b Abrar Ahmed 0 4 0 0 0.00
Ramesh Mendis c Saud Shakeel b Abrar Ahmed 27 44 3 0 61.36
Prabath Jayasuriya run out (Shan Masood) 1 7 0 0 14.29
Asitha Fernando  b Abrar Ahmed 8 24 2 0 33.33
Dilshan Madushanka not out 0 5 0 0 0.00


Extras 3 (b 2 , lb 0 , nb 1, w 0, pen 0)
Total 166/10 (48.4 Overs, RR: 3.41)
Fall of Wickets 1-9 (2.4) Nishan Madushka, 2-23 (6.1) Kusal Mendis, 3-35 (12.5) Angelo Mathews, 4-36 (14.1) Dimuth Karunaratne, 5-121 (33.5) Dinesh Chandimal, 6-122 (34.4) Sadeera Samarawickrama, 7-133 (36.3) Dhananjaya de Silva, 8-136 (38.6) Prabath Jayasuriya, 9-163 (46.2) Asitha Fernando , 10-166 (48.4) Ramesh Mendis,

Bowling O M R W Econ
Shaheen Shah Afridi 11 1 44 1 4.00
Naseem Shah 14 3 41 3 2.93
Abrar Ahmed 20.4 2 69 4 3.38
Nauman Ali 3 1 10 0 3.33
Batsmen R B 4s 6s SR
Abdullah Shafique c Dilshan Madushanka b Prabath Jayasuriya 201 326 19 4 61.66
Imam-ul-Haq c Nishan Madushka b Asitha Fernando  6 6 1 0 100.00
Shan Masood c Kusal Mendis b Asitha Fernando  51 47 4 1 108.51
Babar Azam lbw b Prabath Jayasuriya 39 75 4 1 52.00
Saud Shakeel lbw b Asitha Fernando  57 110 6 0 51.82
Sarfaraz Ahmed -select- b 14 22 3 0 63.64
Agha Salman not out 132 154 15 1 85.71
Mohammad Rizwan not out 50 67 4 1 74.63


Extras 26 (b 4 , lb 16 , nb 3, w 3, pen 0)
Total 576/5 (134 Overs, RR: 4.3)
Fall of Wickets 1-13 (2.3) Imam-ul-Haq, 2-121 (21.5) Shan Masood, 3-210 (47.5) Babar Azam, 4-319 (80.3) Saud Shakeel, 5-468 (113.2) Abdullah Shafique,

Bowling O M R W Econ
Asitha Fernando  25 1 133 3 5.32
Dilshan Madushanka 17 3 77 0 4.53
Ramesh Mendis 36 2 139 0 3.86
Prabath Jayasuriya 53 11 194 2 3.66
Dhananjaya de Silva 3 1 13 0 4.33


Batsmen R B 4s 6s SR
Nishan Madushka b Noman Ali 33 72 4 1 45.83
Dimuth Karunaratne c Imam-ul-Haq b Noman Ali 41 61 6 0 67.21
Kusal Mendis c Saud Shakeel b Noman Ali 14 35 2 0 40.00
Angelo Mathews not out 63 127 7 2 49.61
Dinesh Chandimal c Imam-ul-Haq b Noman Ali 1 11 0 0 9.09
Dhananjaya de Silva c Abrar Ahmed b Noman Ali 10 38 2 0 26.32
Sadeera Samarawickrama c Shan Masood b Noman Ali 5 11 1 0 45.45
Ramesh Mendis st Mohammad Rizwan b Noman Ali 16 42 2 0 38.10
Prabath Jayasuriya b Naseem Shah 0 4 0 0 0.00
Asitha Fernando  b 0 2 0 0 0.00
Dilshan Madushanka b 0 3 0 0 0.00


Extras 5 (b 0 , lb 4 , nb 0, w 1, pen 0)
Total 188/10 (67.4 Overs, RR: 2.78)
Fall of Wickets 1-69 (18.1) Nishan Madushka, 2-86 (26.2) Dimuth Karunaratne, 3-99 (30.2) Kusal Mendis, 4-109 (32.5) Dinesh Chandimal, 5-131 (46.2) Dhananjaya de Silva, 6-141 (50.1) Sadeera Samarawickrama, 7-177 (64.3) Ramesh Mendis, 8-184 (65.5) Prabath Jayasuriya, 9-188 (67.1) Asitha Fernando , 10-188 (67.4) Dilshan Madushanka,

Bowling O M R W Econ
Shaheen Shah Afridi 12 5 30 0 2.50
Naseem Shah 17.4 5 44 3 2.53
Abrar Ahmed 10 1 34 0 3.40
Noman Ali 23 8 70 7 3.04
Agha Salman 5 1 6 0 1.20



>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<