முஜீப், ரஷித் கானின் சுழலில் வீழ்ந்தது ஸ்கொட்லாந்து

86
Getty
 

ஸ்கொட்லாந்து அணிக்கெதிரான T20 உலகக் கிண்ண சுபர் 12 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 130 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.

T20 உலகக் கிண்ணத் தொடரில் சுபர் 12 சுற்றின் குழு 2 இற்கான 2ஆவது போட்டியில் ஆப்கானிஸ்தான் – ஸ்கொட்லாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின.

சார்ஜாவில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் ஆரம்ப வீரர்களான களமிறங்கிய ஹஸ்ரதுல்லாஹ் ஷஸாய் – மொஹமட் ஷசாத் ஜோடி அதிரடியான ஆரமபத்தைக் கொடுத்து.

பானுக, அசலங்கவின் அசத்தலால் அபார வெற்றியை பதிவுசெய்த இலங்கை

இதில் ஷசாத் 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைச்சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹஸ்ரதுல்லாஹ் ஷஸாய் 44 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதையடுத்து ஜோடி சேர்ந்த நஜிபுல்லாஹ் ஸத்ரான் – ரஹ்மானுல்லாஹ் குர்பஸ் ஆகிய இருவரும் அதிரடியாக ஆடி ஓட்டங்களைக் குவித்தனர்.

இதில் ரஹ்மனுல்லாஹ் குர்பஸ் 46 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, மறுமுனையில்  இருந்த நஜிபுல்லாஹ் ஸத்ரான் அரைச்சதம் கடந்து 59 ஓட்டங்கனை எடுத்தார்.

இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 190 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

ஸ்கொட்லாந்து அணியின் பந்துவீச்சில் சப்யான் ஷெரீப் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி வரலாறு படைத்தது இங்கிலாந்து

இதனையடுத்து 191 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நோக்கை களமிறங்கிய ஸ்கொட்லாந்து அணி, முஜீப் உர் ரஹ்மான், ரஷித் கான் ஆகியோரது பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல 60 ஓட்டங்களுக்குச் சுருண்டது.

அந்த அணியின் ஆரம்ப வீரரான ஜோர்ஜ் முன்சி 25 ஓட்டங்களையும், கிறிஸ் க்ரேவ்ஸ் 12 ஓட்டங்களையும், அணித்தலைவர் கைல் கொட்ஸர் 10 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டனர்.

அத்துடன், ஸ்கொட்லாந்து அணியின் ஐந்து வீரர்கள் ஓட்டம் எதுவுமின்றி டக்அவுட் ஆகியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில் முஜீப் உர் ரஹ்மான் 20 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களையும், ரஷித் கான் 9 ஓட்டங்களுக்கு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இதன்படி, 130 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டிய ஆப்கானிஸ்தான் அணி, குழு 2இற்கான புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.

அத்துடன், T20 உலகக் கிண்ண வரலாற்றில் அதிக ஓட்டங்கள் வித்தியாசத்தில் அணியொன்று பதிவுசெய்த வெற்றியாகவும் இது இடம்பிடித்தது.

மேலும், இப்போட்டியில் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முஜீப் உர் ரஹ்மான் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

போட்டியின் சுருக்கம்

ஆப்கானிஸ்தான் – 190/4 (20) – நஜிபுல்லாஹ் ஸத்ரான் 59, ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ் 46, ஹஸ்ரதுல்லாஹ் ஷஸாய் 44, ஷப்யான் ஷெரீப் 33/2

ஸ்கொட்லாந்து – 60/10 (10.2) – ஜோர்ஜ் முன்சி 25, கிறிஸ் க்ரேவ்ஸ் 12, கைல் கொட்ஸர் 10, முஜீப் உர் ரஹ்மான் 20/5, ரஷித் கான் 9/4

முடிவு – ஆப்கானிஸ்தான் அணி 130 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<