இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மாற்றங்களை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான்

43
ENGLAND VS PAKISTAN 

இங்கிலாந்துடன் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரிற்கான இரண்டாவது மற்றும் மூன்றாம் போட்டிகளுக்கான பாகிஸ்தான் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

>>T20I தொடரினை வெற்றியுடன் ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணி<<

தற்போது பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து அணி அங்கே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகின்றது. முல்டானில் நடைபெற்ற இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் இன்னிங்ஸ் மற்றும் 47 ஓட்டங்களால் படு தோல்வி அடைந்த நிலையில் அவ்வணி தொடரின் இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளுக்காக முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. 

அந்தவகையில் அனுபவம் கொண்ட வீரர்களான பாபர் அசாம், சஹீன் அப்ரிடி மற்றும் நஸீம் சாஹ் ஆகியோர் அதிரடியான முறையில் பாகிஸ்தான் டெஸ்ட் குழாத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதேவேளை சுழல்வீரரான அப்றார் அஹ்மட்டிற்கு அவரது உடல்நிலை காரணமாக ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது. 

இதேநேரம் அனுபவமிக்க வீரர்கள் நீக்கப்பட்ட நிலையில் அறிமுக வீரர்களான ஹஸிபுல்லாஹ், மெஹ்ரான் மும்தாஸ் மற்றும் கம்ரான் குலாம் ஆகியோர் பாகிஸ்தான் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். 

இவர்கள் தவிர பாகிஸ்தான் டெஸ்ட் தொடரின் எஞ்சிய போட்டிகளுக்கான அணியில் முஹம்மத் அலி, சஜித் கான் ஆகியோரோடு நோமன் அலி மற்றும் ஷாஹிட் மஹ்முட் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

பாகிஸ்தான் குழாம் 

ஷான் மசூத் (தலைவர்), செளத் சகீல், ஆமர் ஜமால், அப்துல்லா சபீக், ஹஸிபுல்லாஹ், கம்ரான் குலாம், மெஹ்ரான் மும்தாஸ், மிர் ஹம்சா, மொஹமட் அலி, மொஹமட் ஹூரைரா, மொஹமட் ரிஸ்வான், நோமன் அலி, சயீம் அய்யூப், சஜித் கான், சல்மான் அலி அகா, சாஹிட் மஹ்மூட் 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<