ஆசியக் கிண்ணத் தொடருக்கான பாகிஸ்தான் குழாம் அறிவிப்பு

1144

2022ஆம் ஆண்டு ஆசியக் கிண்ண T20I தொடருக்கான பாகிஸ்தான் குழாம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

பாபர் அசாம் தலைமையில் மொத்தம் 15 பேர் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் ஆசியக் கிண்ண குழாத்தில் வேகப்பந்துவீச்சாளரான நஸீம் சாஹ் அறிமுக வீரராக இணைக்கப்பட்டிருக்கின்றார்.

>> 17 வருடங்களுக்குப் பின் பாகிஸ்தான் செல்லும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி

பாகிஸ்தானுக்காக 13 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கும் 19 வயதான நஸீம் சாஹ் இதுவரை ஒருநாள் போட்டிகளிலோ அல்லது T20I போடடிகளிலோ விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பாகிஸ்தான் தமது நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் சஹீன் அப்ரிடியை, ஆசியக் கிண்ண குழாத்தில் இணைத்திருக்கின்ற போதும் அவரது உடற்தகுதி தொடர்பில் தீர்மானிக்கப்பட்ட பின்னரே அவர் சர்வதேச போட்டிகளில் மீள்வது தீர்மானிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஆசிப் அலி, ஹைதர் அலி, இப்திகார் அஹ்மட் மற்றும் உஸ்மான் காதிர் போன்ற வீரர்களுக்கும் ஆசியக் கிண்ணத்திற்கான பாகிஸ்தான் குழாத்தில் வாய்ப்பு வழங்கப்பட்ட போதிலும் அனுபவ வேகப்பந்துவீச்சாளர் ஹஸன் அலி தெரிவுகளுக்காக கருத்திற்கொள்ளப்படவில்லை.

ஹஸன் அலி தவிர சகலதுறைவீரர்களான இமாத் வஸீம், சொஹைப் மலிக் போன்ற வீரர்களுக்கும் ஆசியக் கிண்ணத் தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதேவேளை ஆசியக் கிண்ணத் தொடருக்கு முன்னர் நெதர்லாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் அணி அங்கே ஐ.சி.சி. இன் ஒருநாள் சுபர் லீக்கிற்காக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடவுள்ளதோடு, அதன் பின்னர் ஆசியக் கிண்ணத் தொடருக்காக இம்மாதம் 22ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியம் செல்லவிருக்கின்றது

>> ஆசியக்கிண்ணத்துக்கான போட்டி அட்டவணை வெளியானது!

பாகிஸ்தான் அணி ஆசியக் கிண்ணத் தொடரில் விளையாடும் முதல் போட்டியானது, எதிர்வரும் 28ஆம் திகதி இந்திய அணியுடன் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

பாகிஸ்தான் குழாம் – பாபர் அசாம் (தலைவர்), சதாப் கான் (பிரதி தலைவர்), பகார் சமான், ஹைதர் அலி, ஹரிஸ் ரவுப், இப்திகார் அஹ்மட், குஸ்தில் சாஹ், மொஹமட் நவாஸ், மொஹமட் ரிஸ்வான், மொஹமட் வஸீம் Jr, நஸீம் சாஹ், சஹீன் அப்ரிடி, சாஹ் நவாஸ் தஹானி, உஸ்மான் காதிர்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<