ஆசியக்கிண்ணத்துக்கான போட்டி அட்டவணை வெளியானது!

Asia Cup 2022

98
 

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள ஆசியக்கிண்ணத் தொடருக்கான போட்டி அட்டவணை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இம்மாதம் 27ம் திகதி ஆரம்பமாகவுள்ள முதல் போட்டியில் போட்டித்தொடரை நடத்தும் இலங்கை அணியானது, ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இணைவது மேலும் உறுதி

அறிவிக்கப்பட்டுள்ள இந்த போட்டி அட்டவணையின்படி இரண்டு குழுக்களாக அணிகள் வகுக்கப்பட்டுள்ளன. இதில் A குழுவில் இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பிடித்துள்ளதுடன், B குழுவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்றில் வெற்றிபெறும் அணி இடத்தை பிடித்துக்கொள்ளும்.

ஆசியக்கிண்ணத் தகுதிச்சுற்றில் ஐக்கிய அரபு இராச்சியம், குவைத், சிங்கபூர் மற்றும் ஹொங்கொங் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் வெற்றிபெறும் அணி B குழுவில் இடத்தை பிடித்துக்கொள்ளும்.

குழுநிலை போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சுபர் 4 சுற்றுக்கு தகுதிபெறும். சுபர் 4 சுற்றில் ஒவ்வொரு அணிகளும் எதிரணிகளுடன் தலா ஒவ்வொரு முறை மோதும். சுபர் 4 சுற்றில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் செப்டம்பர் 11ம் திகதி டுபாயில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் மோதும்.

ஏற்கனவே குறிப்பிட்டது போன்று முதல் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளதுடன், B குழுவுக்கான முதல் போட்டியில் எதிர்பார்ப்புமிக்க இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆகஸ்ட் 28ம் திகதி பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

குழு விபரம்

  • A குழு – இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான்
  • B குழு – இந்தியா, பாகிஸ்தான், தகுதிபெறும் அணி

போட்டி அட்டவணை

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<