ஒருநாள் உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் பங்கேற்பது உறுதி

95
Pakistan govt clears team's World Cup participation

இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கெடுப்பதற்கு அந்த நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான்இந்தியா ஆகிய நாடுகள் இடையில் நிலவி வரும் அரசியல் சிக்கல்கள் காரணமாக இந்தியாவில் நடைபெறும் உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பங்கெடுப்பது தொடர்பிலும், அணியின் பாதுகாப்பு தொடர்பிலும் சந்தேகங்கள் நிலவி வந்திருந்தன 

இந்த நிலையில் இந்த விடயங்கள் பற்றி குழு ஒன்றின் மூலம் ஆய்வு செய்திருக்கும் பாகிஸ்தான் அரசு, தமது நாட்டு கிரிக்கெட்  அணி உலகக் கிண்ணத் தொடருக்கு இந்தியா செல்வதற்கு பூரண அனுமதியினை வழங்கியிருக்கின்றது.   

இதேநேரம், இந்தியா செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்ட போதிலும் இந்திய மண்ணில் பாகிஸ்தான் அணியின் பாதுகாப்பு தொடர்பில் தமக்கு இன்னும் சில விடயங்களை கருத்திற் கொள்ள வேண்டி இருப்பதாக பாகிஸ்தான் அரசானது குறிப்பிட்டிருக்கின்றது 

”பாகிஸ்தானுக்கு அதன் கிரிக்கெட் அணியின் பாதுகாப்பு தொடர்பில் அதிக கவலைகள் காணப்படுகின்றது. இதனை நாங்கள் சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் என்பவற்றிடம்  தெரிவித்திருக்கின்றோம். எமது அணியின் பாதுகாப்பு இந்திய பயணத்தின் போது முழுமையாக உறுதிப்படுத்தப்படும் என எதிர்பாக்கின்றோம்.” 

பாகிஸ்தான் விளையாட்டுடன் அரசியலை கலக்கின்ற ஒரு விடயத்தினை காலகாலமாக செய்து வருவதில்லை. எனவே அது 2023ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கிண்ணத்தில் தமது நாட்டு அணியை விளையாட அனுப்ப சம்மதம் தெரிவிக்கின்றது.”  

இதேநேரம், உலகக் கிண்ணத்திற்கு இந்திய பயணமாக முன்னர் பாகிஸ்தான் தமது பாதுகாப்பு அதிகாரிகள் கொண்ட ஒரு தொகுதியினை அங்கே அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும் அது தொடர்பிலான விடயங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை 

அதேநேரம் ஒருநாள் உலகக் கிண்ண போட்டி அட்டவணையில் பாகிஸ்தான் அணி விளையாடவிருக்கும் சில போட்டிகளின் திகதிகளில் மாற்றம் செய்யப்படும் எனவும் கூறப்பட்டிருப்பதோடு, அது தொடர்பில் விரைவில் உறுதிப்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<