Home Tamil குசல், சதீர அதிரடியில் கொழும்பை வீழ்த்தியது தம்புள்ள

குசல், சதீர அதிரடியில் கொழும்பை வீழ்த்தியது தம்புள்ள

Lanka Premier League 2023

142

LPL கிரிக்கெட் தொடரில் நேற்று (05) நடைபெற்ற தம்புள்ள அவுரா – கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகளுக்கு இடையிலான பரபரப்பான போட்டியில் தம்புள்ள அவுரா அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.  

குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம ஆகியோரின் அபார அரைச் சதங்கள் நூர் அஹ்மட், தனன்ஜய டி சில்வா ஆகியோரது நெருக்கடியான பந்துவீச்சுக்கள் என்பன தம்புள்ள அவுரா அணியின் வெற்றியை இலகுவாக்கின. 

LPL தொடரில் நேற்று மாலை நடைபெற்ற 8ஆவது லீக் போட்டியில் தம்புள்ள அவுராகொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகள் மோதின. 

கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது 

அதன்படி களமிறங்கிய தம்புள்ள அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் இணைந்த குசல் மெண்டீஸ்சதீர சமரவிக்ரம ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். இதில் இருவரும் அரைச் சதம் கடந்து அசத்தினர் 

சதீர சமரவிக்ரம 59 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, மறுமுனையில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட குசல் மெண்டிஸ் 8 சிக்ஸர்கள், 4 பௌண்டரிகளுடன் 87 ஓட்டங்களை எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் தம்புள்ள அவுரா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 192 ஓட்டங்களைக் குவித்தது 

கொழும்பு அணி தரப்பில் மதீஷ பத்திரன 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், நசீம் ஷா 21 ஓட்டங்களுக்கு 2 விக்n;கட்டுகளையும் வீழ்த்தினர் 

அதன்பின் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய கொழும்பு அணிக்கு நிரோஷன் திக்வெல்லபாபர் அசாம் ஜோடி ஆரம்ப வீரர்களாக களமிறங்கினர். இதில் திக்வெல்ல 16 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய பெதும் நிஸ்ஸங்கவும் 22 ஓட்டங்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார் 

மற்றொரு ஆரம்ப வீரரான பாபர் அசாம் அதிரடியாக விளையாடி 7 பௌண்டரிகளுடன் 41 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து இளம் வீரர் நுவனிந்து பெர்னாண்டோ அரைச் சதம் கடந்துடன் இறுதிவரை போராடி 56 ஓட்டங்களைச் எடுத்தார். 

இருப்பினும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கல் முடிவில் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியால் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் தம்புள்ள அவுரா அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது 

தமது நான்காவது போட்டியில் விளையாடிய தம்புள்ள அவுரா அணிக்கு இது இரண்டாவது வெற்றி என்பதுடன், மூன்றாவது போட்டியில் விளையாடிய கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு 2ஆவது தோல்வியாகும். 

Result


Colombo Strikers
182/4 (20)

Dambulla Aura
192/6 (20)

Batsmen R B 4s 6s SR
Avishka Fernando c Lakshan Sandakan b Matheesha Pathirana 12 18 1 1 66.67
Kusal Mendis c Babar Azam b Naseem Shah 87 46 4 8 189.13
Sadeera Samarawickrama b Chamika Karunaratne 59 35 7 1 168.57
Kusal Janith b Matheesha Pathirana 2 3 0 0 66.67
Dhananjaya de Silva not out 15 7 2 0 214.29
Alex Ross b Naseem Shah 4 7 0 0 57.14
Hayden Kerr b Matheesha Pathirana 0 2 0 0 0.00
Hasan Ali not out 6 2 1 0 300.00


Extras 7 (b 0 , lb 1 , nb 0, w 6, pen 0)
Total 192/6 (20 Overs, RR: 9.6)
Bowling O M R W Econ
Naseem Shah 4 0 21 2 5.25
Chamika Karunaratne 4 0 55 1 13.75
Mohammad Nawaz 3 0 37 0 12.33
Matheesha Pathirana 4 0 31 3 7.75
Jeffrey Vandersay  4 0 33 0 8.25
Dhananjaya Lakshan 1 0 14 0 14.00


Batsmen R B 4s 6s SR
Niroshan Dickwella c Sadeera Samarawickrama b Dhananjaya de Silva 16 8 3 0 200.00
Babar Azam lbw b Noor Ahmad  41 24 7 0 170.83
Pathum Nissanka b Hayden Kerr 22 28 1 1 78.57
Nuwanidu Fernando not out 56 39 4 4 143.59
Dhananjaya Lakshan c Hayden Kerr b Noor Ahmad  18 15 2 0 120.00
Chamika Karunaratne not out 20 7 1 2 285.71


Extras 9 (b 0 , lb 6 , nb 1, w 2, pen 0)
Total 182/4 (20 Overs, RR: 9.1)
Bowling O M R W Econ
Hayden Kerr 4 0 27 1 6.75
Dhananjaya de Silva 3 0 25 1 8.33
Pramod Madushan 3 0 36 0 12.00
Praveen Jayawickrama 2 0 16 0 8.00
Hasan Ali 4 0 38 0 9.50
Noor Ahmad  4 0 34 2 8.50



>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<