இலங்கை A அணியை பந்துவீச்சில் மிரட்டிய நஷீம் ஷா

Pakistan A tour of Sri Lanka 2021

121
PCB

சுற்றுலா பாகிஸ்தான் A கிரிக்கெட் அணிக்கும், இலங்கை A கிரிக்கெட் அணிக்கும் இடையிலான முதலாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டி இன்று (28) பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகியது.

சீரற்ற காலநிலை காரணமாக போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும்போது தனது முதலாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை A அணி 6 விக்கெட் இழப்பிற்கு 61 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் A அணியின் தலைவர் சவுத் சகீல், முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தார்.

இதன்படி, முதலில் துடுப்பாடக் களமிறங்கிய இலங்கை A அணி வீரர்கள் பாகிஸ்தானின் வேகப் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர்.

இதில் லஹிரு உதார 23 ஓட்டங்களுடனும், ஓசத பெர்னாண்டோ 12 ஓட்டங்களுடனும் ஏமாற்றம் கொடுத்தனர்.

பாகிஸ்தான் A தொடருக்கான இலங்கை குழாத்தில் மொஹமட் சிராஸ்!

அடுத்துவந்த அணித்தலைவர் சதீர சமரவிக்ரமவும், நுவனிந்து பெர்னாண்டோவும் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறினர்.

தொடர்ந்து களமிறங்கிய லசித் அபேரட்ன (3) LBW முறையிலும், ஆரம்ப வீரர் கமில் மிஷார (20) போல்ட் முறையிலும் நஷீம் ஷாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

எனவே, இலங்கை A அணி 22 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 61 ஓட்டங்களை எடுத்திருந்த போது மழை குறுக்கிட போட்டி தடைப்பட்டது.

இதனையடுத்து தொடர்ந்து மழை பெய்ததால் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தை நிறைவுசெய்வதாக நடுவர்கள் தீரமானித்தனர்.

பாகிஸ்தான் A அணியின் பந்துவீச்சை பொருத்தவரை நஷீம் ஷா 27 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்களையும், குர்ராம் ஷஸாத் 8 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை A அணி – 61/6 (22) – லஹிரு உதார 23, கமில் மிஷார 20, ஓசத பெர்னாண்டோ 13, நஷீம் ஷா 27/3, குர்ராம் ஷஸாத் 8/2

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<