சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றிருப்பதுடன், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரினையும் 2-0 என இழந்திருக்கின்றது.
ஐ.சி.சி. இன் ஒருநாள் சுபர் லீக்கினுள் வருகின்ற மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியானது இன்று (20) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகியது.
>> இலகு வெற்றியினைப் பதிவு செய்த இந்தியா
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவரான தசுன் ஷானக்க முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமது தரப்பிற்காகப் பெற்றார்.
இலங்கை அணி முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியினை சந்தித்த காரணத்தினால் ஒருநாள் தொடரினை தக்கவைக்க இப்போட்டியில் கட்டாய வெற்றியினை எதிர்பார்த்த வண்ணம் ஒரு மாற்றத்தினை மேற்கொண்டது. அதன்படி இசுரு உதானவிற்கு பதிலாக கசுன் ராஜித இலங்கை அணியில் சேர்க்கப்பட, இந்திய அணி மாற்றங்கள் எதுவுமின்றி களமிறங்கியது.
இலங்கை – அவிஷ்க பெர்னாந்து, மினோத் பானுக்க, பானுக்க ராஜபக்ஷ, தனன்ஞய டி சில்வா, சரித் அசலன்க, தசுன் ஷானக்க (தலைவர்), வனிந்து ஹஸரங்க, சாமிக கருணாரட்ன, கசுன் ராஜித, துஷ்மந்த சமீர, லக்ஷான் சந்தகன்
இந்தியா – சிக்கர் தவான் (தலைவர்), பிரித்வி சாவ், இஷான் கிஷான், மனிஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, குர்னல் பாண்டியா, தீபக் சாஹர், புவ்னேஸ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ்
தொடர்ந்து நாணய சுழற்சிக்கு அமைவாக முதல் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இலங்கை கிரிக்கெட் அணிக்கு மினோத் பானுக்க, அவிஷ்க பெர்னாந்து ஆகிய இருவரும் சிறந்த ஆரம்பத்தினை கொடுத்தனர்.
>> இலங்கை கிரிக்கெட்டுடன் கைகோர்க்கும் ‘நவலோக வைத்தியசாலை’
அதன்படி, இரண்டு வீரர்களும் இலங்கை அணியின் முதல் விக்கெட்டுக்காக 77 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர, இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்த மினோத் பானுக்க 42 பந்துகளை எதிர்கொண்டு 6 பெளண்டரிகள் அடங்கலாக 36 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
பின்னர், புதிய துடுப்பாட்டவீரராக களம் வந்த பானுக்க ராஜபக்ஷ ஓட்டங்கள் எதனையும் பெறாமல் ஆட்டமிழந்த போதும், அவிஷ்க பெர்னாந்து தன்னுடைய 5ஆவது ஒருநாள் அரைச்சதத்துடன் இலங்கைத் தரப்பினை வலுப்படுத்தினார்.
>> இந்திய கிரிக்கெட் அணியுடன் ஆடவுள்ள இலங்கை குழாம் வெளியீடு
இதனையடுத்து இலங்கை அணியின் மத்திய வரிசை வீரர்கள் ஜொலிக்காது போயினும், சரித் அசலன்க மற்றும் சாமிக்க கருணாரட்ன ஆகியோரின் சிறப்பான ஆட்டத்துடன் இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 275 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் தனது கன்னி ஒருநாள் அரைச்சதத்தினைப் பதிவு செய்த சரித் அசலன்க 68 பந்துகளுக்கு 6 பௌண்டரிகள் அடங்கலாக 65 ஓட்டங்களைப் பதிவு செய்ய, அவிஷ்க பெர்னாந்து 50 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். மறுமுனையில், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சாமிக்க கருணாரட்ன 5 பௌண்டரிகள் அடங்கலாக 33 பந்துகளுக்கு 44 ஓட்டங்களைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் பந்துவீச்சு சார்பில் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் புவ்னேஸ்வர் குமார் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருக்க, தீபக் சாஹர் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 276 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய இந்திய கிரிக்கெட் அணி, சிறப்பான ஆரம்பத்தினை காட்டிய போதும் துரித கதியில் விக்கெட்டுக்களை பறிகொடுத்து ஒரு கட்டத்தில் தடுமாற்றத்தினை எதிர்கொண்டது.
எனினும், பின்வரிசையில் களமிறங்கிய தீபக் சாஹர் போராட்டமான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்த இந்திய கிரிக்கெட் அணி போட்டியின் வெற்றி இலக்கினை 49.1 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 277 ஓட்டங்களுடன் அடைந்தது.
>> அவுஸ்திரேலிய அணியின் தலைவராக அலெக்ஸ் கெரி நியமனம்
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்த தீபக் சாஹர், இந்திய அணியின் 8ஆம் விக்கெட் இணைப்பாட்டமாக 84 ஓட்டங்களை புவ்னேஸ்குமாருடன் இணைந்து பகிர்ந்திருந்தார். அதோடு கன்னி ஒருநாள் அரைச்சதத்தினையும் பூர்த்தி செய்த சாஹர் 7 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 69 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார். அதேநேரம், சூர்யகுமார் யாதவ்வும் 53 ஓட்டங்களைப் பெற்று இந்திய அணியின் வெற்றியினை உறுதி செய்திருந்தார்.
இதேநேரம், இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் வனிந்து ஹஸரங்க 3 விக்கெட்டுக்களை கைப்பற்றிய போதும் அவரின் பந்துவீச்சு வீணாகியது.
போட்டியின் ஆட்டநாயகன் விருதினை இந்திய அணிக்காக தீபக் சாஹர் பெற்றுக்கொண்டார். இனி, இரண்டு அணிகளும் மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை (22) நடைபெறுகின்றது.
போட்டியின் சுருக்கம்
A PHP Error was encountered
Severity: Warning
Message: Invalid argument supplied for foreach()
Filename: controllers/Embed.php
Line Number: 86
Backtrace:
File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/application/controllers/Embed.php
Line: 86
Function: _error_handler
File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/index.php
Line: 315
Function: require_once
A PHP Error was encountered
Severity: Warning
Message: Invalid argument supplied for foreach()
Filename: embed/match_result.php
Line Number: 115
Backtrace:
File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/application/views/embed/match_result.php
Line: 115
Function: _error_handler
File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/application/controllers/Embed.php
Line: 92
Function: view
File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/index.php
Line: 315
Function: require_once
முடிவு – இந்திய அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றி
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<