இங்கிலாந்து தொடருக்கான பாகிஸ்தான் குழாம் அறிவிப்பு

411
Pak Squad Against Eng Tour

இலங்கை அணி இங்கிலாந்து மண்ணில் 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டிகொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இந்தத் தொடர் 5ஆம் திகதி முடிவடைகிறது.

அதன்பின் பாகிஸ்தான் அணி ஜூலை மாதம் 03ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 07ஆம் திகதி வரை சுமார் 60 நாட்கள் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாடவுள்ளது.

இந்தத் தொடரின் டெஸ்ட் போட்டிகளுக்கான 17 பேர் கொண்ட அணி விபரத்தை பாகிஸ்தான் கிரிக்கட் சபை அறிவித்துள்ளது. அதில் பாகிஸ்தான் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் முஹமத் ஆமிருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது அவர் 5 வருடங்களுக்குப் பின் விளையாடும் முதல் டெஸ்ட் போட்டியாகும். அத்தோடு இன்னுமொரு முக்கிய வேகப்பந்து வீச்சாளரான ஜுனைத் கான் மற்றும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அஹமத் ஷெசாத் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.

நேற்று வெளியான ஐ.சி.சி ஒருநாள் அணிகளுக்கான தரவரிசை

17 பேர் கொண்ட பாகிஸ்தான் குழாம்

1. முஹமத் ஹபீஸ்
2. ஷான் மசூத்
3. சமி அஸ்லம்
4. மிஸ்பா-உல்-ஹக் (தலைவர்)
5. யூனிஸ் கான்
6.அசார் அலி
7. அசாத் ஷபிக்,
8. இப்திகார் அஹமத்
9. சர்ப்ராஸ் அஹமத் (விக்கட் காப்பாளர்)
10. முஹமத் ரிஸ்வான் (விக்கட் காப்பாளர்)
11. சுல்பிக்கார் பாபர்
12. யாசிர் ஷா
13. வஹாப் ரியாஸ்
14. முஹமத்அமீர்
15. ரஹத் அலி
16. இம்ரான் கான்
17. சுஹைல் கான்

இங்கிலாந்து, பாகிஸ்தான் போட்டித்தொடரின் காலநேர அட்டவணை

பயிற்சிப் போட்டிகள்

ஜூலை 03 – 05 : சமர்செட் எதிர் பாகிஸ்தான்
ஜூலை 08 – 10 : சசெக்ஸ் எதிர் பாகிஸ்தான்
ஜூலை 29-30 : வொர்செஸ்டர்ஷைர் எதிர் பாகிஸ்தான்

இங்கிலாந்து, பாகிஸ்தான் டெஸ்ட் தொடர்

1ஆவது டெஸ்ட் போட்டி : ஜூலை 14-18
2ஆவது டெஸ்ட் போட்டி : ஜூலை 22-26
3ஆவது டெஸ்ட் போட்டி : ஆகஸ்ட் 03-07
4ஆவது டெஸ்ட் போட்டி : ஆகஸ்ட் 11-15

சரே அணி சார்பாக அதிக ஓட்டங்களைப் பெற்றார் சங்கா

அயர்லாந்து, பாகிஸ்தான் ஒருநாள் தொடர்

1ஆவது ஒருநாள் போட்டி : ஆகஸ்ட் 18
2ஆவது ஒருநாள் போட்டி : ஆகஸ்ட் 20

இங்கிலாந்து, பாகிஸ்தான் ஒருநாள் தொடர்

1ஆவது ஒருநாள் போட்டி : ஆகஸ்ட் 24
2ஆவது ஒருநாள் போட்டி : ஆகஸ்ட் 27
3ஆவது ஒருநாள் போட்டி : ஆகஸ்ட் 30
4ஆவது ஒருநாள் போட்டி : செப்டெம்பர் 01
5ஆவது ஒருநாள் போட்டி : செப்டெம்பர் 04

இங்கிலாந்து, பாகிஸ்தான் டி20 போட்டி
ஒரே ஒரு டி20 போட்டி : செப்டெம்பர் 04

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்