இலங்கை கிரிக்கெட் சபை தேர்தலை நடத்துவதற்கான இறுதித் திகதியை அறிவித்தது ஐசிசி

136

இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) தேர்தலை நடத்துவதற்கான கால எல்லையை எதிர்வரும்  பெப்ரவரி 9ஆம் திகதிவரை நீடிப்பதற்கு, சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) சம்மதம் தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபையை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா, கிரிக்கெட் சபையை பொறுப்பேற்றுள்ள அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி, கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா மற்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன ஆகியோர், நேற்று (29) ஐசிசி தலைவர் சஷங்க் மனோஹர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி டேவிட் ரிச்சட்சன் ஆகியோரை டுபாயில் வைத்து சந்தித்து கலந்துரையாடினர்.

விளையாட்டுத்துறை அமைச்சர் – ஐ.சி.சி இடையில் ஆகஸ்ட் 28இல் விசேட சந்திப்பு

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தற்போது எதிர்நோக்கியுள்ள …

இந்த சந்திப்பில் ஐசிசி மற்றும் இலங்கை கிரிக்கெட் சபைக்கிடையில் பரஸ்பர ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதுடன், இதில் முக்கிய அம்சமாக இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்தல் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

இதன்படி, சிக்கலுக்கு உள்ளாகியுள்ள இலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கான தேர்தல் குழுவொன்றை நியமிப்பதற்கு இரு தரப்பும் உடன்பட்டமை, சந்திப்பில் எடுக்கப்பட்ட முக்கியமான தீர்மானமாகும்.

இதன்படி, நியமிக்கப்படவுள்ள தேர்தல் குழுவில் ஓய்வுபெற்ற நீதித்துறை அதிகாரிகள் இருவர் உள்ளடக்கப்படவுள்ளதுடன், தேர்தல் திணைக்களத்தின் அனுபவம் வாய்ந்த ஓய்வுபெற்ற அதிகாரி அல்லது பொது சேவைகளில் இருந்து ஓய்வுபெற்ற தேர்தல் தொடர்பான அனுபவம் வாய்ந்த அதிகாரியொருவரையும் உள்வாங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இலங்கை கிரிக்கெட் சபை, அரசாங்க அதிகாரிகளினால் முன்கொண்டு செல்லப்படுவதால்  ஐசிசியின் வாக்களிக்கும் உரிமை தொடர்ந்தும் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…