இரண்டு LPL அணிகளின் உரிமையாளர்கள் விலகல்

Lanka Premier League - 2021

279

லங்கா பிரீமியர் லீக் T20 (LPL) கிரிக்கெட் தொடரில் இடம்பெற்றுள்ள கொழும்பு கிங்ஸ் மற்றும் தம்புள்ள வைகிங் ஆகிய அணிகளின் உரிமையாளர்கள் அணிகளுக்கான தமது உரிமத்தில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த இரண்டு அணிகளினதும் உரிமைத்துவம் இடைநிறுத்தப்படுவதாக போட்டிகளை நடத்தும் IPG  நிறுவனம் அறிவித்துள்ளது

இரண்டாவது தடவையாக இவ்வருடம் நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் T20 கிரிக்கெட் தொடர் ஜுலை மாதம் 29ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. 

இந்த நிலையில், இம்முறை லங்கா பீரிமியர் லீக்கில் பங்குபற்றவுள்ள ஐந்து அணிகளினதும் உள்ளூர் நட்சத்திர வீரர்களின் பெயர் விபரங்கள் இலங்கை கிரிக்கெட் சபையினால் அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதேபோல, வெளிநாட்டு வீரர்களுக்கான பதிவுகளும் தற்போது இடம்பெற்று வருகின்றன

இதனிடையே, கடந்த வருடத்தைப் போல இம்முறை லங்கா பிரீமியர் லீக்கில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் மற்றும் கோல் க்ளேடியேட்டர்ஸ் அணிகள் அதே உரிமையாளர்களினால் தக்கவைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

எனினும், ஏனைய மூன்று அணிகளின் உரிமையாளர்கள் தொடர்பில் எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை

இந்த நிலையில், லங்கா பிரீமியர் லீக் தொடரை 2024 வரை நடத்துவதற்கான உரிமையை டுபாயைத் தலைமையிடமாகக் கொண்ட இனோவேடிவ் ப்ரொடக்ஷன் குரூப் நிறுவனம் (IPG) பெற்றுக்கொண்டுள்ளது.

LPL 2021 தொடர் நடைபெறும் இடம் உறுதியானது

இதில் கடந்த வருடம் நடைபெற்ற அங்குரார்ப்பண லங்கா பிரீமியிர் லீக் தொடரில் அரையிறுதி வரை வந்த தம்புள்ள வைகிங் அணியின் உரிமையை பொலிவுட் நடிகரும், பிரபல தொழிலதிபருமான சச்சின் ஜோஷி பெற்றுக்கொண்டார்.

அதேபோல, மற்றுமொரு அரையிறுதி அணிகளில் ஒன்றான கொழும்பு கிங்ஸ் அணியின் உரிமையை முராத் முஸ்தாப உள்ளிட்ட பாஸா குழுமம் (FAZA) பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில், நிதி நெருக்கடி உள்ளிட்ட சில காரணங்களால் இவ்வருடம் நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக்கில் தொடரிலிருந்து கொழும்பு கிங்ஸ் மற்றும் தம்புள்ள வைகிங் ஆகிய அணிகளின் உரிமைத்துவம் இடைநிறுத்தப்படுவதாக IPG நிறுவனம் அறிவித்துள்ளது

இதன்படி, குறித்த இரண்டு அணிகளையும் வாங்குவதற்கு பல முன்னணி நிறுவனங்கள் முன்வந்துள்ளதாகவும், அதற்கான இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருவதாகவும் IPG தெரிவித்துள்ளது.

T20‌ ‌உலகக்‌ ‌கிண்ணம்‌ ‌ஐக்கிய‌ ‌அரபு‌ ‌இராச்சியத்தில்‌ ‌

இதுதொடர்பில் லங்கா பிரீமியர் லீக் தொடரின் இயக்குனர் ரவீன் விக்ரமரட்ன கருத்து தெரிவிக்கையில்

”இம்முறை லங்கா பிரீமியர் லீக்கில் கொழும்பு கிங்ஸ் மற்றும் தம்புள்ள வைகிங் ஆகிய அணிகளை வாங்குவதற்கு உரிமையாளர்கள் முன்வந்துள்ளார்கள். அதன் விபரங்களை நாங்கள் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அனுப்பி வைத்துள்ளோம்.  

.சி.சியின் ஊழல் தடுப்புப் பிரிவின் அறிக்கை கிடைக்கும் வரை எம்மால் அதுதொடர்பில் எந்தவொரு தகவல்களையும் வெளியிட முடியாது

அதேபோல, இவ்வாறு உரிமையாளர்கள் விலகியது இம்முறை போட்டிகளுக்கு எந்தவொரு பாதிப்பினையும் ஏற்படுத்தாது

இதில் மற்றைய மூன்று அணிகளின் உரிமையாளர்கள் தொடர்ந்து அந்நந்த அணிகளை தக்கவைத்துக்கொள்ள முன்வந்துள்ளனர்

எதுஎவ்வாறாயினும், ஆறு அணிகளை களமிறக்க திட்டமிடப்பட்ட போதிலும், இவ்வருட போட்டிகளில் ஐந்து அணிகள் மாத்திரம் தான் விளையாடும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…