நான்காவது தடவையாக IPL சம்பியன் கிண்ணத்தை வென்ற சென்னை சுப்பர் கிங்ஸ்

Indian Premier League 2021

161

ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் இறுதிப் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 4வது தடவையாக சம்பியன் கிண்ணத்தை வெற்றிக்கொண்டது.

முதல் குவாலிபையர் போட்டியில் டெல்லி கெபிட்டல்ஸ் அணியை வீழ்த்தி, சென்னை சுப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியதுடன், கொல்கத்தா அணி, இரண்டாவது குவாலிபையர் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தது.

ஆறு அறிமுக வீரர்களுடன் பங்களாதேஷை வீழ்த்திய இலங்கை U19 அணி

இந்தநிலையில், எந்தவித மாற்றங்களையும் மேற்கொள்ளாமல், இரண்டு அணிகளும் களமிறங்க, நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொல்கத்தா அணி களத்தடுப்பை தேர்வுசெய்தது.

கொல்கத்தா அணியின் பணிப்பின்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் மிகச்சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர். லீக் போட்டிகளிலிருந்து சென்னை அணியின் ஆரம்பம் மிகச்சிறந்ததாகவே அமைந்திருந்தது.

அந்தவகையில், இறுதிவரை துடுப்பெடுத்தாடி, இறுதிப்பந்தில் ஆட்டமிழந்த பெப் டு பிளசிஸ் 59 பந்துகளில் 86 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, மொயீன் அலி 20 பந்துகளில் 37 ஓட்டங்களையும், ருதுராஜ் கய்கவட் 32 ஓட்டங்களையும், ரொபின் உத்தப்பா 15 பந்துகளில் 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

களமிறங்கிய அனைத்து துடுப்பாட்ட வீரர்களதும் சிறந்த பங்களிப்பு கிடைக்க, சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 192 என்ற மிகச்சிறந்த ஓட்ட எண்ணிக்கையை பெற்றுக்கொண்டது.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி, சுப்மான் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோரின் சிறந்த இணைப்பாட்டம் மூலமாக வேகமாக ஓட்டங்களை குவித்த போதும், மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்கள் சோபிக்க தவறியதால், 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி, கிண்ணத்தை தவறவிட்டது.

இலங்கை – பப்புவா நியூ கினியா அணிகளுக்கு இடையிலான பயிற்சிப்போட்டியின் Highlights

சுப்மான் கில் 51 ஓட்டங்களையும், வெங்கடேஷ் ஐயர் 50 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுக்க, சிவம் மாவி இறுதிநேரத்தில் 13 பந்துகளுக்கு 20 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, ஏனைய வீரர்களில் எவரும் ஒற்றையிலக்க ஓட்ட எண்ணிக்கையை கடக்கவில்லை.

சென்னை அணி சார்பாக, அபாரமாக பந்துவீசிய சர்துல் தாகூர் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், ஜோஸ் ஹெஷல்வூட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்த, கொல்கத்தா அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

அதன்படி, 2018ம் ஆண்டு இறுதியாக IPL கிண்ணத்தை சுவீகரித்திருந்த சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, மகேந்திரசிங் டோனி தலைமையில் நான்காவது கிண்ணத்தையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<