அவுஸ்திரேலிய – மேற்கிந்திய தீவுகள் T20 தொடர் ஒத்திவைப்பு

126
AFP

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை (Cricket Australia) தமது நாட்டு அணி ஒக்டோபர் மாத ஆரம்பத்தில் மேற்கிந்திய தீவுகளுடன் விளையாடவிருந்த மூன்று போட்டிகள் கொண்ட T20i தொடரினை காலவரையின்றி ஒத்திவைத்திருப்பதாக தெரிவித்திருக்கின்றது. 

ஸ்டோக்ஸின் தீர்மானத்தால் வேதனையடைந்த ஸ்டுவர்ட் ப்ரோட்

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையுடன், அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட தீர்மானம் ஒன்றுக்கு அமைவாகவே இரண்டு நாட்டு அணிகளும் விளையாடவிருந்த T20i தொடர் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது. 

முன்னதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியும் மேற்கிந்திய தீவுகள் அணியும் அவுஸ்திரேலிய மண்ணில் விளையாடவிருந்த T20i தொடர் ஒக்டோபர் மாதத்தின் 4ஆம், 6ஆம் மற்றும் 9ஆம் திகதிகளில் நடைபெறவிருந்ததோடு அது இந்த ஆண்டு நடைபெற எதிர்பார்க்கப்பட்ட T20i உலகக் கிண்ணத்திற்கு முன்னர் இரு அணிகளும் தங்களை தயார்படுத்திக் கொள்ள உதவுகின்ற கிரிக்கெட் தொடராகவும் அமையவிருந்தது. 

எனினும், அவுஸ்திரேலியாவில் ஒக்டோபர் மாதம் நடைபெறவிருந்த T20i உலகக் கிண்ணத் தொடர் கொவிட்-19 வைரஸ் தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக இரத்துச் செய்யப்பட்டதனை அடுத்து, அதே காலப்பகுதியில் நடைபெறவிருந்த அவுஸ்திரேலிய – மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான இந்த T20i தொடரும், கிரிக்கெட் தொடர் ஒன்றினை ஏற்பாடு செய்வதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்களை கருத்திற் கொண்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

இதேநேரம், இந்த T20i தொடர் ஒத்திவைக்கப்பட்டிருப்பதால், இந்த T20i தொடரின் போட்டிகள் நடைபெறவிருந்த மைதானங்களில் ஒன்றான கோல்ட் கோஸ்ட் மைதானம் தனது கன்னி சர்வதேச கிரிக்கெட் போட்டியினை நடாத்த இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டிய நிலை ஒன்றும் உருவாகியிருக்கின்றது. 

அவுஸ்திரேலியாவை ஆட்டம் காணச் செய்த மெண்டிஸின் மிஷ்ட்ரி!

அதேவேளை, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடர் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகள் அணியுடனான தொடரினை அடுத்து, ஒக்டோபர் மாதம் இந்தியாவுடன் விளையாடவிருந்த மூன்று போட்டிகள் கொண்ட T20i தொடரும் ஐ.பி.எல். தொடர் காரணமாக ஒத்திவைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க