சதம் விளாசிய ஓஷதவுக்கு டெஸ்ட் தரவரிசையில் பாரிய முன்னேற்றம்

Oshada Fernando

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் சர்வதேச கிரிக்கெட் பேரவையானது டெஸ்ட் வீரர்களுக்கான புதிய தரப்படுத்தலை இன்று (24) வெளியிட்டுள்ளது. 

அதன் பிரகாரம் குறித்த தொடரில் பிரகாசித்த இலங்கை மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் தரவரிசையில் முன்னேற்றங்கள் கண்டுள்ளனர். இதில் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையிலேயே அதிக மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. அத்துடன் அதிக வீரர்கள் வாழ்நாள் அதிகூடிய டெஸ்ட் தரவரிசை புள்ளிகளை பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் ஷாமர கபுகெதர!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஷாமர கபுகெதர அனைத்து…

துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசை

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வளர்ந்துவரும் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான பாபர் அஸாம் தொடரில் தான் விளையாடிய மூன்று இன்னிங்சுகளில் 2 சதங்கள், 1 அரைச்சதத்துடன் மொத்தமாக 262 ஓட்டங்களை குவித்து பாகிஸ்தான் அணிக்கு துடுப்பாட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார். 

இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள தரவரிசையில் பாபர் அஸாம் வாழ்நாள் அதிக டெஸ்ட் தரவரிசை புள்ளிகளுடன் மூன்று நிலைகள் உயர்ந்து 767 தரவரிசை புள்ளிகளுடன் ஒன்பதாமிடத்தில் இருந்து ஆறாமிடத்திற்கு முன்னேறியுள்ளார். மேலும் ஒரு இன்னிங்ஸில் 63 ஓட்டங்களை குவித்த பாகிஸ்தான் வீரர் அஸாட் சபீக் 2 நிலைகள் உயர்ந்து 20ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

மேலும் இறுதி டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் சதமடித்த பாகிஸ்தான் அணித்தலைவர் அஸார் அலி 610 தரவரிசை புள்ளிகளுடன் 3 நிலைகள் உயர்ந்து 26ஆவது நிலைக்கு முன்னேறியுள்ளதுடன், இலங்கையின் தினேஷ் சந்திமால் 583 தரவரிசை புள்ளிகளுடன் 1 நிலை உயர்ந்து 33ஆவது நிலைக்கு முன்னேறியுள்ளார். 

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஒரு அரைச்சதத்துடன் தொடரில் 119 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட இலங்கையின் விக்கெட் காப்பாளர் நிரோஷன் டிக்வெல்ல 2 நிலைகள் உயர்ந்து 591 தரவரிசை புள்ளிகளுடன் (வாழ்நாள் அதிகூடிய) 31ஆவது நிலைக்கு வந்துள்ளார். அத்துடன் இறுதி டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் சதமடித்து, தொடரில் இலங்கை அணி சார்பாக அதிக ஓட்டங்களை (146) குவித்த ஓஷத பெர்னாண்டோ வாழ்நாள் அதிகூடிய தரவரிசை புள்ளிகளுடன் (509) 17 நிலைகள் உயர்ந்து 52ஆவது நிலைக்கு வந்துள்ளார்.

BPL 2019: 4 ஓட்டங்களினால் கன்னி சதத்தை தவறவிட்ட பானுக ராஜபக்ஷ

பங்களாதேஷில் நடைபெற்றுவரும் பங்கபந்து பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் தொடரின் 17..

ஒரு சதம், ஒரு அரைச்சதத்துடன் தொடரில் 140 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஷான் மசூத் 12 நிலைகள் உயர்ந்து 553 தரவரிசை புள்ளிகளுடன் (வாழ்நாள் அதிகூடிய) 40ஆவது நிலைக்கு உயர்ந்துள்ளார். அத்துடன் இலங்கையுடனான தொடரில் டெஸ்ட் அறிமுகம் பெற்றுக்கொண்ட ஆபித் அலி குறித்த தொடரில் 3 இன்னிங்ஸ்களில் இரு சதங்களுடன் 321 ஓட்டங்களை குவித்து தொடர் ஆட்டநாயகன் விருது வென்றிருந்தார். 

இதன் மூலம் முதல் முறையாக டெஸ்ட் தரவரிசையில் இடம்பிடித்த அவர் 473 தரவரிசை புள்ளிகளை பெற்று மிக விரைவாக 62ஆவது நிலையில் இடம்பெற்றுள்ளார். மேலும் இலங்கை அணியின் அனுபவ வீரர்கள் பாகிஸ்தான் தொடரில் பிரகாசிக்காததன் காரணமாக டெஸ்ட் தரவரிசையில் தங்களின் தரவரிசை நிலைகளை இழந்து பின்னடைவுக்கு முகங்கொடுத்துள்ளனர். 

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை

குறித்த தொடரில் விளையாடிய பாகிஸ்தான் மற்றும் இலங்கை வீரர்களினால் முதல் பத்து நிலைகளுக்கு எவ்வித மாற்றங்களையும் ஏற்படுத்த முடியவில்லை. தொடரில் 6 விக்கெட்டுக்களை வீழ்த்திய பாகிஸ்தான் வீரர் மொஹம்மட் அப்பாஸ் 741 தரவரிசை புள்ளிகளுடன் 15ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

இதற்கு அடுத்தாக தொடரில் 7 விக்கெட்டுக்களை வீழ்த்திய இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் லஹிரு குமார 4 நிலைகள் உயர்ந்து 496 தரவரிசை புள்ளிகளுடன் (வாழ்நாள் அதிகூடிய) 32ஆவது நிலைக்கு உயர்ந்துள்ளார். அத்துடன் தொடரில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய பாகிஸ்தானின் சஹீன் அப்ரிடி 8 நிலைகள் உயர்ந்து 432 தரவரிசை புள்ளிகளுடன் (வாழ்நாள் அதிகூடிய) 39ஆவது நிலைக்கு வந்துள்ளார். 

இலங்கைக்கு எதிரான இந்திய T20 குழாம் அறிவிப்பு

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷின் ஒரு அங்கமாக 2 போட்டிகள் கொண்ட..

அத்துடன் கசுன் ராஜித (இலங்கை) 49ஆவது நிலைக்கு, ஹாரிஸ் சுஹைல் (பாக்.) 67ஆவது நிலைக்கும், நஸீம் ஷாஹ் (பாக்.) 79ஆவது நிலைக்கும் முன்னேறியுள்ளனர். அத்துடன் இவர்கள் மூவரும் தங்களது வாழ்நாள் அதிகூடிய தரவரிசை புள்ளிகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<