சந்துன் மெண்டிஸின் சகலதுறை ஆட்டத்தால் போட்டியை வெற்றி தோல்வியின்றி முடித்த ரிச்மண்ட் கல்லூரி

177

சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட டிவிஷன் 1 பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் 3 போட்டிகள் திங்கட்கிழமை (29) ஆரம்பமானதோடு மேலும் ஒரு போட்டி நிறைவடைந்தது.

தர்மராஜ கல்லூரி, கண்டி எதிர் ரிச்மண்ட் கல்லூரி, காலி

சந்துன் மெண்டிஸின் சகலதுறை ஆட்டத்தின் மூலம் இன்னிங்ஸ் தோல்வி நெருக்கடியில் இருந்து தப்பித்த ரிச்மண்ட் கல்லூரி, தர்மராஜ கல்லூரிக்கு எதிரான போட்டியை வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடித்தது.

தர்மராஜ கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய தர்மராஜ அணி முதல் இன்னிங்சுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 234 ஓட்டங்களை பெற்றது. இதனை அடுத்த துடுப்பாடிய ரிச்மண்ட் கல்லூரி 130 ஓட்டங்களுக்கே சுருண்டு இரண்டாவது இன்னிங்சுக்கு பலோ ஓன் (Follow on) செய்தது.

வடக்கில் நிர்மானிக்கப்படவுள்ள முதலாவது சர்வதேச கிரிக்கெட் மைதானம்

எனினும் சந்துன் மெண்டிஸ் ஆட்டமிழக்காது 80 ஓட்டங்களையும், திலும் சதீர ஆட்டமிழக்காது 59 ஓட்டங்களையும் பெற ரிச்மண்ட் அணி இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 267 ஓட்டங்களை பெற்ற நிலையில் எதிரணிக்கு 164 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதன்படி இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த தர்மராஜா கல்லூரி 76 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது ஆட்டநேரம் முடிவுற்றது. ரிச்மண்ட் கல்லூரியின் துடுப்பாட்டத்தில் சோபித்த சந்துன் மெண்டிஸ் தனது சுழல் பந்து வீச்சால் போட்டியில் மொத்தம் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

தர்மராஜ கல்லூரி, கண்டி (முதல் இன்னிங்ஸ்) – 234 (59.3) – துலாஜ் பண்டார 82, பவந்த உடகமுவ 76, கசுன் குணவர்தன 45, சந்துன் மெண்டிஸ் 6/60, அவிந்து தீக்ஷன 2/52

ரிச்மண்ட் கல்லூரி, காலி (முதல் இன்னிங்ஸ்) – 130 (40.5) – ஆதித்ய சிறிவர்தன 41, விமுத் சப்னக்க 23, உபேந்திர வர்ணகுலசூரிய 5/46, நவிந்த டில்ஷான் 3/27

ரிச்மண்ட் கல்லூரி, காலி (இரண்டாவது இன்னிங்ஸ்) F/O – 267/5d (40) – சந்துன் மெண்டிஸ் 80*, திலும் சுதீர 59*, அவிந்து தீக்ஷன 52, ஆதித்ய சிறிவர்தன 39

தர்மராஜ கல்லூரி, கண்டி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 76/7 (37) – சந்துன் மெண்டிஸ் 5/38, அவிந்து தீக்ஷன 2/37

முடிவு – போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது.


புனித சில்வெஸ்டர் கல்லூரி, கண்டி எதிர் ஆனந்த கல்லூரி, கொழும்பு

ஆனந்த கல்லூரி மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் புனித சில்வெஸ்டர் கல்லூரி முதல் இன்னிங்சுக்கு 308 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையை எட்டியது. சில்வெஸ்டர் கல்லூரி அணிக்காக மனோஹரன் பவித்ரன் 85 ஓட்டங்களை பெற்று வலுச்சேர்த்தார்.

பங்களாதேஷ் டெஸ்ட் அணியில் 4 வருடங்களின் பின் இணையும் நட்சத்திர வீரர்

இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த ஆனந்த கல்லூரி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 18 ஓட்டங்களை பெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்

புனித சில்வெஸ்டர் கல்லூரி, கண்டி (முதல் இன்னிங்ஸ்) – 308 (89.4) – மனோஹரன் பவித்ரன் 85, நிம்சர அத்தனகல்ல 48, பசன் ஹெட்டியாரச்சி 24, நதீர பாலசூரிய 23, உசிந்து நிஸ்ஸங்க 22, சாமிக்க குணசேகர 2/44, கீசன் விஷ்வஜித் 2/49, ஷமல் ஹிருஷன் 2/52, அசெல் சிகெரா 2/79

ஆனந்த கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 18/0 (3)


தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு எதிர் நாலந்த கல்லூரி, கொழும்பு

நாலந்த கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் தனது முதல் இன்னிங்சை ஆடும் தர்ஸ்டன் கல்லூரி ஸ்திரமான ஓட்டங்களை பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற நாலந்த அணி எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது. இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய தர்ஸ்டன் அணிக்கு ஜனுஷ்க பெர்னாண்டோ சிறப்பாக துடுப்பெடுத்தாடி 66 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது களத்தில் உள்ளார். தர்ஸ்டன் அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது 8 விக்கெட்டுகளை இழந்த 265 ஓட்டங்களை பெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்   

தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 265/8 (96) – ஜனுஷ்க பெர்னாண்டோ 66*, நிபுன் லக்ஷான் 30, நிமேஷ் லக்ஷான் 26, யேஷான் விக்ரமாரச்சி 24, அயேஷ் ஹர்ஷன 23*, யொஹான் சச்சித்த 20, மஹிம வீரகோன் 2/30, கவீஷ மதுரப்பெரும 2/38, லக்ஷித மானசிங்க 2/57  


புனித செபஸ்டியன் கல்லூரி, மொரட்டுவை எதிர் டி.எஸ் சேனநாயக்க கல்லூரி, கொழும்பு

புனித செபஸ்டியன் கல்லூரி, மொரட்டுவை (முதல் இன்னிங்ஸ்) – 331/8 (88) – ஜனிஷ்க பெரேரா 82, ஷனால் பெர்னாண்டோ 81, தருஷ பெர்னாண்டோ 52, பிரவீன் குரே 42, தசுன் பெரேரா 2/31, நெதுஷன் குமார 2/55

இரண்டு போட்டிகளினதும் இரண்டாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நாளை தொடரும்.