வரலாற்றில் இன்று : மே மாதம் 17

1215
Sanath Jayasuriya

1997ஆம் ஆண்டுஜயசூரிய 151*

பெப்சி கிண்ணப் போட்டியின் போது இந்திய அணிக்கு எதிராக இலங்கை அணியின் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் சனத் ஜயசூரிய ஆட்டம் இழக்காமல் 151 ஓட்டங்களைப் பெற்றார். மும்பை வெங்கடே மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கட் இழப்பிற்கு 225 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 40.5 ஓவர்களில் 5 விக்கட்டுகள் இழப்பிற்கு 229 ஓட்டங்களைப் பெற்று 5 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது. இலங்கை அணி சார்பில் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் சனத் ஜயசூரிய 120 பந்துகளுக்கு முகங் கொடுத்து ஆட்டம் இழக்காமல் 17 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கலாக  151 ஓட்டங்களைப் பெற்றார்.

வரலாற்றில் நேற்றைய நாள் : மே மாதம் 16

1968ஆம் ஆண்டுமிக்கி ஆர்த்தர் பிறப்பு

சமீபத்தில் பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் பயிற்சியாளராக தெரிவு செய்யப்பட்ட மிக்கி ஆர்த்தரின் பிறந்த தினமாகும். தென் ஆபிரிக்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தனது தாய் நாட்டிற்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் பயிற்சியாளராக செயற்பட்டுள்ளார்.

2001ஆம் ஆண்டுஇங்கிலாந்து அணியின் இனிங்க்ஸ் வெற்றி

2001ஆம் ஆண்டு பாகிஸ்தான் இங்கிலாந்திற்கு சுற்றப்பயணம் செய்து விளையாடிய போது 1ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு இனிங்க்ஸ் மற்றும் 9 ஓட்டங்களால் வெற்றி பெற்று இருந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி தமது  1ஆவது இனிங்க்ஸில் 391 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு  துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி தமது 1ஆவது இனிங்க்ஸில் 203 ஓட்டங்களுக்கும் தமது 2வது இனிங்க்ஸில் 179  ஓட்டங்களுக்கும் சுருண்டது. இதன் மூலம் இங்கிலாந்து அணி ஒரு இனிங்க்ஸ் மற்றும் 9 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

மே மாதம் 17ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1923 ஒலிவ் ஸ்மித் (அவுஸ்திரேலியா)
  • 1932 பொலி மார்ஷல் (இங்கிலாந்து)
  • 1944 அரிப் பட் (பாகிஸ்தான்)
  • 1945 பகவத் சந்திரசேகர் (இந்தியா)
  • 1968 மிக்கி ஆர்த்தர்  (தென் ஆபிரிக்கா)
  • 1971 அல்லிகுய்லர்ஸ் (தென் ஆபிரிக்கா)
  • 1976 எட்கர் ஷிபெர்லி (நெதர்லாந்து)
  • 1990 தெம்பா பவுமா (தென் ஆபிரிக்கா)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்