வரலாற்றில் இன்று : மே மாதம் 16

305
OTD-May-16

2010ஆம் ஆண்டு – இங்கிலாந்து டி20 உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது

2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.சி.சி டி20 உலகக் கிண்ணத்தை இங்கிலாந்து கைப்பற்றியது. இது இங்கிலாந்து உலகத் தொடர் ஒன்றில் வென்ற முதல் வெற்றியாகும். இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 147 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு 148 என்ற வெற்றி இலக்கோடு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 17 ஓவர்களில் 3 விக்கட்டுகளை இழந்து 148 ஓட்டங்களைப் பெற்று 7 விக்கட்டுகளால் போட்டியை வெற்றி கொண்டு டி20 உலக சம்பியன் பட்டதை சுவீகரித்தது.

1956ஆம் ஆண்டு – ஜிம் லெகர் இனிங்ஸில் 10 விக்கட்டுகளைக் கைப்பற்றினார்  

1956ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்து இருந்த போது லண்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற 3 நாள் பயிற்சிப் போட்டியின் போது சரே அணியின் பந்துவீச்சாளர் ஜிம் லெகர் ஒரு இனிங்\ஸில் 88 ஓட்டங்களைக் கொடுத்து 10 விக்கட்டுகளையும் கைப்பற்றி இருந்தார். இப்போட்டியில் சரே அணி 10 விக்கட்டுகளால் அவுஸ்திரேலிய அணியை தோற்கடித்து இருந்தது.

வரலாற்றில் நேற்றைய நாள் : மே மாதம் 15

1953ஆம் ஆண்டுசரே அணியின் இனிங்க்ஸ் வெற்றி

வார்விக்ஷர் அணிக்கு எதிரான உள்ளூர் கவுண்டிப் போட்டியில் சரே அணி ஒரு இனிங்ஸ் மற்றும் 49 ஓட்டங்களால் வெற்றி பெற்று இருந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய வார்விக்ஷர் அணி தமது முதல் இனிங்ஸில் 5 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. பதிலளித்த சரே அணி  தமது முதல் இனிங்சில் 146 ஓட்டங்களைப் பெற்றது. 101 ஓட்டங்கள் பின்னிலையில் தமது 2ஆவது இனிங்ஸைத் தொடர்ந்த வார்விக்ஷர் அணி 52 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதன் மூலம் சரே அணி ஒரு இனிங்ஸ் மற்றும் 49 ஓட்டங்களால் வெற்றி பெற்று இருந்தது.

மே மாதம் 16ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

1914 ஜோய் லிபெர்ட் (இங்கிலாந்து)
1962 கெரி க்ரொகர் (சிம்பாப்வே)
1972 மெத்திவ் ஹார்ட் (நியுசிலாந்து)
1975 நிரோஷன் பண்டாரதிலக (இலங்கை)
1976 டர்க் நெனிஸ் (அவுஸ்திரேலியா)
1982 நிகிதா மில்லர் (மேற்கிந்திய தீவுகள்)
1990 ஜேம்ஸ் ஹெரிஸ் (இங்கிலாந்து)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்