அழைப்பு T20 தொடரின் பயிற்றுவிப்பாளர்கள் விபரம் வெளியீடு

449
 

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) ஆசியக் கிண்ணம் மற்றும் T20 உலகக் கிண்ணத் தொடர் என்பவற்றுக்கு இலங்கை வீரர்களை தயார்படுத்தும் நோக்கில் ஒழுங்கு செய்துள்ள அழைப்பு T20 தொடரில் பங்கெடுக்கும் அணிகளின் பயிற்றுவிப்பாளர்கள் தொடர்பிலான விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

>> பிக் பேஷ் லீக் (BBL) வீரர்கள் ஏலத்தில் ஐந்து இலங்கை வீரர்கள்

இம்மாதம் 08ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ள அழைப்பு T20 தொடரில் நான்கு அணிகள் பங்கெடுக்கவுள்ளதோடு, இதில் SLC ரெட்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக தர்ஷன கமகே செயற்படவிருக்கின்றார்.

அதேநேரம், SLC புளூஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பு மனோஜ் அபேவிக்ரமவிற்கு வழங்கப்பட்டிருக்க, SLC கீரின்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராகும் வாய்ப்பினை ஜப்னா கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான திலின கண்டம்பி பெற்றிருக்கின்றார். இவர்களோடு  SLC கிரேய்ஸ் அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக அவிஷ்க குணவர்தன செயற்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அழைப்பு T20 தொடரில் பங்கேற்கும் அணிகளின் உதவிப் பயிற்சியாளர்கள், முகாமையாளர்கள் குறித்த விபரங்களும் வெளியிடப்பட்டிருக்கின்றன.

>> WATCH – “இந்த வாய்ப்பு எனக்கு இலகுவாக கிடைத்துவிடவில்லை” – பிரபாத் ஜயசூரிய!

மறுமுனையில் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ள அழைப்பு T20 தொடரின் அனைத்துப் போட்டிகளையும், கிரிக்கெட் இரசிகர்கள் அனுமதிச் சீட்டுக்கள் (Tickets) இன்றி இலவசமாக பார்வையிட முடியும் எனவும் குறிப்பிடப்படப்பட்டிருக்கின்றது.

ரெட்ஸ் புளூஸ் கீரின்ஸ் கிரேய்ஸ்
தலைமைப் பயிற்சியாளர் தர்சன கமகே மனோஜ் அபேவிக்ரம திலின கண்டம்பி அவிஷ்க குணவர்தன
உதவி பயிற்சியாளர் உபுல் சந்தன மலிந்த வர்ணபுர ருவின் பீரிஸ் சஜீவ வீரக்கோன்
அணி முகாமையாளர் சம்ஷீர் ஜலில் ஷேன் பெர்னாண்டோ வினோதன் ஜோன் சரித் சேனநாயக்க

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<