பலம் கொண்ட மோதலாக அமையவுள்ள FFSL தலைவர் கிண்ண அரையிறுதி

Vantage FFSL President’s Cup 2020

582

வன்டேஜ் FFSL தலைவர் கிண்ண கால்பந்து தொடரின் அரையிறுதி சுற்றில் மோதும் அணிகளை தெரிவு செய்வதற்கான குலுக்கல் நிகழ்வு இன்று (26) இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைமையகத்தில் இடம்பெற்றது. 

இதன்படி, ஜாவா லேன் விளையாட்டு கழகம் புளூ ஈகல்ஸ் விளையாட்டு கழகத்தை எதிர்கொள்ளவுள்ளதுடன், கொழும்பு கால்பந்து கழகம் ரெட் ஸ்டார்ஸ் கால்பந்து கழகத்தை எதிர்கொள்ளவுள்ளது. 

நியூ ஸ்டாரின் வெற்றி பறிப்பு: புளூ ஈகல்ஸ் அரையிறுதியில்

இத்தொடரில் நடந்து முடிந்த முதல் காலிறுதியில் ஜாவா லேன் அணி டிபென்டர்ஸ் கால்பந்து கழகத்தை பெனால்டியில் 3-1 என வெற்றிகொண்டது. இரண்டாம் காலிறுதியில் நியூ ஸ்டார் அணி புளூ ஈகல்ஸ் அணியை 2-1 என வெற்றிகொண்டது. எனினும், நியூ ஸ்டார் அணி போலி ஆவணம் தயாரித்து வீரர் ஒருவரை களமிறக்கியதால் அவ்வணியின் வெற்றி புளூ ஈகல்ஸ் அணிக்கு வழங்கப்பட்டது. 

மூன்றாவது காலிறுதியில் கொழும்பு கால்பந்து கழகம் 3-0 என இலங்கை பொலிஸ் விளையாட்டு கழகத்தை வீழ்த்த, இறுதியாக நடந்த போட்டியில் செரண்டிப் கால்பந்து கழகத்தை 5-3 என ரெட் ஸ்டார்ஸ் கால்பந்து கழகம் வெற்றிகொண்டது. 

இந்நிலையில், நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டிகள் அனைத்தும் சுகததாச அரங்கில் இடம்பெறும். அரையிறுதி போட்டிகள் வியாழக்கிழமையும் (27), இறுதிப் போட்டி செப்டம்பர் மாதம் இரண்டாம் திகதியும் இடம்பெறும். 

முதல் அரையிறுதி – மாலை 4.30 மணி

ஜாவா லேன் வி.க எதிர் புளூ ஈகல்ஸ் வி.க 

இரண்டாம் அரையிறுதி – இரவு 7.30 மணி

கொழும்பு கா.க எதிர் ரெட் ஸ்டார்ஸ் கா.க 

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<